Ad Widget

பயன்பாடற்ற கார்பன் பேனாக் குழாய்கள் மற்றும் பற்தூரிகைகள் மீள்சுழற்சி கொள்கலனை கௌரவ பிரதமர் மதிப்பீடு செய்தார்

பயன்பாடற்ற கார்பன் பேனாக் குழாய்கள் மற்றும் பற் தூரிகைகளை பாதுகாப்பாக மீள்சுழற்சி செய்வதற்காக சுற்றாடற்துறை அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட மீள்சுழற்சி கொள்கலனை கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு (2020.12.03) இடம்பெற்றது. சுற்றூடல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் பாராளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் வைத்து மீள்சுழற்சி கொள்கலன் கௌரவ பிரதமரிடம் வழங்கப்பட்டது....

ஆந்திரப் பிரதேசத்தில் பரவும் மர்ம நோய்; 300-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதி

ஆந்திரப் பிரதேசத்தில், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் இருக்கும் ஏலூரு நகரத்தில், அடையாளம் காணப்படாத ஒரு விதமான நோயால் 300-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். கடந்த சனிக்கிழமை முதல், குழந்தைகள், பெண்கள் உள்பட, 345 பேர் வெவ்வேறு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று ஞாயிறு மாலை அறிவிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை காலை நிலவரப்படி, சுமார்...
Ad Widget

சீரற்ற காலநிலை: யாழில் 23,304 குடும்பங்களைச் சேர்ந்த 75,570 பேர் பாதிப்பு

யாழில் தொடர்ச்சியாக நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 23,304 குடும்பங்களைச் சேர்ந்த 75,570 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அம்மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் என் சூரியராஜ் தெரிவித்துள்ளார். கடந்த 2008 ம் ஆண்டு நிஷா புயலினால் ஏற்பட்ட தாக்கத்தின் பின்னர் தற்போது வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தின் காரணமாக யாழ்.மாவட்டத்தில் பாரிய...

வலி கிழக்கு தவிசாளரை கைது செய்ய முயற்சி?

வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷை கைது செய்வதற்கான முயற்சியில் கோப்பாய் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாகத் தவிசாளர் தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. கோப்பாய் பொலிஸார் தன்னைத் தொடர்பு கொண்டதாகவும் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளதாகவும் தவிசாளர் தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. பொது சொத்துக்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் கைது செய்யும் முயற்சி...

பருத்தித்துறையில் கொரோனா சந்தேகத்தில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர் ஒருவர் உயிரிழப்பு!

பருத்தித்துறையில் கொரோனா தொற்று சந்தேகத்தில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர் ஒருவர் நேற்றையதினம் அதிகாலை உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை திருநாவலூர் பகுதியில் வசித்து வந்த நபரே உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த முதியவரின் மகள் மருத்துவக்கல்லூரி மாணவியெனவும் அண்மையில் கொழும்பில் இருந்து திரும்பியுள்ளார் என்றும், அவருடன் தொடர்புபட்ட ஒருவருக்கு கொழும்பில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து...

மினுவாங்கொட கோரோனா வைரஸ் கொத்தணி உக்ரேனிய விமானப் பணியாளர் ஒருவரால் ஏற்பட்டது!!

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாளர் இடையே ஏற்பட்ட கோரோனா வைரஸ் தொற்று உக்ரேனிலிருந்து வருகை தந்த விமானப் பணியாளர் ஒருவரால் ஏற்பட்டது என்று நம்பப்படுகிறது. கோவிட் -19 நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர், மருத்துவர் சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே இன்று நாடாளுமன்றத்தில் இந்தத் தகவலைத் தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க, நாடாளுமன்றில்...

சாதாரணதரப் பரீட்சை இடம்பெறும் திகதி அறிவிப்பு

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடத்த கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்துள்ள கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், சாதாரணதரப் பரீட்சை மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 11 வரை நடைபெறும் என கூறினார். க.பொ.த. சாதாரண பரீட்சையை அடுத்த ஆண்டு ஜனவரி 18...

பொதுமக்களின் சமூகப் பொறுப்பற்ற தனமே யாழ் வெள்ளத்திற்கு காரணம்!! : அரச அதிபர்

யாழ் மாவட்ட மக்கள் சமூக அக்கறையோடு செயற்படும்போது வெள்ள நிலைமையை கட்டுப்படுத்த முடியும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்த நிலை தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் ஒன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. யாழ்.மாவட்ட அனர்ந்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன்...

வெள்ளக்காடாக மாறியுள்ள வடக்கு மாகாணம்!

புரெவி புயலையடுத்து வடக்கில் பெய்து வரும் கன மழை காரணமாக வடக்கின் பல பகுதிகளும் வெள்ளக்காடாக மாறியுள்ளன. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழையினால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. யாழ்ப்பாணம், வலிகாமம் தென்மராட்சியில் நேற்று 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட கால இடைவெளிக்குள்...

கண்டியில் திடீரென அதிகளவான குரங்குகள் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது

கண்டி- உடவத்தகெலே வனவிலங்கு பூங்காவில் கடந்த சில நாட்களாக திடீரென அதிகளவான குரங்குகள் உயிரிழந்தன. இந்நிலையில் குறித்த குரங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் ஏதோ ஒரு வகையான விஷம் உடலில் பரவியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. மேலும், கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலேயே குரங்களுக்கு பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதில் தொற்று உறுதி செய்யப்படவில்லை. ஆனால்,...

வடக்கு, கிழக்கில் தொடர்ச்சியாக மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கரையோரப் பிரதேசங்களில் குறிப்பாக காலை வேளையில் தொடர்ச்சியாக மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது எனவும் அத்திணைக்களம்...