Ad Widget

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக இரு பெண் விமானிகள் நியமிப்பு!

இலங்கை விமானப்படை வரலாற்றில் முதல் முறையாக இரண்டு பெண் அதிகாரிகள் விமானிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். சீனக்குடா விமானப்படைத் தளத்தில் இன்று நடைபெற்ற 61 வது அதிகாரிகளின் கேடட் கமிஷனிங் மற்றும் விங்ஸ் அணிவகுப்பு இடம்பெற்றது. இந்த நிகழ்வின்போதே இரண்டு பெண் அதிகாரிகள் விமானிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது.

துணை மருத்துவ சேவைகளுக்கு விண்ணப்பம் கோரல்!!

“வடக்கு மாகாணத்தில் பெருமளவு வெற்றிடங்கள் காணப்படும் துணை மருத்துவ சேவைகளுக்கு சுகாதார அமைச்சினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அவற்றுக்கு மாகாண இளையோர்கள் விண்ணப்பிப்பதன் ஊடாக பயிற்சியின் பின் வேலைவாய்ப்பு கிடைக்கும்”இவ்வாறு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; சுகாதார அமைச்சினால் துணை மருத்துவ சேவையைச் சேர்ந்த ஒன்பது...
Ad Widget

அரச அலுவலகத்தில் இரவு நேர காவலாளி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்!!

யாழ்ப்பாணம், கோப்பாயிலுள்ள யாழ் மாவட்ட சமூக சேவைகள் திணைக்களத்தின் அலுவலகத்திற்குள்ளிருந்து, இரவு நேர காவலாளி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பூதர்மட சந்தியில் அமைந்துள்ள யாழ் மாவட்ட சமூக சேவைகள் திணைக்களம் இன்று (16) காலை வழக்கம் போல திறக்கப்படவில்லை. அலுவலக பணியாளர்கள் அனைவரும் வீதியிலேயே காத்திருந்தனர். இரவு நேர காவலாளி வழக்கம் போல அதிகாலையிலேயே கதவை திறந்து,...

அரியாலையில் 15 குடும்பங்களைச் சேர்ந்த 61 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்

லண்டன் பயணம் செய்வதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குச் சென்றிருந்த ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் அவருடன் நெருக்கமானவர்கள் மற்றும் தொடர்புடையவர்கள் என 61 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். லண்டனிலிருந்து நாடு திரும்பிய அவர், கட்டாயத் தனிமைப்படுத்தலை முடித்து அரியாலையில் கடந்த இரண்டு மாதங்களாகத் தங்கியிருந்துள்ளார். அவர் கடந்த மாதம் கொழும்பு சென்று லண்டன் திரும்புவதற்கான...

14 மாவட்டங்களுக்கு காலநிலை சிவப்பு அறிவிப்பு!!

நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில்பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...

விடுமுறைகள் குறைக்கப்பட்ட பாடசாலை நாட்காட்டி வெளியீடு!

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக இந்த ஆண்டு பாடசாலை செயற்பாடுகள் பாதிக்கப்பட்ட நிலையில், 2021இல் விடுமுறைகள் குறைக்கப்பட்ட பாடசாலை நாட்காட்டி கல்வியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகள் 2021 ஆம் ஆண்டு முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக முதலாம் கட்டமாக ஜனவரி 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி...

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகின!

2020ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. அத்துடன், தரம்-05 புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கமைய, கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல் மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு 162 புள்ளிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை...

இலங்கையில் கடந்த 15 நாட்களில் கொரோனா வைரஸால் 45 மரணங்கள் பதிவு

நாட்டில் கடந்த 15 நாட்களில் கொரோனா வைரஸ் தொற்றால் 45 மரணங்கள் பதிவாகியுள்ளன. கடந்த மார்ச் மாதம் முதல் ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி வரையில் 13 கொரோனா மரணங்களே பதிவாகியிருந்த நிலையில், சடுதியாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்றினால் மூன்றாவது முறையாகவும் நேற்று ஒரே நாளில் 5 மரணங்கள்...

பொலன்னறுவைக்கு 700 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள பொருளாதார மத்திய நிலையம்!!

• உலக பாரம்பரிய நகரமான பொலன்னறுவை சுற்றுலா தலமாக அபிவிருத்தி செய்யப்படும்.... • விவசாய ஓய்வூதிய திட்டம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் மீண்டும் ஆரம்பமாகும்.... • பொலன்னறுவைக்கு 700 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள பொருளாதார மத்திய நிலையம்.... • காய்கறிகளைக் கொண்டு செல்வதற்கு புகையிரத சேவையை பயன்படுத்திக் கொள்வது தொடர்பிலும் கவனம்.... உலக...

கண்டி மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது!

• கண்டியில் தலா 100 மில்லியன் ரூபாய் வீதம் 400 மில்லியன் செலவில் 04 தேசிய பாடசாலைகள்.... • கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தலா 2000 ரூபாய் வீதம் போhக்கு பொதி.... • ஆயுர்வேதம் என்ற பெயரில் இயங்கும் போலி மசாஜ் பார்லர்கள் மீது சோதனை நடத்தி சட்ட நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை.... • மத்திய மாகாணத்தில்...