Ad Widget

யாழ்.பல்கலைக்கழகத்தில் திருவெண்பா ஓதுதல் நிகழ்வு ஆரம்பம்!!

யாழ்.பல்கலைக்கழகத்தில் திருவெண்பா ஓதுதல் நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜாவின் அனுமதியுடன் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஓன்றியத்தன் ஆதரவுடன் கலைப்பீட 40 அணி மாணவர்களினால் திருவெண்பா ஒதுதல் நிகழ்வு இன்று ஆரம்பிக்கபட்டது. இன்றைய கொரோனா கால சூழ்நிலையில் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்து இந்நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், தங்களுடன் அனைத்து மாணவர்களையும் இணைந்து கொள்ளுமாறும் மற்றும்...

கேகாலை நாட்டு வைத்தியரின் கொவிட் தடுப்பு தேசிய ஔடதத்திற்கு ஆயுர்வேத திணைக்களம் அனுமதி

கேகாலை தம்மிக பண்டாரவினால் தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு தேசிய ஔடதத்திற்கு ஆயுர்வேத திணைக்களத்தின் சூத்திர குழு அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனை தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இந்த ஔடதம் ஏற்கனவே தேசிய...
Ad Widget

மேல் மாகாணத்தை முடக்குங்கள் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

இலங்கையில் கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, மேல் மாகாணத்தை முடக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் கொரோனா தொற்றின் மையமாக கொழும்பு மாறிவிட்டது என்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது, எனவே பண்டிகை காலங்களில் கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுக்க குறைந்தபட்சம் ஜனவரி 1 ஆம் திகதி...

யாழ். மாநகர முதல்வர் மற்றும் தவிசாளர் நியமனம் குறித்த வர்த்தமானி வெளியானது!

வடக்கு மாகாணத்தின் இரண்டு உள்ளூராட்சி அதிகாரசபைகளின் புதிய முதல்வர் மற்றும் தவிசாளர் ஆகியோரை தெரிவு செய்வதற்கான கலந்துரையாடல் நாடாத்தப்படும் திகதி குறித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் சட்டத்தின் அடிப்படையில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மரியதாஸ் பற்றிக் டிறஞ்சனினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல்...

முதலாம் தவணக்காக பாடசாலைகள் ஜனவரி 11இல் ஆரம்பம்

கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்கள் உள்பட மேற்கு மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து பாடசாலைகளிலும் 2021 ஜனவரி 11ஆம் திகதி முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் அறிவித்துள்ளார். அன்றிலிருந்து தரம் 1 முதல் தரம் 5 வரையான...

தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்க கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே சரத் வீரசேகர இருக்கிறார்- விக்னேஸ்வரன்

தமிழ் மக்களுக்கு எந்தவிதமான அதிகாரப் பகிர்வும் கொடுத்துவிட கூடாது எனும் நிலைப்பாட்டிலேயே அமைச்சர் சரத் வீரசேகர இருப்பதாக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மாகாண சபை முறைமை தேவையற்றது என அமைச்சர் சரத் வீரசேகர, பல இடங்களில் தெரிவித்து வருகின்ற கருத்து தொடர்பாகநேற்று (திங்கட்கிழமை), க.வி.விக்னேஸ்வரனிடம் யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். குறித்த...

யாழில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

யாழ்ப்பாணத்தில் மேலும் 3பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரித்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்றைய தினம் (திங்கட்கிழமை) 382பேருக்கு பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். அதில் கோப்பாய், ஊர்காவற்துறை மற்றும் இனுவில் பகுதிகளை சேர்ந்தவர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். ஆகவே, பொதுமக்கள் அனைவரும்...

இலங்கையில் கொரோனா தொற்றால் மேலும் ஐவர் உயிரிழப்பு

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் ஐவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதனையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 181 ஆக அதிகரித்துள்ளது. இதேநேரம் நாட்டில் மேலும் 370 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டனர். இதனையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை...

மத்திய அதிகேவக நெடுஞ்சாலை தம்புள்ளை வரை நீட்டிக்கப்படும் – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிச்சயமாக தம்புள்ளை வரை நீட்டிக்கப்படும் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைக்கு அமைய நாடு முழுவதும் பத்து இலட்சம் ரண்பிம காணி உறுதிபத்திரங்களை வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் வடமேல் மாகாணத்திற்கான காணி உறுதிபத்திரங்கள் வழங்கும் நிகழ்வு குருநாகல் ரண்சர மண்டபத்தில் இடம்பெற்ற...