Ad Widget

முதலாவது கொரோனா தடுப்பூசி உலகிற்கு அறிமுகம்!!

பைஸர் - பயோ என் டெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு பிரித்தானிய அனுமதி வழங்கியுள்ளது. அதனடிப்படையில் குறித்த தடுப்பூசிக்கு அனுமதி வழங்கிய முதல் நாடாக பிரித்தானியாவாகும். குறித்த தடுப்பூசி அடுத்த வாரம் முதல் அந்நாட்டில் பயன்படுத்த உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக ஏதேனும் அவசர தேவைகள் காணப்படுமாயின் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி 117 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
Ad Widget

புரவி சூறாவளி இன்று இரவு 7.10 மணியளவில் நாட்டை கடக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்

புரவி சூறாவளி திருகோணமலை மற்றும் பருத்தித்துறைக்கிடையிலான முல்லைத்தீவினை அண்மித்த கடற்பரப்பில் இன்று இரவு 7.10 இற்கு நாட்டிற்குள் பிரவேசிக்கும் என எதிர்பார்த்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்போது கிழக்கு, வடக்கு, வடமத்திய, வடமேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. சில...

வடமாகாண பாடசாலைகளுக்கு வியாழன் வெள்ளி விடுமுறை!!

வடக்கு மாகாணத்தில் 4 மாவட்டங்களில் நாளை வியாழக்கிழமையும் மறுநாள் வெள்ளிக்கிழமையும் பாடசாலைகள் மூடப்படும் என்று மாகாண ஆளுநர், திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் அறிவித்துள்ளார். சீரற்ற காலநிலை காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டப் பாடசாலைகளுக்கு இரண்டு நாள்கள்...

போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த காரைநகர் வாசிக்கு கோரோனா தொற்று இல்லை

காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவர் சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் உயிரிழந்தவருக்கு கோரோனா வைரஸ் தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். அதனால் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் அவரது சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். காரைநகரில் கோரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட நிலையில்...

கொரோனா அச்சுறுத்தல்: யாழில் 1010 குடும்பங்களைச் சேர்ந்த 2220பேர் சுயதனிமைப்படுத்தலில்

யாழ்.மாவட்டத்தில் 1010 குடும்பங்களைச் சேர்ந்த 2220 பேர், சுயதனிமைப்படுத்தலில் உள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் அரசாங்க அதிபர் க.மகேசன் மேலும் கூறியுள்ளதாவது, “யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று வரை 22பேர் கொரோனா...

இலங்கையை இன்று கடக்கவுள்ள சூறாவளி – மக்களுக்கு எச்சரிக்கை!

தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த ஆழமான தாழமுக்கமானது ஒரு சூறாவளியாக விருத்தியடைந்து பெரும்பாலும் இலங்கையைக் கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் மழையுடனான வானிலையும் காற்று நிலைமையும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த தாழமுக்கம் ஒரு...

நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்டவரை மீள அதே குற்றத்திற்காக கைது செய்த பொலிஸார்!

போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில், நீதிமன்றினால் தண்டம் அறவிடப்பட்டு விடுவிக்கப்பட்ட முதியவரை பொலிஸார் மீள கைது செய்து பொலிஸ் நிலையத்தில் ஒரு நாள் தடுத்து வைத்து நீதிமன்றில் மீள முற்படுத்தியுள்ளனர். இதன்போது முதியவரின் குடும்பத்தினரால், அவர் ஏற்கனவே நீதிமன்றில் குறித்த குற்றத்திற்காக தண்டப்பணம் செலுத்தியமைக்கான ஆவணங்களை சமர்ப்பித்த போது, பொலிஸார் தாம் தவறுதலாக கைது செய்து...

இராணுவத்தில் இணைவதன் மூலம் நீங்கள் உங்கள் எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்ள முடியும் – யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி

யாழ்ப்பாண மாவட்டத்தினை அபிவிருத்தி செய்வதற்கு தமிழ் இளைஞர்கள் ராணுவத்தில் இணைய முன்வர வேண்டும் என யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார தெரிவித்துள்ளார். இராணுவத்திற்கு இளைஞர் யுவதிகளை இணைக்கும் தேசிய ரீதியான வேலைத்திட்டத்தில் யாழ் மாவட்டத்தில் இளைஞர்களை இராணுவத்தில் இணைப்பது தொடர்பாக விளக்கம் அளிக்கும் விசேட கூட்டம் யாழ் மாவட்ட...

ஓரினச்சேர்க்கையால் அதிகரிக்கும் எயிட்ஸ்- இளைஞர்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

வவுனியாவில் ஓரினச்சேர்க்கையால் எயிட்ஸ் தொற்று அதிகரித்து வருகின்றமையினால், இளைஞர்களை அவதானமாக இருக்குமாறு வவுனியா மாவட்ட பாலியல் நோய் தடுப்பு சிகிச்சை பிரிவு பொறுப்பதிகாரி வைத்தியர் கே.சந்திரகுமார் தெரிவித்திருந்தார். வவுனியா வைத்தியாசாலையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். கே.சந்திரகுமார் மேலும் கூறியுள்ளதாவது, “உலக எய்ட்ஸ் தினம் ஒவ்வொரு டிசம்பர் மாதம் முதலாம்...

காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழப்பு!!

காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவர் சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். காரைநகரில் கோரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவரது வீட்டுக்கு அண்மையில் வசித்த வந்த 60 வயதுடைய வயோதிபரே உயிரிழந்துள்ளார். வயோதிபர் கடந்த சனிக்கிழமை முதல் வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மூச்சுத் திணறல் காரணமாக அவர்...

