
வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.... Read more »

ஓமான் நாட்டிலிருந்து நாடு திரும்பிய 25 பயணிகளை யாழ்ப்பாணம் விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு ஏற்றிவந்த சொகுசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கிளிநொச்சி பளை – ஆனைவிழுந்தான் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று காலை 9.45 மணியளவில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்து சாரதி துாங்கியதால் பேருந்து... Read more »

கடந்த 30 வருடங்களுக்கும் மேற்பட்ட உரிமை போராட்டத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், யுவதிகள் தமது இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர். இவர்கள் யார்? இவர்கள் எதற்காக தம் உயிரை அர்ப்பணித்தார்கள்? இந்த இளையவர்கள் தமது இளவயதில் தமது இளவயதுக்கே உரிய ஆசைகளை துறந்து ஒடுக்கப்பட்ட... Read more »

இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களின் தரப்படுத்தல் பட்டியலில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது. www.www.topuniversities.com என்ற இணையத்தளத்தினால் உலகிலுள்ள பல்கலைக்கழகங்களை அவற்றின் தர நிர்ணய நியமங்களின் அடிப்படையில் வருடாந்தம் மேற்கொள்ளப்படும் தரப்படுத்தலிலேயே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்தை அடைந்திருக்கிறது. 2021 ஆண்டுக்கான பல்கலைக்கழகத் தரப்படுத்தல் வரிசையில்... Read more »

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் ஆனந்தராசா, பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் இந்த வழக்கை தன் சார்பில் தாக்கல்... Read more »

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளெ பிரபாகரனுக்கு முகநூலில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததாக நான்கு பேரை ஏறாவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 66ஆவது பிறந்தநாள் நேற்றைய தினம் கொண்டாடப்பட்டது. அவரை வாழ்த்தியும் அவரது பெருமைகளைக் குறிப்பிட்டு... Read more »

நாட்டில் நேற்றையதினமும் 553 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மினுவாங்கொட மற்றும் பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தணியில்... Read more »

யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வு கூடங்களில் 352 பேருக்கு இன்று பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், இவர்களில் வவுனியா, பெரியகட்டு தனிமைப்படுத்தல் முகாமைச் சேர்ந்த 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர்... Read more »