Ad Widget

20 நாட்களேயான குழந்தையின் உயிரிழப்பிலிருந்து இலங்கை பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் – GMOA

பிறந்து 20 நாட்களேயான குழந்தையின் உயிரிழப்பிலிருந்து இலங்கை பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. பெற்றோர் தொற்றுக்கு உள்ளாகியிருக்காத நிலையில் குழந்தைக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பதை கொரோனா மரணங்கள் தொடர்பான மீளாய்வு குழு ஆராய்ந்து உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என அந்த சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித...

வலி.கிழக்கு பிரதேச சபைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!!

வலி. கிழக்கு பிரதேச சபைக்கு எதிராக அச்செழுவைச் சேர்ந்த மக்கள் என அடையாளப்படுத்தி பொதுமக்கள் சிலர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வலி.கிழக்கு பிரதேச சபையின் புத்தூர் தலைமை அலுவலகத்துக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. “வலி.கிழக்கு பிரதேச சபையே சாதிய அடக்குமுறையினாலும் அரசியல் பழிவாங்கல்களினாலும் எமது கிராமத்தின் அபிவிருத்தியைத் தடுக்காதே” அச்செழு வாழ்மக்கள் என்று குறிப்பிட்ட...
Ad Widget

வீதியோர வெள்ளத்தில் வீழ்ந்து குடும்பஸ்தர் உயிரிழப்பு!!

துன்னாலை பகுதியில் வீதியில் தேங்கி நின்ற வெள்ளத்தில் தவறி விழுந்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று(வியாழக்கிழமை) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துன்னாலையை சேர்ந்த கிருஷ்ணபிள்ளை சிவகுமார் (வயது 34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் இன்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்று நீண்ட நேரமாக வீடு திரும்பாத நிலையில் அவரை உறவினர்கள்...

பேச வேண்டிய இடங்களில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசவேண்டும் – வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள்

தமிழ் மக்களின் உரிமைகள் குறித்து பேச வேண்டிய இடங்களில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசவேண்டும் என வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத் தலைவி யோகராசா கலாரஞ்சினி தெரிவித்துள்ளார். சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று (வியாழக்கிழமை) கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற போராட்டத்தின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும்...

“எங்கள் மீதும் குண்டுகளைப் போட்டு கொன்றுவிடுங்கள்” – காணாமற்போனோரின் உறவுகள் யாழில் ஆர்ப்பாட்டம்

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. எங்கள் மீதும் குண்டுகளைப் போட்டு கொன்று விடுங்கள் என்று உறவுகள் கதறி அழுதனர். யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்துள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையகத்துக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இன்று முற்பகல் இடம்பெற்றது. தற்போது நாட்டில்...

சைக்கிளில் சென்றவரை முந்துவதற்கு முற்பட்டதாலேயே கார் விபத்துக்குள்ளானது – சாரதி வாக்குமூலம்

வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் நிலை தடுமாறி ஓட்டிச் சென்றதால் அவரை முன்னோக்கிச் சென்ற போது கார் விபத்துக்குள்ளாகியதாக இறப்பு விசாரணையில் சாரதி தெரிவித்துள்ளார். தென்மராட்சி நுணாவில் பகுதியில் வீதியோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த எரிபொருள் தாங்கி மீது கார் மோதியதில் பெண் ஒருவரும் அவரது சகோதரியின் பிள்ளை ஒருவருமான இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர் . மேலும்...

பண்டிகை காலத்தில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டல்கள் வெளியீடு!!

பண்டிகை காலங்களில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளன. சுகாதார பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன வழிகாட்டுதல்களை வெளியிட்டு, பண்டிகை காலங்களில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு அவற்றைப் பின்பற்றுமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டார். பண்டிகை காலங்களில் பயணத்தை குறைக்க பொதுமக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளது. குடும்பத்தில் ஒருவர் மாத்திரம் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதை உறுதி...

எமது விடுதலைக்காக ஒன்றிணையுங்கள்! – தமிழ் அரசியல் கைதிகள் உருக்கமான வேண்டுகோள்!

தங்களது விடுதலைக்கு ஒன்றிணைந்து செயற்படுமாறு தமிழ் அரசியல் கைதிகள் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் விடுத்துள்ள கோரிக்கையில், “நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடி நிலைமையினையடுத்து, ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய அரசாங்கம் சில நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அறிய முடிகிறது. அந்தவகையில் சுமார் எட்டாயிரம் கைதிகளை விடுவிப்பதற்கும் மரண தண்டனை மற்றும் ஆயுள்தண்டனைக் கைதிகளின் தண்டனைக் காலத்தை வரையறுப்பதற்குமான...

வடக்கு, கிழக்கில் தொடர்ச்சியாக மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம்

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது...

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகஜர் கையளிப்பு

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட மகஜர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த மகஜர் நேற்று (புதன்கிழமை) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடமும் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த மகஜரில், நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், சி.வி.விக்கினேஸ்வரன், இரா.சம்பந்தன், எம்.எ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாமன், சார்ள்ஸ் நிர்மலநாதன்,...