Ad Widget

மரங்கள் சாயும், மின் தடை ஏற்படலாம், குடிதண்ணீரை சேகரித்து வைக்கவேண்டும் – யாழ்ப்பாணம் மக்களுக்கு முன் எச்சரிக்கை

காலநிலை சீரின்மையால் யாழ்ப்பாணம் மாவட்டம் பாதிப்பினை எதிர்கொள்ளும் என எதிர்வு கூறப்ப்படுள்ளமையால் மக்களை அவதானமாக இருக்குமாறு கோரியுள்ள மாவட்ட செயலர் க. மகேசன் , கோவிட் -19 நோய் தொடர்பிலும் மிகவும் அவதானமாக இருக்குமாறும் கோரியுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் ஊடகவியலாளர்களை சந்திந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது;...

யாழ்.மாநகர சபையின் 2021 பட்ஜெட் தோற்கடிப்பு

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் ஈழமக்கள் ஜனநாயக கட்சி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் எதிர்ப்பால் தோற்கடிக்கப்பட்டது. 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமும் கடந்த ஆண்டு இரண்டு முறை தோற்கடிக்கப்பட்ட நிலையில் முதல்வர் தனக்கு உள்ள அதிகாரத்தால் அதனை நிறைவேற்றியிருந்தார். எனினும் இந்த ஆண்டு 2021ஆம் ஆண்டுக்கான வரவு...
Ad Widget

வெடிபொருட்களுடன் கிளிநொச்சியில் பெண்ணெருவர் கைது!!

கிளிநொச்சி பளை பொலில் பிரிவிற்கு உட்பட்ட இயக்கச்சி பகுதியில் வெடிபொருட்களுடன் பெண்ணெருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் வீடு தற்போது பலத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் கைது தொடர்பான முழுமையான தகவல் எதுவும் வெளியாகவில்லை. அத்துடன், குறித்த பகுதியை காட்சிப்படுத்த அனுமதி மறுக்கப்பட்டுளளது.

முதலாவது கொரோனா தடுப்பூசி உலகிற்கு அறிமுகம்!!

பைஸர் - பயோ என் டெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு பிரித்தானிய அனுமதி வழங்கியுள்ளது. அதனடிப்படையில் குறித்த தடுப்பூசிக்கு அனுமதி வழங்கிய முதல் நாடாக பிரித்தானியாவாகும். குறித்த தடுப்பூசி அடுத்த வாரம் முதல் அந்நாட்டில் பயன்படுத்த உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக ஏதேனும் அவசர தேவைகள் காணப்படுமாயின் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி 117 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

புரவி சூறாவளி இன்று இரவு 7.10 மணியளவில் நாட்டை கடக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்

புரவி சூறாவளி திருகோணமலை மற்றும் பருத்தித்துறைக்கிடையிலான முல்லைத்தீவினை அண்மித்த கடற்பரப்பில் இன்று இரவு 7.10 இற்கு நாட்டிற்குள் பிரவேசிக்கும் என எதிர்பார்த்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்போது கிழக்கு, வடக்கு, வடமத்திய, வடமேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. சில...

வடமாகாண பாடசாலைகளுக்கு வியாழன் வெள்ளி விடுமுறை!!

வடக்கு மாகாணத்தில் 4 மாவட்டங்களில் நாளை வியாழக்கிழமையும் மறுநாள் வெள்ளிக்கிழமையும் பாடசாலைகள் மூடப்படும் என்று மாகாண ஆளுநர், திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் அறிவித்துள்ளார். சீரற்ற காலநிலை காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டப் பாடசாலைகளுக்கு இரண்டு நாள்கள்...

போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த காரைநகர் வாசிக்கு கோரோனா தொற்று இல்லை

காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவர் சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் உயிரிழந்தவருக்கு கோரோனா வைரஸ் தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். அதனால் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் அவரது சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். காரைநகரில் கோரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட நிலையில்...

கொரோனா அச்சுறுத்தல்: யாழில் 1010 குடும்பங்களைச் சேர்ந்த 2220பேர் சுயதனிமைப்படுத்தலில்

யாழ்.மாவட்டத்தில் 1010 குடும்பங்களைச் சேர்ந்த 2220 பேர், சுயதனிமைப்படுத்தலில் உள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் அரசாங்க அதிபர் க.மகேசன் மேலும் கூறியுள்ளதாவது, “யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று வரை 22பேர் கொரோனா...

இலங்கையை இன்று கடக்கவுள்ள சூறாவளி – மக்களுக்கு எச்சரிக்கை!

தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த ஆழமான தாழமுக்கமானது ஒரு சூறாவளியாக விருத்தியடைந்து பெரும்பாலும் இலங்கையைக் கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் மழையுடனான வானிலையும் காற்று நிலைமையும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த தாழமுக்கம் ஒரு...

நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்டவரை மீள அதே குற்றத்திற்காக கைது செய்த பொலிஸார்!

போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில், நீதிமன்றினால் தண்டம் அறவிடப்பட்டு விடுவிக்கப்பட்ட முதியவரை பொலிஸார் மீள கைது செய்து பொலிஸ் நிலையத்தில் ஒரு நாள் தடுத்து வைத்து நீதிமன்றில் மீள முற்படுத்தியுள்ளனர். இதன்போது முதியவரின் குடும்பத்தினரால், அவர் ஏற்கனவே நீதிமன்றில் குறித்த குற்றத்திற்காக தண்டப்பணம் செலுத்தியமைக்கான ஆவணங்களை சமர்ப்பித்த போது, பொலிஸார் தாம் தவறுதலாக கைது செய்து...