. January 1, 2021 – Jaffna Journal

விசித்திரமான அழைப்புக்கள் தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!!

ஏதேனும் பரிசுப் பொருள் அல்லது பணத்தொகையொன்றை வெற்றி பெற்றிருப்பதாக தொலைபேசி மற்றும் சமூக வலைத்தளங்களினூடாக கிடைக்கின்ற போலி தகவல்கள் குறித்து பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பரிசுப் பொருளைப் பெற்றுக் கொள்வதற்காக குறிப்பிட்ட தொகை பணத்தை வங்கியில்... Read more »

பைசர் தடுப்பு மருந்துகளை அவசரகால பயன்பாட்டுக்கு உபயோகிக்க WHO அனுமதி

கொரோனா வைரசுக்கு எதிரான பைசர் தடுப்பு மருந்துகளை அவசரகால பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தி கொள்ள உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதன்பின் உலக நாடுகளுக்கு பாதிப்புகள்... Read more »

புதைக்கப்பட்ட நிலையில் சிசுவின் சடலம் மீட்பு – அரியாலையில் சம்பவம்

இளம் பெண் ஒருவருக்குப் பிறந்த சிசுவை மண்ணுக்குள் புதைத்தமை தொடர்பில் சம்பவ இடத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அரியாலை, புங்கங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றின் வளாகத்திலிருந்து சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 24 வயதுடைய திருமணமாகாத பெண் ஒருவர் குருதிப்போக்குக் காரணமாக யாழ்ப்பாணம்... Read more »

வாகனம் வேண்டாம்; ஊதியம், எரிபொருள் கொடுப்பனவுகள் பொதுப் பணிகளுக்கு – முதல்வர் மணிவண்ணன்

மாநகர முதல்வருக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாகனம் தேவையில்லை என்று யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன், சபையின் ஆணையாளருக்கு அறிவித்துள்ளார். அத்தோடு தனது மாதாந்த ஊதியம், எரிபொருள் கொடுப்பனவை வழங்குமாறு கேட்டுள்ள அவர், அதனை சபையின் பொதுப் பணிகளுக்கு செலவிட திட்டங்களை வகுக்குமாறு கேட்டுள்ளார். தனது... Read more »

ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பில் நல்லூரான் பதியில் தீபம் ஏற்றி வழிபாடு

2021ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கும் முகமாக நல்லூர் கந்தசுவாமி ஆலய தேரடியில் நள்ளிரவு 12 மணிக்கு தீபங்கள் ஏற்றப்பட்டன. 2021ஆம் ஆண்டில் உலக மக்கள் அனைவரும் நோய்த் தொற்றின்றி சாந்தியும் சமாதானத்துடனும் வாழவேண்டும் என்று சிகிச்செ தீபங்கள் ஏற்றி நல்லூரானை வழிபட்டனர். படங்கள்... Read more »

25 மாவட்டங்களுக்கும் 25 சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள்!!

நாட்டில் கொவிட்-19 பரவுவதை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டு, நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் 25 சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொவிட்-19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வாவின் உத்தரவின் பேரில் இந்த நியமனங்கள்... Read more »

மருதனார்மடம் கொரோனா கொத்தணி: தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு!

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடங்களில்நேற்று (வியாழக்கிழமை) 607 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், உடுவிலில் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு... Read more »

மக்கள் ஆணைக்கும் எதிராக அரசாங்கம் ஒருபோதும் செயற்படாது- ஜனாதிபதி

மக்கள் ஆணைக்கும் எதிராக அரசாங்கம் ஒருபோதும் செயற்படாது என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 2021 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “புத்தாண்டின் விடியல்,... Read more »

சுமந்திரனின் குற்றச்சாட்டுக்கு இரண்டாம் திகதிக்குப் பின்னர் பதில்- மாவை

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் தன்மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து எதிர்வரும் இரண்டாம் திகதிக்குப் பின்னர் பதிலளிக்கவுள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். யாழ். மாநகர சபையின் ஆட்சியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இழந்தமைக்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவின் செயற்பாடுகளே காரணமென... Read more »