Ad Widget

முச்சக்கர வண்டியை வாடகைக்கு அமர்த்திவிட்டு சாரதியை தாக்கிய விசமிகள்

முச்சக்கர வண்டியை வாடகைக்கு அமர்த்திவிட்டு அதன் சாரதியை தாக்கிய சம்பவம் ஒன்று வவுனியா பூந்தோட்டம் பகுதியில் நேற்று(வியாழக்கிழமை) இரவு இடம்பெற்றது. குறித்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது, வவுனியா நகர தரிப்பிடத்தில் நின்றிருந்த முச்சக்கர வண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்திய நபர் ஒருவர் பல இடங்களுக்கு சென்றதுடன், மேலும் ஒரு நபரையும் அழைத்துக்கொண்டு பூந்தோட்டம் அகத்தியர்...

ஜனவரி மாதம் முன்பள்ளிகளை மீள ஆரம்பிக்க தீர்மானம்!

எதிர்வரும் ஜனவரி மாதம் முன்பள்ளிகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக்கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விச் சேவை இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த இதனைத் தெரிவித்துள்ளார். முன்பள்ளிகளை ஆரம்பிப்பது தொடர்பில் பல சுற்று கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், சுகாதார அமைச்சின் பரிந்துரைகள் கிடைக்கும் வரை...
Ad Widget

தமிழ் மக்கள் மிதிக்கப்படாமல் மதிக்கப்படும் சூழலை உருவாக்குவோம் – அமைச்சர் டக்ளஸ் அழைப்பு

பேரினவாத தீக்கு எண்ணெய் வார்க்கின்ற செயற்பாடுகளை போலித் தமிழ் தேசிய வாதிகள் குத்தகைக்கு எடுத்துள்ளனர் என்று குற்றஞ்சாட்டியுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சில தரப்புக்களிடம் சலூன் கதவுகள் போன்று இருக்கும் பேரினவாதத்தினை திறக்கச் செய்வதால் எமது மக்களே பாதிக்கப்படுகின்றனர் எனவும் ஆதங்கம் வெளியிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று (10.12.2020) நடைபெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தின்...

கிளிநொச்சியில் வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்ட 25 பேர் கட்டுப்பாடுகளை மீறல் – அனைவரையும் மாங்குளம் வைத்தியசாலைக்கு மாற்றியது சுகாதாரத் துறை

கிளிநொச்சி, பாரதிபுரத்தில் கோவிட் – 19 நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 20 வயதுடைய இளைஞன் கடந்த வாரம் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவருடன் தொடர்புடைய 25 பேர் மாங்குளம் வைத்தியசாலை தனிமைப்படுத்தல் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த 6ஆம் திகதி தொடக்கம் வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்ட அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி நடமாடுவது தொடர்பில் பொதுச் சுகாதாரப்...

சுட்டுப்படுகொலை செய்வேன் என மிரட்டிய காவல்துறை உத்தியோகஸ்தர் மீது மனிதஉரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!!

தமது கட்டளையை மீறி சென்றார் என பொதுமகன் ஒருவரை துரத்தி வந்து வீதியில் இடைமறித்த காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் துப்பாக்கியை நீட்டி சுட்டுப்படுகொலை செய்வேன் என மிரட்டி தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவரினால் , மனிதஉரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வடமராட்சி , உடுப்பிட்டி சந்திக்கு அருகில்...

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்- இறுதி வாக்கெடுப்பில் 2/3 பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு 97 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக 54 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன. இதற்கமைய அடுத்த ஆண்டுக்கான பாதீட்டின் இறுதி வாக்கெடுப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதேவேளை, 2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின்...

வடமாகாண தொற்று நோய் வைத்தியசாலையிலிருந்து 20 நோயாளர்கள் குணமடைவு!

வடமாகாண தொற்று நோய்க்கான வைத்தியசாலையிலிருந்து 20 நோயாளர்கள் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கிருஸ்ணபுரம் பகுதியில் வடமாகாண தொற்று நோய் வைத்தியசாலை அண்மையில் திறந்துவைக்கப்பட்டது. தற்போது அங்கு, சுமார் 100இற்கு மேற்பட்ட கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். இந்நிலையில், குறித்த வைத்தியசாலையில் சிகிச்சைபெற்ற 20 பேருக்கு இறுதியாக எடுக்கப்பட்ட பி.சி.ஆர்....

நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் இருவர் மரணிப்பு!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், நாட்டில் நேற்றைய தினம் மொத்தமாக 538 புதிய கொரோனா தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதனால் இலங்கையில் பதிவாகியுள்ள மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானாது 30,613 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு...