Ad Widget

சீரற்ற காலநிலை: யாழில் 15,459 குடும்பங்களை சேர்ந்த 51,602 பேர் பாதிப்பு!!

யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 15459 குடும்பங்களை சேர்ந்த 51602பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். மேலும், சீரற்ற காலநிலையில் சிக்கி, இருவர் உயிரிழந்துள்ள நிலையில் 6பேர் காயமடைந்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு யாழ்.மாவட்டத்தில் தற்போது 36 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு, 976 குடும்பங்களை...

மரண வீட்டிற்கு வந்த பெண்ணின் கணவருக்கும் கொரோனா: கிளிநொச்சியில் சம்பவம்!!

கிளிநொச்சி- திருவையாறில் கடந்த இரு வாரங்களுக்கு முன் இடம்பெற்ற தாயின் மரண வீட்டிற்கு, கொழும்பிலிருந்து வருகைதந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அவரது கணவருக்கு மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது பி.சி.ஆர்.பரிசோதனை முடிவு நேற்று (வியாழக்கிழமை) வெளியாகியது. அதில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த நபரின் மனைவிக்கு தொற்று உறுதிப்படுத்தபட்ட...
Ad Widget

திருடப் போன வீட்டாருக்கு நெஞ்சுவலி!! சுடுதண்ணீர் வார்த்துக் கொடுத்து பின் திருடிய திருடன்!!

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஆறு வீடுகளில் நேற்று முன்தினம் இரவு திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரி கல்வயல் பகுதியில் உள்ள பெருங்குளம் வேதனப் பிள்ளையார் கோவில் மற்றும் நுணாவில் வேலங்கேணி கந்தசுவாமி கோவில் ஆகிய பகுதிகளிலேயே இக் குழு திருட்டில் ஈடுபட்டுள்ளது. இந் நிலையில் நுணாவில் வேலங்கேணி கந்தசுவாமி கோவில் பகுதியில் உள்ள வீட்டொன்றில்...

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 26 அடியை தாண்டியது

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 26 அடியை தாண்டியுள்ளது என நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வந்த பலத்த மழை காரணமாக, நீர் நிலைகளிற்கான நீர் வருகை அதிகரித்திருந்தது. இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணியளவில் இரணைமடு குளத்தின் நீர் மட்டம் 26 அடி 1அங்குலமாக உயர்ந்துள்ளது. 36...

பருத்தித்துறையில் ஒருவருக்கு கொரோனா!

பருத்தித்துறை ஓடக்கரையைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை நேற்றையதினம் (03) வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. தனது மாமி உறவுமுறை ஒருவரின் மருத்துவ சிகிச்சைக்காக கொழும்புக்குச் சென்று அங்கு ஒரு மாதம் தங்கியிருந்த நிலையில் திரும்பிய 34 வயதுடைய குடும்பத்தலைவருக்கே கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர் கொழும்பு சென்று திரும்பிய நிலையில் குடும்பத்துடன் கடந்த 14 நாள்கள்...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2021 மார்ச் மாதத்துக்குள் நடத்தப்படும் – கல்வி அமைச்சர்

2021ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2020ஆம் ஆண்டுக்குரிய க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மார்ச் இறுதிக்குள் நடைபெறும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார். நேற்றையதினம் அரசு தகவல் திணைக்களத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது; கோரோனா வைரஸ் பரவுவதால் நாட்டில் கிட்டத்தட்ட அரைவாசி பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதைக்...

நாட்டில் நேற்று 627 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் ; 5 உயிரிழப்புகள் பதிவு!

நாட்டில் நேற்றைய தினம் மொத்தமாக 627 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால் இலங்கையில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 26,038 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 627 கொரோனா தொற்றாளர்களும் மினுவாங்கொடை - பேலியகொட கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள்...

பிரபாகரனைக் கொல்வதற்காக இலட்சக்கணக்கான அப்பாவிகளைக் கொன்றமையே யுத்தக் குற்றம்- கஜேந்திரகுமார்

பிரபாகரன் தப்பித்து விடுவார் என்ற காரணத்திற்காக தமிழ் மக்களை வெளியேற்ற இடமளிக்க முடியாது என மஹிந்த ராஜபக்ஷ கூறியமையும், ஒரு நபரைக் கொலைசெய்ய வேண்டும் என்பதறாக இலட்சக் கணக்கான அப்பாவி மக்களைக் கொன்றமையுமே நாம் கூறும் போர் குற்றம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அத்துடன்,...