சாதாரண தரப் பரீட்சை திட்டமிட்ட திகதிகளில் நடைபெறாது – கல்வி அமைச்சர்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முன்னர் தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறாது என்று கல்வி அமைச்சர், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார். புதிய திகதி பரீட்சைக்கு 6 வாரங்களுக்கு முன் அறிவிக்கப்படும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். 2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை 2021 ஜனவரி 18ஆம்...

இலங்கை உள்நாட்டு போர்: அதிரடிப்படைக்கு பயிற்சி கொடுத்த பிரிட்டிஷ் கூலிப்படையிடம் விசாரணை!!

இலங்கை உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட பிரிட்டிஷ் கூலிப்படையினர் போர்க் குற்றங்களில் ஈடுபட்டது தொடர்பான குற்றச்சாட்டுகளை லண்டன் பெருநகர காவல்துறையினர் (Metropolitan Police) விசாரிக்கத் தொடங்கியிருக்கின்றனர். 1980களில் தமிழ் பிரிவினைவாதிகளை எதிர்த்துப் போராடுவதற்கு, இலங்கை காவல்துறையினரில் ஒரு பிரிவினருக்கு பயிற்சி கொடுத்தது தனியார் பாதுகாப்பு நிறுவனமான கீனி மீனி சர்வீசஸ் (Keenie Meenie Services - KMS)....

சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு- பருத்தித்துறையில் நிகழ்ந்த சோகம்!

யன்னல் கதவின் பிணைச்சலில் கழுத்துப் பட்டியைக் கட்டி கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பருத்தித்துறையில் நிகழ்ந்துள்ளது. சிறுமி விளையாட்டாக தனது தமையனின் கழுத்துப் பட்டியை யன்னில் கட்டி இவ்வாறு கழுத்தில் சுருக்கிட்டுள்ளார் என்று திடீர் இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம், நேற்றையதினம் (திங்கட்கிழமை) முற்பகல் இடம்பெற்றது என பொலிஸார் தெரிவித்தனர்....

காணாமற்போயிருந்த இளைஞன் கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் மீட்பு!!

வடமராட்சி- பருத்தித்துறை பகுதியில் காணாமற்போயிருந்த இளைஞர் ஒருவர், கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் வீதியில் மீட்கப்பட்டு மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம் (திங்கட்கிழமை) இரவு, 11மணியளவில் பருத்தித்துறை வல்புரம் குறிச்சிப் பகுதியில் அவர் மீட்கப்பட்டார் என்று வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது. பருத்தித்துறை- வல்லிபுரக்குறிச்சி, சிங்கைநகர் பகுதியிலுள்ள குறித்த வீட்டாருக்கு சொந்தாமாக பிறிதொரு இடத்தில்...

வரலாற்றில் முதல் முறையாக இணைய தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கௌரவ பிரதமர் பங்கேற்பு!

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக இணைய தொழில்நுட்பம் ஊடாக இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பங்கேற்றார். நிலவும் கொவிட்-19 தொற்று நிலைமையில் அமைச்சரவை கூட்டத்தின் நடைமுறை குறித்து எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு மத்தியில், அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் யோசனைக்கேற்ப இந்த அமைச்சரவை கூட்டம் இணைய தொழில்நுட்பத்தின் ஊடாக நடத்தப்பட்டது....

தென்னிந்தியாவில் உள்ள ஈழ அகதிகளை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை – அரசாங்கம்

தென்னிந்தியாவில் உள்ள ஈழ அகதிகளை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஆலோசனைக் குழு கூட்டத்தின்போதே அமைச்சர் தினேஸ் குணவர்தன இதனை தெரிவித்தார். இந்த கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன் உள்ளிட்டவர்கள் தென்னிந்தியாவில், ஒரு இலட்சத்துக்கும்...

மதுபோதையில் நாக பாம்புடன் விளையாடியவர் உயிரிழப்பு!!

வல்வெட்டித்துறையில் மதுபோதையில் நாக பாம்புடன் விளையாடியவர் அது தீண்டியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த அவர், நாக பாம்பைப் பிடித்து விளையாடியுள்ளார். சில நிமிடங்கள் கழித்து அதனை அயலிலுள்ள வளவில் வீசிவிட்டு தூக்கத்துக்குச் சென்றுள்ளார். அதனைத் தொடர்ந்து தூக்கத்தால் திடீரென எழுந்த அந்த நபர், நெஞ்சு வலிப்பதால் குடிதண்ணீர் கேட்டுள்ளார்....

பாதை இல்லாமல் பரிதவிக்கும் யாழ் வளிமண்டலவியல் திணைக்களம்!

யாழ்ப்பாணத்திலுள்ள வளிமண்டலவியல் திணைக்களத்துக்குச் சென்று வருவதற்கு, உகந்த பாதை வசதிகள் இன்மையால் அசௌகரியமான நிலை காணப்படுகிறது. இயற்கை அனர்த்தம், புயல் அபாயம் போன்ற இடர்காலங்களின்போது, பொது மக்களுக்குத் தேவையான அவதானிப்புத் தகவல்களையும், தகுந்த முன்னெச்சரிக்கையையும் வழங்குவதில் யாழ்ப்பாணம்- திருநெல்வேலியில் அமைந்துள்ள யாழ்.மாவட்ட வளிமண்டலவியல் திணைக்களம் பெரும் பங்காற்றி வருக்கின்றது. ஆனால், அந்தத் திணைக்களத்துக்குச் செல்வதற்கு உகந்த...