Ad Widget

மக்கள் பொது இடங்களில் ஒன்றுகூடி நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியாது – யாழ். நீதிமன்றம்

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை பொது இடங்களில் மக்களை ஒன்றுக்கூட்டி நடத்த முடியாது என யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளது. மாவீரர் நாள் நினைவேந்தலை தடை செய்யுமாறு கோரி யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பத்துக்கே யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இந்த கட்டளையை வழங்கியுள்ளது. விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பாக தடைவிதிக்கப்பட்டுள்ளதால், அந்த...

யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் புத்தாக்க மின்கல (பற்றரி) தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பௌதீகவியல் மற்றும் இரசாயனவியல் துறைகள் இணைந்து முன்னெடுக்கும் பற்றரி ஆராய்ச்சிக்கென நவீனமயப்படுத்தப்பட்ட ஆய்வுகூடங்களின் திறப்புவிழா இன்று காலை இடம்பெற்றது. யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தரும், முன்னாள் விஞ்ஞான பீடதிபதியுமான பேராசிரியர் சி. சிறீசற்குணராஜா இந்த ஆய்வுகூடங்களைச் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் பு.ரவிராஜன், பௌதிகவியல் துறைத் தலைவர் கலாநிதி...
Ad Widget

கோவிட் – 19 தொற்றை முற்றாக ஒழிக்க இரண்டரை ஆண்டுகளாகும்; அதுவரை மாணவர்களின் கல்வியை வீணடிக்க முடியாது – கல்வி அமைச்சர் தெரிவிப்பு

கோவிட்-19 தொற்று நோயின் சவால் முற்றிலுமாக அகற்றப்படுவதற்கு இன்னும் இரண்டரை ஆண்டுகள் ஆகும். இதுபோன்ற சூழ்நிலையில் மாணவர்களின் பாடசாலைக் கல்வியை நிறுத்தி வைப்பது “நடைமுறைக்கு மாறானது” என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது” இவ்வாறு கல்வி அமைச்சர் பேராசிரியர், ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கோவிட்-19 தொற்று நோயின் சவாலுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த ஆண்டு தரம்...

வடக்கில் மாவீரர் நாள் நினைவேந்தலை தடை செய்ய நீதிமன்றங்களில் முன்னிலையாக மூத்த அரச சட்டவாதிகளுக்கு சட்ட மா அதிபர் பணிப்பு!

வடக்கு மாகாணத்தில் இந்த வாரம் நடத்தத் திட்டமிட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மாவீரர் நாள் நிகழ்வுகளை நிறுத்துவதற்கு நீதிவான் நீதிமன்றங்களில் முன்னிலையாகி உண்மைகளை வெளிப்படுத்துமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, சட்ட மா அதிபர் திணைக்கள மூத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இந்தத் தகவலை சட்ட மா அதிபரின் ஒருங்கிணைப்புச் செயலாளர், அரச...

யாழ். நல்லூர் பகுதியில் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று!

யாழ்ப்பாணத்தில் வயோதிபப் பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் கந்தபுராண வீதியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு கடந்த 11ஆம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டியிலிருந்து வருகை தந்த அவர் கிளிநொச்சிக்கும் வான் ஒன்றில் சென்று வந்துள்ளார். அவர் கொழும்பிலிருந்து வருகை தந்தமை...

யாழில் உணவகத்தில் உயிரிழந்தவரின் உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கை வெளியானது

யாழ்ப்பாணம், கே.கே.எஸ். வீதியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பணியாளர் மாரடைப்பு நோயால் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னரான சட்ட மருத்துவ அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. திருமுருகண்டியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 48 வயதுடைய தர்மலிங்கம் தயாகரன் என்பவரே இவ்வாறு...

நிவர் என்ற சூறாவளி இலங்கையை நோக்கி நகர்வதாக தெரிவிப்பு!

நிவர் என்ற சூறாவளி இலங்கையை நோக்கி நகர்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டளவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நேற்று காலை 10.30 மணியளவில் இந்த சூறாவளி காங்கேசந்துறை கடற் பிரதேசத்தில் இருந்து 325 கி.மீ தூரத்தில் கடற் பிரதேசத்தில் நிலை கொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று மாலை...