Ad Widget

புரேவி புயல் இன்று பிற்பகல் மன்னார் வளைகுடாவைக் கடக்கும்

“புரேவி” புயலின் மையம் இலங்கையின் வடகிழக்கு கடற்கரையை குச்சவேலி மற்றும் திரியாய் இடையே நேற்று இரவு கடந்தது என்று வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. 70-80 கிலோ மீற்றர் வேகத்திலும் 90 கிலோ மீற்றர் வேகத்திலும் காற்று வீசியது. புயல் இப்போது மேற்கு-வட-மேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது, இன்று பிற்பகலுக்குள் மன்னார் வளைகுடாவில் வெளியேறுகிறது. எனவே...

ஊரெழு பொக்கணை கிணறு ஊடாக சூடான கடல் நீர் பாய்கிறது – மக்கள் இடம்பெயர்வு

ஊரெழு பொக்கணைக் கிணறு நீர்மட்டம் உயர்ந்து கடல்நீர் உள்புகுந்துள்ளதாத அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். பொக்கணை கிணறில் வழிந்தோடும் நீர் கடுமையான சூடாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டனர். அத்துடன், அந்தப் பகுதியில் உள்ள குழாய்க்கிணறுகள் மற்றும் கிணறுகளும் நிலமட்டத்துக்கு மேலாக நீர் எழுந்து பாய்கின்றன. அதனால் இன்று வியாழக்கிழமை காலை முதல் பொக்கணை கிணறை...
Ad Widget

பட்டப்பகலில் இரண்டு வீடுகளுக்குள் புகுந்து கத்திமுனையில் கொள்ளை – புதைத்து வைத்த நகைகளையும் மிரட்டி எடுத்தது கும்பல்

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உள்பட்ட இரண்டு வீடுகளில் பட்டப்பகலில் கொள்ளையர்கள் இருவர் நகைகள் மற்றும் பணம் கொள்ளையடித்துத் தப்பித்துள்ளனர். சின்னப்பா வீதியில் உள்ள வீடு ஒன்றுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர், அங்கு வசிக்கும் வயோதிபர்களை கத்திகளைக் காண்பித்து மிரட்டி தங்கச் சங்கிலியை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று புதன்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில்...

வடக்கில் இதுவரை 84 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!

வடக்கு மாகாணத்தில் கடந்த மார்ச் முதல் இன்று வரையான காலப்பகுதியில் 84 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இதன்படி, மார்ச் முதல் செப்ரெம்பர் வரையான காலப்பகுதியில் 17 நோயாளர்களும் ஒக்டோபரில் 39 பேரும் நவம்பரில் 27 பேரும் டிசெம்பரில் இன்றுவரை ஒருவர் என தொற்றாளர்கள்...

யாழில் மினி சூறாவளி- 40இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்வு!

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை ஆதிகோயிலுக்கு அண்மித்த பகுதியில் வீசிய மினி சூறாவளியால் 40 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்று இரவு இடம்பெயர்ந்துள்ளன. திடீரென வீசிய கடும் காற்றினால் வீடுகள் பல சேதமடைந்ததுடன், மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திடீர் அனர்த்தம் காரணமாக வீடொன்றின் கூரை வீழ்ந்து ஏற்பட்ட பாதிப்பில் ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கிளிநொச்சியில் குளங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு- மக்களுக்கு எச்சரிக்கை!

கிளிநொச்சியில் குளங்களின் நீர்மட்டம் அதிரித்து வருகின்ற நிலையில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி குளங்களில் நேற்றையதினம் (புதன்கிழமை) இரவு பத்து மணிக்கு கணிக்கப்பட்ட நீரின் அளவின் அடிப்படையில் சில குளங்கள் இன்று வான்பாயும் என எதிர்பார்க்கப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அக்கராயன்குளம் 11 அடி 04 இஞ்ச் “FSL 25′-0”, கரியாலை நாகமடுவான் குளம் 02...

யாழில் தொடர் மழையால் 1,500இற்கு மேற்பட்டோர் பாதிப்பு- மூவரைக் காணவில்லை!

யாழ்ப்பாண மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை மற்றும் காற்று காரணமாக தற்போதுவரை 459 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 589 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அத்துடன், வேலணை பகுதியைச் சேர்ந்த இருவர் மற்றும் சங்கானை பகுதியைச் சேர்ந்த ஒருவர் என மூவர் காணாமல் போயுள்ளதாகவும்,...