Ad Widget

பஸ் பயணிகள், நடத்துனர்களுக்கான அறிவித்தல்!

பஸ்களில் பயணிக்கும் பயணிகளின் விபரங்களினை நடத்துநர்கள் மற்றும் சாரதிகள் பதிவு செய்து வைத்திருக்க வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன வேண்டுகோள் விடுத்துள்ளனர். பயணிகளின் விலாசம் மற்றும் அடையாள அட்டை இலக்கங்களை நடத்துநர்கள் தம்வசம் வைத்திருக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. பஸ்களில் பயணிக்கும் பயணியொருவருக்கு கொரோனா தொற்று...

இரண்டு வாரங்களுக்கு அவதானம் தேவை!! – யாழில் இராணுவத் தளபதி

எதிர்வரும் இரண்டு வாரங்களிற்கு மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தை மேற்கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இராணுவத் தளபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்... “தமிழ் மக்கள் அதிகமாக வாழ்ந்து வரும் வடபகுதியில் குறிப்பாக யாழில் கொரோனா முதலாவது அலை தாக்கத்தின்...
Ad Widget

நாட்டை மீண்டும் முடக்க வேண்டிய நிலை ஏற்படலாம் – GMOA

மக்கள் பொறுப்பின்றி செயற்பட்டால், மீண்டும் நாடு முழுவதையும் முடக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் இந்த நிலை நீடித்தால் குறிப்பாக கடுமையான நடமாட்டக் கட்டுப்பாடுகள் விதிக்க நேரும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செய்தி தொடர்பாளர் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார். ஒரு பிரதேசம்...

தமிழர்களின் எண்ணங்களையும் உள்வாங்கி புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் – சிறீதரன் எம்.பி

தமிழர்களின் எண்ணங்களையும் உள்வாங்கி புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பும் தமிழர்களின் முன்மொழிவும் எனும் தலைப்பில் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் இணைய வழி மூலமான கலந்துரையாடல் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தலைமையில் நடைபெற்றது. குறித்த...

யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணியினருக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார் அங்கஜன் எம்.பி

நேற்றைய தினம் (16) லங்கா பிரிமியர் லீக் இருபதுக்கு இருபது போட்டித் தொடரின் இறுதிப் போட்டி ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றது. அந்த தொடரில் யாழ்ப்பாணத்தை பிரதிநிதுவப்படுத்தும் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் (Jaffna Stallions) அணி 53 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இறுதி போட்டியில் ஆபார வெற்றி பெற்றது. அந்த அணியின் வெற்றிக்கு வாழ்த்து...

வடமாகாண பொதுச் சந்தைகள் அனைத்தையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு அறிவுறுத்தல்!!

கோவிட் -19 நோய்த் தொற்று நிலமையைக் கருத்திற் கொண்டு வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பொதுச் சந்தைகளையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரனின் ஆலோசனைக்கு அமைய, வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள கோவிட் -19 நிலமையை அடுத்து பொதுச் சந்தைகள்...

தேசிய கல்வியற் கல்லூரி படிப்பை முடித்த ஆசிரிய மாணவர்களின் விவரம் கோரல்!

2016 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் தேசிய கல்வியியற் கல்லூரிகளில் படிப்புகளை முடித்த ஆசிரிய மாணவர்களுக்கு பொருத்தமான ஆசிரியர் நியமனங்கள் வழங்குவதற்காக இணையத்தின் ஊடாக தகவல்களைப் பெறும் திட்டத்தை கல்வி அமைச்சு ஆரம்பித்துள்ளது. அதன்படி, கல்வி அமைச்சுக்கு தகவல்களை வழங்குவதற்கான இறுதித் திகதி வரும் டிசெம்பர் 20ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. https://ncoe.moe.gov.lk/ என்ற இணையதளத்தின் மூலம்...

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு ஹெரோயின் விநியோகம் செய்பவர் சிக்கினார்; பெண் ஒருவரும் தெல்லிப்பழையில் கைது

ஹெரோயின் போதைப்பொருளை கொழும்பிலிருந்து எடுத்து வந்து யாழ்ப்பாணத்தில் விநியோகிக்கும் நபர் காங்கேசன்துறை பிராந்திய மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளார் 200 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் அவர் இன்று காலை நெல்லியடியில் வைத்துக் கைது செய்யப்பட்டார். தெல்லிப்பழை கட்டுவனில் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபடும் 36 வயதுடைய குடும்பப் பெண் ஒருவர் 21 கிராம் போதைப்பொருளுடன்...

வட்டுக்கோட்டை உப்புவயல் குளம் இராணுவத் தளபதியினால் திறந்து வைப்பு!

வட்டுக்கோட்டை- தென்மேற்கு உப்புவயல் குளம் இராணுவ தளபதி சவேந்திர சில்வாவினால் திறந்து வைக்கப்பட்டது. யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியின் வழிகாட்டலில் தியாகி அறக்கொடை நிறுவனத்தினரின் நிதிப்பங்களிப்பில், வட்டுக்கோட்டை தென்மேற்கு உப்புவயல் குளம் புனரமைப்பு செய்யப்பட்டு, இன்றைய தினம் (வியாழக்கிழமை) பொது மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இராணுவத்தினரால் கடந்த மூன்று மாதமாக புனரமைப்பு செய்யப்பட்ட குளத்தினை,...

