Ad Widget

புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளில் ஒளிப்படம், சொற்களை வெளியிட்ட பத்திரிகை மீது நீதிமன்றில் வழக்கு

இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளன்று அவரது ஒளிப்படத்தையும் சொற்களையும் வெளியிட்டமை தொடர்பில் யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்டு இயங்கும் பத்திரிகையான “உதயன்” மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இந்த வழக்கு மார்ச் 21ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய...

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் விடுத்துள்ள கோரிக்கை!

பண்டிகை காலத்தில் பொதுமக்கள் அநாவசியமான நடமாட்டங்களை தவிர்த்து சுகாதார பிரிவினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ் மாவட்டத்தில் தற்போதுள்ள கொரோனா நிலைமை தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். தற்போது யாழ் குடாநாட்டில் கொரோனா தொற்று பரவுகின்ற வீதம் சற்று குறைவடைந்துள்ளது. இன்று...
Ad Widget

இலங்கையில் கொரோனாவால் 15 வயது சிறுவன் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 183 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். நாட்டில் மேலும் 2 கொரோனா மரணங்கள் பதிவாகியதைத் தொடர்ந்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி, மஹரகம அபேக்ஸா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த தங்கொடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியமை இனங்காணப்பட்டு...

யாழில் மேலும் அறுவருக்கு கொரோனா உறுதி!!

யாழில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று 412 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் இதில் வடக்கு மாகாணத்தை சேர்ந்த 3 பேருக்கும் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும்...

கொரோனா பரவல் – பொதுமக்களிடம் பொலிஸார் முன்வைத்துள்ள அவசர கோரிக்கை

பண்டிகைக் காலத்தில் முடிந்த அளவுக்கு கொண்டாட்டங்களையும் விருந்துபசாரங்களையும் தவிர்க்குமாறு பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன கேட்டுக்கொண்டுள்ளார். பண்டிகைக் காலத்தில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவுகின்ற அபாயம் அதிகமாக காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். எனவே ஒன்று கூடுவது, உறவினர்களின் வீடுகளுக்குச் செல்வது, விருந்துபசாரங்கள் போன்றவற்றை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என அவர் கோரியுள்ளார். மேலும் கூடுமானவரையில் தனிமைப்படுத்தல் விதிகளை...

தமிழ் அரசியல் கைதிகள் பலருக்குக் கொரோனா – ஐ. நா. உயர்ஸ்தானிகரிடம் கஜேந்திரகுமார் முறையீடு

மகசின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் பலருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். எனினும் அவர்களுக்கு உரிய மருத்துவ வசதிகளோ – உணவு வசதிகளோ ஏற்படுத்திக்கொடுக்கப்படவில்லை என்றும் இதனால் தமிழ் அரசியல் கைதிகள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர் எனவும்...