Ad Widget

நீதிமன்ற அனுமதியுடன் பாழடைந்த கிணற்றிலிருந்து மனித உடற்பாகங்கள் மீட்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவல்காடு பகுதியில் நேற்று (30) இனம் காணப்பட்ட மனித உடல் பாகங்களை மீட்கும் பணிகள் நீதிமன்ற அனுமதிக்கு அமைவாக இன்று (31) இடம்பெற்றது. முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தின் பதில் நீதிபதி ந.சுதர்சன் முன்னிலையில் குறித்த அகழ்வு மற்றும் மீட்பு பணிகள் இடம்பெற்றன. குறித்த இடத்தில் தடயவியல் பொலிஸார் மற்றும்...

முல்லைத்தீவில் தனியார் காணியொன்றில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு

முல்லைத்தீவு – முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவல்காடு பிரதேசத்தில் உள்ள தனியாரின் காணியொன்றில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதிக்கு கால்நடைகளை பார்வையிடுவதற்காகச் சென்ற பெண்ணொருவர், அக்காணியில் அமைந்துள்ள மண் கிணற்றில் குறித்த எச்சங்கள் இருப்பதை அவதானித்து அப்பகுதி கிராம சேவையாளருக்கு தகவல் வழங்கியுள்ளார். இதனையடுத்து, குறித்த பகுதிக்கு வருகை தந்த கிராம அலுவலகர்...
Ad Widget

யாழில் 5 ஆயிரத்து 731 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் – அரசாங்க அதிபர்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 731 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார். யாழ். மாவட்டத்தில் தற்போதைய கொரோனா நிலைமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். யாழ். மாவட்டத்தில் இதுரையான காலப்பகுதியில் 149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில், 26 பேர் பூரண குணமடைந்து...

உருமாறிய கொரோனா வைரஸ் இலங்கைக்குள் வந்துள்ளதா?

உலக நாடுகள் பலவற்றில் தற்பொழுது பதிவாகி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் இலங்கைக்குள் வந்துள்ளதா? என்பதை கண்டறிவதில் விசேட பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவம் மற்றும் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் பிரிவு (The Department of Immunology and Molecular Medicine and Allergy, Immunology and...

தொற்றாளர்கள் தொடர்ச்சியாக அடையாளம் காணப்படுவதால் மருதனார்மடம் கடைகளைத் திறப்பது உடனடிச் சாத்தியமில்லை!!

மருதனார்மடம் கோரோனா வைரஸ் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் 14 நாள்கள் சுயதனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கான பிசிஆர் பரிசோதனைகள் நிறைவடைந்த பின்னரே பொதுச் சந்தைத் தொகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதியளிக்க முடியும் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். மருதனார்மடம் கொத்தணியுடன் தொடர்புடையவர்களுக்கு கடந்த சில நாள்களாக முன்னெடுக்கப்படும் பிசிஆர் பரிசோதனையில்...

புதுக்குடியிருப்பு வியாபாரியின் மனைவிக்கும் தொற்று

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சந்தைக்கு மரக்கறி விநியோகிக்கும் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் அவரது மனைவிக்கும் தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பொதுச் சந்தை மூடப்பட்டுள்ள நிலையில் சுகாதார மருத்துவ அதிகாரியின் பணிப்பில் கடந்த வாரம் 12 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட எழுமாறான பரிசோதனையில் ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. தம்புள்ளை மொத்த விற்பனை...

மருதனார்மடம் கொரோனா கொத்தணியில் மேலும் தொற்றாளர்கள்!

மருதனார்மடம் கொரோனா கொத்தணியில் மேலும் மூவருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று (புதன்கிழமை) 130 பேருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே மூவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கும் சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ...

மாவையின் தன்னிச்சையான செயற்பாட்டினால் யாழ். மாநகர சபையை இழந்துள்ளோம் – சுமந்திரன்

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் தன்னிச்சையான, ஜனநாயக விரோத மற்றும் சட்டவிரோத செயற்பாட்டினால் போட்டியின்றி வென்றிருக்க வேண்டிய யாழ். மாநகர சபை முதல்வர் பதவியை இழந்திருக்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற...

5 கொரோனா நோயாளிகள் தப்பியோட்டம்

கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த 05 பேர் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலன்னறுவை-கல்லேல பகுதியில் உள்ள கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கொரோனா தொற்றாளர்களே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து, அவர்களை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.