Ad Widget

நீதிமன்ற அனுமதியுடன் பாழடைந்த கிணற்றிலிருந்து மனித உடற்பாகங்கள் மீட்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவல்காடு பகுதியில் நேற்று (30) இனம் காணப்பட்ட மனித உடல் பாகங்களை மீட்கும் பணிகள் நீதிமன்ற அனுமதிக்கு அமைவாக இன்று (31) இடம்பெற்றது. முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தின் பதில் நீதிபதி ந.சுதர்சன் முன்னிலையில் குறித்த அகழ்வு மற்றும் மீட்பு பணிகள் இடம்பெற்றன. குறித்த இடத்தில் தடயவியல் பொலிஸார் மற்றும்...

முல்லைத்தீவில் தனியார் காணியொன்றில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு

முல்லைத்தீவு – முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவல்காடு பிரதேசத்தில் உள்ள தனியாரின் காணியொன்றில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதிக்கு கால்நடைகளை பார்வையிடுவதற்காகச் சென்ற பெண்ணொருவர், அக்காணியில் அமைந்துள்ள மண் கிணற்றில் குறித்த எச்சங்கள் இருப்பதை அவதானித்து அப்பகுதி கிராம சேவையாளருக்கு தகவல் வழங்கியுள்ளார். இதனையடுத்து, குறித்த பகுதிக்கு வருகை தந்த கிராம அலுவலகர்...
Ad Widget

யாழில் 5 ஆயிரத்து 731 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் – அரசாங்க அதிபர்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 731 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார். யாழ். மாவட்டத்தில் தற்போதைய கொரோனா நிலைமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். யாழ். மாவட்டத்தில் இதுரையான காலப்பகுதியில் 149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில், 26 பேர் பூரண குணமடைந்து...

உருமாறிய கொரோனா வைரஸ் இலங்கைக்குள் வந்துள்ளதா?

உலக நாடுகள் பலவற்றில் தற்பொழுது பதிவாகி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் இலங்கைக்குள் வந்துள்ளதா? என்பதை கண்டறிவதில் விசேட பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவம் மற்றும் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் பிரிவு (The Department of Immunology and Molecular Medicine and Allergy, Immunology and...

தொற்றாளர்கள் தொடர்ச்சியாக அடையாளம் காணப்படுவதால் மருதனார்மடம் கடைகளைத் திறப்பது உடனடிச் சாத்தியமில்லை!!

மருதனார்மடம் கோரோனா வைரஸ் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் 14 நாள்கள் சுயதனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கான பிசிஆர் பரிசோதனைகள் நிறைவடைந்த பின்னரே பொதுச் சந்தைத் தொகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதியளிக்க முடியும் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். மருதனார்மடம் கொத்தணியுடன் தொடர்புடையவர்களுக்கு கடந்த சில நாள்களாக முன்னெடுக்கப்படும் பிசிஆர் பரிசோதனையில்...

புதுக்குடியிருப்பு வியாபாரியின் மனைவிக்கும் தொற்று

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சந்தைக்கு மரக்கறி விநியோகிக்கும் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் அவரது மனைவிக்கும் தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பொதுச் சந்தை மூடப்பட்டுள்ள நிலையில் சுகாதார மருத்துவ அதிகாரியின் பணிப்பில் கடந்த வாரம் 12 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட எழுமாறான பரிசோதனையில் ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. தம்புள்ளை மொத்த விற்பனை...

மருதனார்மடம் கொரோனா கொத்தணியில் மேலும் தொற்றாளர்கள்!

மருதனார்மடம் கொரோனா கொத்தணியில் மேலும் மூவருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று (புதன்கிழமை) 130 பேருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே மூவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கும் சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ...

மாவையின் தன்னிச்சையான செயற்பாட்டினால் யாழ். மாநகர சபையை இழந்துள்ளோம் – சுமந்திரன்

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் தன்னிச்சையான, ஜனநாயக விரோத மற்றும் சட்டவிரோத செயற்பாட்டினால் போட்டியின்றி வென்றிருக்க வேண்டிய யாழ். மாநகர சபை முதல்வர் பதவியை இழந்திருக்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற...

5 கொரோனா நோயாளிகள் தப்பியோட்டம்

கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த 05 பேர் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலன்னறுவை-கல்லேல பகுதியில் உள்ள கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கொரோனா தொற்றாளர்களே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து, அவர்களை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பருத்தித்துறையில் கர்ப்பிணிப் பெண் திடீர் சாவு; பிசிஆர் முடிவுக்கு காத்திருப்பு

பருத்தித்துறை சாரையடியைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவரது மாதிரிகள் பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. பிசிஆர் பரிசோதனை முடிவுகள் இன்று மாலை கிடைத்ததும் உடற்கூற்றுப் பரிசோதனை இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 மாதக் கர்ப்பிணிப் பெண்ணுக்கு திடீரென ஏற்பட்ட குருதிப்போக்குக் காரணமாக இன்று காலை மந்திகை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். எனினும்...

நல்லூர் பிரதேச சபைத் தவிசாளராக மயூரன் தெரிவு!!