லங்கா பிரீமியர் லீக் தொடரை வெற்றிகொண்ட ஜஃப்னா ஸ்டேலியன்ஸ் அணிக்கு பிரதமர் வாழ்த்து

இலங்கையில் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றிய ஜஃப்னா ஸ்டேலியன்ஸ் அணிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று(புதன்கிழமை) இரவு வாழ்த்து தெரிவித்துள்ளார். பானுக ராஜபக்ஷ தலைமையில் காலி கிளேடியேட்டர்ஸ் அணியுடன் சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இறுதி போட்டியில், திசர பெரேரா...

நடுத்தர வருமான வீட்டு வசதி திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

நகர் பகுதிகளில் வசிக்கும் வீடற்ற குடும்பங்களுக்கு வீடு வழங்குவதற்கான நடுத்தர வருமான வீட்டு வசதி திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. குறித்த விண்ணப்ப படிவங்களை யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்ட செயலகங்களிலும், யாழ்ப்பாணம், நல்லூர், வடமராட்சி வடக்கு, கரைச்சி, வவுனியா ஆகிய பிரதேச செயலகங்களிலும், உதவி உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும். விண்ணப்பங்களை பூர்த்தி...

தனிப்பட்ட தகவல்களை வழங்க பொதுமக்கள் எப்போதும் தயாராக இருக்கவேண்டும் – பொலிஸ்

கோரோனா தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதில் ஈடுபட்டுள்ள சுகாதார அதிகாரிகள், பொலிஸார் மற்றும் படையினர் கோரும் போது, தனிப்பட்ட தகவல்களை வழங்க எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்று பொது மக்களிடம் பொலிஸ் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது. பொதுமக்கள் தொற்று நோய்களைத் தடுக்கும் சட்டத்திற்கும் கட்டுப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித்...

முதலாவது LPL கிண்ணம் ஜெப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்கு!!

லங்கா பிரிமியர் லீக் இருபதுக்கு இருபது போட்டித் தொடரின் இறுதிப் போட்டி ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றது. இறுதி போட்டியில் ஜெப்னா ஸ்டாலியன்ஸ் மற்றும் கோல் கிளடியேடர்ஸ் அணிகள் மோதி இருந்தன. நாணய சுழற்சியில் ஜெப்னா ஸ்டாலியன்ஸ் அணி வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து. அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய ஜெப்னா...

பண்டிகைக்காலத்தை முன்னிட்டு அனைத்துக் குடும்பங்களுக்கும் ரூபாய் 10,000 – 50,000 வரை சலுகை வட்டியில் கடன் உதவி

ஒவ்வொரு குடும்பத்திற்கும் வரவிருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை காலங்களில் அவர்களின் பல்வேறு தேவைகளை நிறைவு செய்ய சலுகை வட்டி விகிதத்தில் கடன் உதவியை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பை ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இந்தக் கடன் திட்டம் 03 பிரிவுகளின்...

மருதனார்மடம் கொத்தணி – ஏழாலையைச் சேர்ந்த இருவருக்கு தொற்று

மருதனார்மடம் பொதுச் சந்தை கோரோனா வைரஸ் கொத்தணியில் மேலும் 2 பேருக்கு கோவிட் – 19 நோய்த் தொற்று உள்ளமை நேற்று (டிசெ. 16) புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். மருதனார்மடம் பொதுச் சந்தை வியாபாரிகளுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்த ஏழாலையைச் சேர்ந்த 2...

வாழ்வாதாரத்தையும் வருமானத்தையும் மேம்படுத்துவதற்கு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் 10 ஆயிரம் மில்லியன் ரூபாய்

வாழ்வாதாரத்தையும் வருமானத்தையும் மேம்படுத்துவதில் நாட்டின் பொருளாதாரம் தங்கியுள்ளமையால் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அதற்காக 10 ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் திரு.பசில் ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். அனுராதபுரம் வட மத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் நேற்று 2020.12.16 இடம்பெற்ற 'கிராமத்துடன் கலந்துரையாடல்...

யாழில் மேலும் 08 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

யாழ். மருத்துவபீட ஆய்வுகூடத்தில் சங்கானை சந்தை வர்த்தகர்கள் 100 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்படி சங்கானையில் 4 பேருக்கும் உடுவில், பண்டத்தரிப்பு, மானிப்பாய் மற்றும் வடலியடைப்பு பகுதியைச் சேர்ந்த தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கா அல்லது கிறிஸ்மஸ் கொண்டாட்டமா? – அடுத்த வாரம் அறிவிப்பு!

நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நிலைமை தொடர்பாக அடுத்த வாரம் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவல் தொடர்பாக எடுக்க வேண்டிய முடிவுகள் எதிர்வரும் டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மகாஜனாக் கல்லூரி மாணவிகள் இருவருக்கு கொரோனா தொற்று!

யாழ் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி மாணவிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருதனார்மடம் சந்தையுடன் தொடர்பில் இருந்த நிலையில் இவர்களின் பெற்றோருக்கும் நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் கல்லூரி மாணவர்கள் 80 பேர் மற்றும் ஆசிரியர்கள் இரு வாரங்களுக்கு சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன்...

தடுப்பூசியை நாட்டிற்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பதாக அரசாங்கம் அறிவிப்பு

கொரோனா வைரஸ் தடுப்பூசி உலக சுகாதார ஸ்தாபனத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர் நாட்டிற்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மேலும் பைசர் பயோஎன்டெக் தடுப்பூசியினை பெற்றுக்கொண்ட இருவர் உயிரிழந்துள்ளனர் நிலையில் கொரோனா தடுப்பூசி தொடர்பாக அவதானத்துடன் செயற்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். நாட்டில்...
Loading posts...

All posts loaded

No more posts