. January 2021 – Jaffna Journal

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி: பெயர் பலகையில் தமிழை முன்னுரிமையாக்கும் பணி முன்னெடுப்பு!

யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையத்தின் தரிப்பிடங்களுக்கான பலகைகளில் தமிழ் மொழியை முன்னுரிமையாக மாற்றும் பணி மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ். மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணனின் பணிப்புரைக்கு அமைய உள்ளூர் அச்சக நிறுவனம் ஒன்றின் ஊடாக தரிப்பிடப் பலகைகள் சீரமைக்கப்படுகின்றன. இதன்படி, சீரமைப்புச் செய்யப்பட்ட... Read more »

யாழ் போதனா வைத்தியசாலையில் உயர் குருதி அமுக்க சிகிச்சை நிலையம் ஆரம்பிக்கப்பட்டது!!

யாழ்ப்பாணம் உயர் குருதி அமுக்க சிகிச்சை நிலையம் போதனா வைத்தியசாலையில் இன்று திறந்துவைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விக்டோரியா வீதியில் உள்ள புதிய கிளினிக் கட்டடத் தொகுதியில் இந்த சிகிச்சை நிலையம் இன்று (ஜன.29) வெள்ளிக்கிழமை நண்பகல் திறந்து வைக்கபட்டது. இருதய சிகிச்சை வல்லுநர்... Read more »

மாவட்ட பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றுவது ஜனநாயக விரோதமானது – சி.வி.கே.சிவஞானம்

யாழ்.மாவட்ட பாடசாலைகள் தேசியப் பாடசாலைகள் ஆக்கப்படுதல் ஜனநாயக விரோதமானது எனவே இச்செயற்பாடு நிறுத்தப்படவேண்டும் என வடக்குமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் வடக்குமாகாண ஆளுநரிடம் எழுத்து மூலம் கோரியுள்ளார். இது தொடர்பில் அவர் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாண மாவட்டத்தின் பத்து பிரதான பாடசாலைகள்... Read more »

யாழ்ப்பாணத்துக்கும் வந்துவிட்டது கொரோனா தடுப்பூசி!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதனா வைத்தியசாலை உள்ளிட்ட சுகாதாரத் துறையினருக்கு கொவிட்-19 தடுப்பூசி மருந்து ஏற்றும் பணி நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இந்நிலையில், யாழ். போதனா வைத்தியசாலை மருத்துவ வல்லுநர்கள், மருத்துவர், தாதியர்கள், மருத்துவ சேவையாளர்கள் மற்றும்... Read more »

சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும் மாத்தளைமற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த... Read more »

ஆறு வைத்தியசாலைகளில் இன்றைய தினம் தடுப்பூசிகள் ஏற்றப்படும்

இந்தியாவில் இருந்து நேற்றை தினம் கொண்டுவரப்பட்ட ஆக்ஸ்போர்ட் -அஸ்ட்ரசெனிகா கொவிட் -19 தடுப்பூசிகளை இன்றைய தினம் ஆறு வைத்தியசாலைகளில் ஏற்றப்படவுள்ளது. அடுத்த நான்கு நாட்களுக்குள் ஐந்து இலட்சம் தடுப்பூசிகளையும் பயன்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். தடுப்பூசிகளின் தரம்... Read more »

மதத் தலைவர்களின் ஆசியோடு யாழில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவேன் – யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி

மதத் தலைவர்களின் ஆசியோடு யாழில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுப்பதாக யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தெரிவித்தார் நேற்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அவர் பின்னர் ஊடகங்களுக்குகருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு... Read more »

ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் பவித்ரா வன்னியராச்சி!

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி, அங்கொடையில் உள்ள தொற்று நோய்கள் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் நேற்று (வியாழக்கிழமை) அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹிக்கடுவையில் உள்ள சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று காலை கொட்டலவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இருப்பினும், வருக்கு... Read more »

இலங்கை மீதான கொரோனாவின் தாக்கம் ; இன்றுடன் ஒருவருடம் நிறைவு!!

இலங்கையில் முதலாவது கொரோனா நோயாளர் அடையாளம் காணப்பட்டு, இன்றுடன் ஒருவருடம் பூர்த்தியாகியுள்ளது. நாட்டில் கடந்த 2020 ஜனவரி 27 ஆம் திகதி சீனாவின் ஹூபே மாகாணத்தைச் சேர்ந்த 44 வயதான பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது. இலங்கையில் பதிவான முதல் கொரோனா... Read more »

வெடுக்குநாறி மலை ஆலய நிர்வாகிகள் பிணையில் விடுவிப்பு!

வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஷ்வர ஆலயத்தின் தலைவர், நிர்வாகி மற்றும் பூசகர் ஆகியோர் தொல்லியல் சின்னங்களுக்கு சிதைவை ஏற்படுத்தினர் என்ற குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கபட்ட நிலையில் இன்று முன்னைய பிணையில் விடுவிக்கப்பட்டனர். ஆலயத்துக்குச் செல்லும் ஏணியை சேதப்படுத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களை... Read more »

வடக்கு சுகாதாரத் துறையில் 10 ஆயிரத்து 400 பேருக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் தேவை- சுகாதார அமைச்சிடம் கோரிக்கை

வடக்கு மாகாணத்தில் மருத்துவர்கள், தாதியர்கள் உள்பட்ட சுகாதாரத் துறையினருக்கு வழங்க 10 ஆயிரத்து 400 பேருக்கு கோவிட் -19 தடுப்பூசி டோஸ்கள் தேவை என கோரப்பட்டுள்ளது. இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். முதல் கட்டமாக சுகாதாரத் துறையினருக்கு... Read more »

யாழ்ப்பாணம் மற்றும் கண்டியிலும் மேம்பாலங்களை அமைக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம் – கிளாலி மற்றும் கண்டி – கெட்டம்பே ஆகிய பகுதிகளில் இரண்டு மேம்பாலங்கள் அமைக்கப்படவிருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். வெளிவட்ட பெருந்தெரு அத்துருகிரியவுடன் தொடர்புபடும் வகையில் இராஜகிரிய ஊடாக களனி புதிய பாலம் வரை கொங்கிரிட் தூண்களைக் கொண்டு... Read more »

யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையம் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது

யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையம் பொதுமக்களின் பாவனைக்காக இன்று (புதன்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. நகர அபிவிருத்தி, கரையோர பாதுகாப்பு, கழிவுப்பொருள் அகற்றுகை மற்றும் சமுதாய தூய்மைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா பணிப்பிற்கமைய, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அனுசரணையில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாண நெடுந்தூர... Read more »

சீனாவில் இருந்தும் கொரோனா தடுப்பூசிகளைப் பெறவுள்ள இலங்கை!

சீனாவின் கொவிட்-19 தடுப்பூசியான சினோபார்ம் குப்பிகளை இலங்கை பெறவுள்ளதாக ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவின் வேண்டுகோளின் பேரில் சீனா 3 இலட்சம் குப்பிகளை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகள்... Read more »

நெடுந்தீவு கடலில் கொல்லப்பட்ட இந்திய மீனவர்கள் நால்வருக்கும் யாழ்.பல்கலையில் அஞ்சலி

நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படையின் படகுடன் மோதுண்டு மீன்பிடிப் படகு விபத்துக்குள்ளாகியதில் கடலில் மூழ்கி உயிரிழந்த இந்திய மீனவர்கள் நால்வருக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பபாணப் பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக வளாகத்தில் இந்த அஞ்சலி நிகழ்வு இன்று முற்பகல் 10.15... Read more »

இராணுவ முகாமிற்குள் மாடுகள் நுழைந்ததாம்; உரிமையாளர் மீது கொடூர தாக்குதல்!!

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகம் அமைந்துள்ள கேப்பாபுலவு இராணுவ முகாமுக்குள் கால்நடைகள் உள்நுழைந்தமைக்காக கேப்பாபுலவு மாதிரி கிராமத்தை சேர்ந்த மாட்டின் உரிமையாளர் இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு முள்ளியவளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (25) மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து... Read more »

வடக்கில் 18 பேருக்கு கோரோனா தோற்று; ஒருவர் சுதுமலையைச் சேர்ந்தவர்

வடக்கு மாகாணத்தில் மேலும் 18 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 3 பொலிஸார் உள்பட 15 பேர் மன்னார் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கண்டறியப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.... Read more »

யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவ விடுதியில் ஒருவருக்கு கோரோனா; மருத்துவர்கள், தாதியர்கள் தனிமைப்படுத்தல்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவ விடுதி 3இல் சிகிச்சை பெற்றவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அந்த விடுதியின் மருத்துவர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து வருகை தந்த நோயாளி ஒருவருக்கே கோரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது என்று வைத்தியசாலைப்... Read more »

மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவோருக்கு முக்கிய அறிவிப்பு!!

மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவோருக்கு எழுமாறாக பரிசோதனை முன்னெடுக்கப்படும் பொலிஸார் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துளளார். குறித்த நடவடிக்கை எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக அஜித் ரோஹன தெரிவித்தார். இதேவேளை... Read more »

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க உறவுகள் அழைப்பு!

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க முன்வருமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஊடக மன்றத்தில் நடைபெற்ற சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர்கள், அன்றைய தினம் எதிர்ப்பு பேரணி ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர். அந்தவகையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம்... Read more »