Ad Widget

ஜனாதிபதி கோட்டாவிற்கு யாழ் நீதிமன்றம் விடுத்த அழைப்பாணை இரத்து!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு யாழ் நீதிமன்றம் விடுத்த அழைப்பாணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் இரத்து செய்துள்ளது. லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் காணாமல் போனமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது. யுத்தத்தின் பின் மக்கள் போராட்டங்களை ஒழுங்கமைத்து வந்த செயற்பாட்டாளர்களான இவர்கள் இருவரும் யாழ்ப்பாணத்தில்...

கிளிநொச்சி முதியவருக்கு கோரோனா தொற்று; குடிதண்ணீர் போத்தல்கள் விநியோகிப்பவர்கள் காரணமா?

கிளிநொச்சியில் நேற்று அடையாளம் காணப்பட்ட வயோதிபருக்கு கோரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு குடிதண்ணீர் போத்தல்கள் விநியோகத்தில் ஈடுபடும் பணியாளர்கள் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. நாட்டில் கோரோனா வைரஸ் பரவல் அதிகமாகக் காணப்படும் மேல் மாகாணத்துக்குச் சென்று குடிதண்ணீர் போத்தல்களை எடுத்து வந்து கிளிநொச்சி மாவட்டத்தில் விநியோகிக்கும் முகவர் நிறுவனத்தைச் சேர்ந்தோருக்கு பிசிஆர் பரிசோதனையை முன்னெடுக்க...
Ad Widget

யாழ்.நகர உணவகத்திற்கு தென்னிலங்கையிலிருந்து 3 நாள்களுக்கு முன் வந்த பணியாளர் திடீர் சாவு!!

யாழ்ப்பாணம் நகரில் கே.கே.எஸ் வீதியில் இயங்கும் உணவகம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தென்னிலங்கையிலிருந்து கடந்த 3 நாள்களுக்கு முன் அவர் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. பணியாளர் நேற்றிரவு திடீரென உயிரிழந்துள்ளார் என்று ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலம் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவரது சடலத்திலிருந்து மாதிரிகள் பெறப்பட்டு பிசிஆர்...

கிளிநொச்சியில் கொரோனா சமூகத் தொற்று அபாயம்- மக்களுக்கு எச்சரிக்கை!

கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 72 வயதான நபருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், அடையாளம் காணப்பட்ட தொற்றாளர் வெலிகந்த கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி, 155ஆம் கட்டைப் பகுதியில் எரிபொருள் கடையொன்றினை நடத்திவரும் 72 வயதுடைய பாரதி புரத்தைச் சேர்ந்த ஒருவருக்கே இவ்வாறு பி.சி.ஆர். பரிசோதனை மூலம்...

யாழில் 322 பேருக்கான பி.சி.ஆர். பரிசோதனையில் நால்வருக்கு கொரோனா தொற்றுறுதி!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி இதனைத் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் நேற்று (திங்கட்கிழமை) 322 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களில் நால்வருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக...

அனர்த்த நிலையை எதிர்கொள்ள தயார் நிலையில் யாழ்ப்பாணம்- அரச அதிபர்

யாழ். மாவட்டத்தில் தாழமுக்கத்தினால் ஏதாவது அனர்த்தம் ஏற்படுமாக இருந்தால் அதனை எதிர்கொள்ள மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தயார் நிலையில் உள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். வங்காள விரிகுடாவில் தற்போது ஏற்பட்டுள்ள தாழமுக்கம் மற்றம் புயல் உருவாக்கம் காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) மாலை...

வழக்கை துரிதப்படுத்துங்கள் அல்லது தூக்கிலிடுங்கள்! – தமிழ் அரசியல் கைதி ஜனாதிபதியிடம் கோரிக்கை!

வழக்கை துரிதப்படுத்துங்கள் அல்லது என்னை தூக்கிலிடுங்கள் என தமிழ் அரசியல் கைதியான கனகசபை தேவதாசன் (வயது-63) ஜனாதிபதியிடம் பகிரங்கக் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “கனகசபை தேவதாசன்‌ (வயது-63) ஆகிய நான்‌ பயங்கரவாதத்‌ தடுப்புச்‌ சட்டத்தின்‌ கீழ் கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக சிறை வைக்கப்பட்டிருக்கிறேன்‌. கொழும்பு மேல்‌ நீதிமன்றில்‌ சட்ட...

கொரோனா அச்சம்: கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை மூடப்படுகிறது

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் அனைத்தும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார். கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 72 வயதான நபருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத்...