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளராக பத்மநாதன் மயூரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் பதவிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் கு.மதுசுதனும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் ப.மயூரனும் போட்டியிட்டனர்.. நல்லூர் பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான பாதீடு இரண்டு தடவைகள் தோல்வியடைந்ததால் தவிசாளர் தனது பதவியை இழந்துள்ளார். அதனால் நல்லூர்...

தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் மாநகர முதல்வர் மணிவண்ணன் அஞ்சலி

யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய முதல்வர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் வணக்கம் செலுத்தினார். இன்று முற்பகல் யாழ்ப்பாணம் மாநகரின் 23ஆவது முதல்வராகப் பதவியேற்ற அவர், தனது தரப்பு உறுப்பினர்களுடன் இணைந்து தியாக தீபனின் நினைவுத் தூபில் வணக்கம் செலுத்தினார்.

உக்ரைனில் இருந்து இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளில் மூவருக்கு கொரோனா

உக்ரைனில் இருந்து இலங்கைக்கு சுற்றுலாவிற்காக வந்த பயணிகளில் மூன்று பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த திங்கட்கிழமை சுற்றுலாப் பயணிகளுக்காக விமான நிலையங்கள் திறக்கப்பட்டதன் பின்னர், 180 சுற்றுலாப் பயணிகளுடன் இலங்கைக்கான முதல் உக்ரேனிய பயணிகள் விமானம் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. கொரோனா...

‘எங்கள் பிள்ளைகளை எங்களிடம் ஒப்படையுங்கள்’ – யாழில் உறவுகள் போராட்டம்

காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத் தாருங்கள் எனக் கோரி காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய பின்பக்க வீதியில் அமைந்துள்ள நல்லை ஆதினம் முன்பாக இன்று (புதன்கிழமை) காலை 9 மணியளவில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது எங்கள் பிள்ளைகளை எங்களிடம் ஒப்படையுங்கள், இனவாதத்தைக்...

யாழ்ப்பாணம் மாநகரின் முதல்வராக மணிவண்ணன் தெரிவு!!

யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வராக சட்டத்தரணி விஸ்லிங்கம் மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் விட ஒரு மேலதிக வாக்குகளைப் பெற்று சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவாகியுள்ளார். இதன்மூலம் யாழ்ப்பாணம் மாநகர சபையின் 23ஆவது முதல்வராக சட்டத்தரணி வி.மணிவண்ணன் பதவியேற்றுள்ளார். முன்னதாக, இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமான யாழ்ப்பாணம் மாநகரசபையின்...

மணிவண்ணனும் முதல்வர் பதவிக்குப் போட்டி!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் தெரிவில் சட்டத்தரணி வி. மணிவண்ணன் போட்டியிடவுள்ளார். “பாதீடு தோற்கடிக்கப்பட்டு பதவியிழந்த முதல்வர் ஆனல்ட்டை மீண்டும் களமிறக்குவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அவர் மீளவும் முதல்வராகத் தெரிவானால் பாதீடு தோற்கடிக்கப்பட்டு ஆட்சி கலைக்கப்படும் நிலை ஏற்படும். எனவே தற்போதனைய ஆட்சிக்காலத்தைத் தக்கவைத்து அனைவருடனும் இணைந்து உறுதியான ஆட்சியை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம்....

மருதனார்மடம் கொத்தணியால் மேலும் எண்மருக்கு தொற்று; உடுவிலில் 2 குடும்பங்கள்

மருதனார்மடம் கோரோனா வைரஸ் தொற்றுப் பரவல் கொத்தணியில் மேலும் 8 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்றையதினம் (டிசெ. 29) செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 8 பேருக்கும் தொற்று உள்ளதாக அறிக்கை கிடைத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்....

ஜெனிவா தீர்மானம் புதிய தீர்மானமாக இருக்க வேண்டும் – சுமந்திரன்

மார்ச் இடம்பெறவுள்ள மனித உரிமை பேரவையில் எடுக்கப்படுகின்ற தீர்மானம் ஓர் புதிய தீர்மானமாக இருக்க வேண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்தோடு அந்த தீர்மானம் ஜெனிவா மனித உரிமை பேரவையின் மேற்பார்வையை தக்கவைத்துக் கொள்வதாக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற விசேட...

2 இலட்சம் சுயதொழில் வேலைவாய்ப்புகளை உருவாக்க தீர்மானம்

அடுத்த ஆண்டு 2 இலட்சதிற்கு மேற்பட்ட சுயதொழில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக பொருளாதார மறுமலர்ச்சிக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) சமுர்த்தி முகாமையாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் அடிப்படையில் பெண் தொழில்முனைவோரை தெரிவுசெய்து, வணிக நடவடிக்கைகளை முன்னெடுத்து...

இலங்கையின் மிகவும் வயதான பெண் மரணம்!

இலங்கையின் மிகவும் வயது முதிர்ந்த பெண் என சான்றிதழ் வழங்கப்பட்வர் நாகொட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். குறித்த 117 வயதுடைய பெண்ணான ‘வேலு பாப்பானி அம்மா’ என்பவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு மரணமடைந்துள்ளார். இரு பிள்ளைகளின் தாயாரான இவர் 1903 ஆம் ஆண்டு மே 03ஆம் திகதி, களுத்துறை மாவட்டம், தொடங்கொடை பிரதேச...
Loading posts...

All posts loaded

No more posts