Ad Widget

கருணாவை கூட்டமைப்பில் இணைப்பது என்பது சாத்தியப்படாத விடயமாகும்- சிவஞானம்

விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணாவை தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைப்பது என்பது சாத்தியப்படாத ஒரு விடயம் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சிவஞானம் தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதாவது நேற்றைய தினம், கிளிநொச்சியில் ஊடகவியலாளர்களை சந்தித்த விநாயகமூர்த்தி முரளிதரன்,...

யாழ்.பல்கலைக்கழகத்தில் வகுப்புத் தடை விதிக்கப்பட்ட மாணவர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டம்

யாழ்.பல்கலைக்கழகத்தில் வகுப்புத் தடை விதிக்கப்பட்ட மாணவர்கள், உணவு தவிர்ப்புப் போராட்டமொன்றை இன்று (திங்கட்கிழமை) முன்னெடுத்துள்ளனர். குறித்த உணவு தவிர்ப்புப் போராட்டம், யாழ்.பல்கலைக்கழக பரமேஸ்வரர் ஆலய நுழைவாயிலில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், தங்களுக்கு விதிக்கப்பட்ட வகுப்புத் தடையை நீக்குமாறு வலியுறுத்தினர். இதன்போது சம்பவ இடத்திற்கு வருகைதந்த கோப்பாய் பொலிஸார் போராட்டத்தை கைவிடுமாறும், இந்த விடயத்தை...
Ad Widget

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் விசேட தீர்மானம்!

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த நாட்டின் ஏனைய பிரதேசங்களில் உள்ள அரச பாடசாலைகளின் தரம் 11 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கும் போதே கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில்...

தமிழீழம் இனி சாத்தியமில்லை; வடக்கிலும் சேவை செய்ய களமிறங்குகிறேன்; கருணா

தற்போதைய உலக அரங்கில் தனிநாடு என்பது சாத்தியமில்லை. இருந்தாலும், தமிழ் மக்கள் தமது அபிலாசைகளை பூர்த்தி செய்து சுதந்திரமாக வாழ வேண்டும். இதை நிறைவேற்ற தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக பயணிக்க முன்வர வேண்டும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். நேற்று (3) கிளிநொச்சியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை...

தடுப்பூசி கிடைக்க எவ்வளவு காலம் எடுக்குமென உறுதியாகக் கூற முடியாது; அதுவரை யாருக்கும் எங்கும் தொற்று ஏற்பட வாய்ப்புண்டு – மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்

“கோவிட் – 19 தொற்று நோயால் இருண்ட பயணத்தில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகள் ஒளிக்கீற்றுக்களாக தெரிகின்றன. இந்தப் பேரவலத்திலிருந்து இவை மக்களை மீட்டெடுக்கும் என்கின்ற நம்பிக்கை பிறந்திருக்கின்றது. ஒரு நாட்டில் கோரோனா தொற்று பரம்பலை முற்றாக நிறுத்த வேண்டுமாயின் அந்த நாட்டு சனத்தொகையின் 70 சதவீதமான மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட வேண்டும். இந்த இலக்கை அடைந்தால்தான்...

தரம் 01 மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு அடுத்த மாதம்

தரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வை அடுத்த மாதம் நடத்துவதற்கு திட்டமிட்டிருப்பதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். குறித்த பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக அவர் கூறினார். எனினும் மேல் மாகாணம் மற்றும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் தற்போதைய சூழ்நிலைகளுக்கு மத்தியில் மறு...

வாக்குறுதியை மீறி அரசாங்கம் செயற்பட முடியாது- சுமந்திரன்

சர்வதேசத்திற்கும், இந்தியாவிற்கும் வழங்கிய வாக்குறுதிகளை மீறிச் செயற்பட முடியாது என்ற உண்மையை இலங்கை அரசாங்கத்துக்கு சொல்லியிருப்பதாக நாடாளுமன்ற. உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜெனிவா விடயங்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான தமிழ் தேசிய கட்சிகளுக்கு இடையிலான ஆலோசனைக் கூட்டம் வவுனியா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் பின்னர் கருத்தத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்....

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மீனவர்கள் இந்திய கடலோரக் காவல்படையால் கைது!

இலங்கையின் வடக்கு பகுதியைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் இந்திய கடலோரகக் காவல்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்கள், மீன் பிடிக்கச் சென்ற படகின் வெளி இணைப்பு இயந்திரம் பழுதடைந்த நிலையில் திசைமாறி இந்தியாவின் புஸ்பவனம் கடற்பகுதிக்குச் சென்றிருந்த நிலையில் அவர்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை கைதாகியுள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட மூவரிடமும் கடலோர காவல்படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்....

அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பாக சுரேன் ராகவன் தெரிவித்துள்ள கருத்து

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை பொறுத்தவரை நல்லதொரு தீர்வு நிச்சயம் எட்டப்படுமென நம்புவதாக வடக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். அரச நாளிதழொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சுரேன் ராகவன் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழ் அரசியல் கைதிகள் விடயம் பற்றி நான் அரசியலுக்கு வருவதற்கு முன்னரும் கதைத்திருக்கின்றேன்...

இந்த வருடத்தில் ஏழு மாவட்டங்களில் எந்தவொரு கொரோனா தொற்றாளர்களும் பதிவாகவில்லை

நாட்டின் ஏழு மாவட்டங்களில் கடந்த 3 தினங்களில் எந்தவொரு கொரோனா தொற்றாளர்களும் பதிவாகவில்லை என கொவிட்19 தொற்று பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, பதுளை, யாழ்ப்பாணம், கேகாலை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலேயே குறித்த தினங்களில் எந்தவொரு கொரோனா தொற்றாளர்களும் பதிவாகவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மட்டக்களப்பு,...