Ad Widget

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் ட்ரோன் கமராக்கள் மூலம் கண்காணிப்பு

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை கண்காணிக்க விமானப் படையின் உதவியுடன் ட்ரோன் கமராக்களைப் பயன்படுத்தி இன்று மாலை சிறப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார். இன்றைய நிலவரப்படி நாடுமுழுவதும் 29 ஆயிரத்து 206 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 80 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்...

இலங்கையில் 5 இறப்புகள் மாத்திரமே கொரோனாவால் ஏற்பட்டவை – இராணுவத் தளபதி

இலங்கையில் 5 இறப்புகள் மாத்திரமே கொரோனாவால் ஏற்பட்டவை என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சின் செயலாளர் இதை உறுதிப்படுத்தியதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார். கொரோனா நோயாளிகள் வீடுகளில் இறந்தது குறித்து இன்று (வியாழக்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், நாட்டின் 5 இறப்புகள் மாத்திரமே...
Ad Widget

கடமைகளிலிருந்து ஓய்வு பெறுகிறார் மஹிந்த மஹிந்த தேசபிரிய!

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய இன்று வியாழக்கிழமையுடன் ஓய்வு பெறவுள்ளதாக அறிய முடிகின்றது. 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் கீழ் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகின்றது. புதிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் எதிர்வரும் வாரமளவில் நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாராளுமன்றத்தில் அண்மையில்...

ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்திய மூவர் கைது!!

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்டனர் என்ற குற்றசாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் மாநகர் பகுதியில் வசிக்கும் ஊடகவியலாளரான எஸ். முகுந்தன் என்பவர் மீது நேற்றைய தினம் புதன்கிழமை, வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தி, அவரது அலைபேசியும் பறித்து சென்றது. நாடுமுழுவதும் கோரோனோ தொற்று அதிகரித்து வரும் நிலையில்...

தொற்றா நோயுள்ளோருக்கு கோவிட் -19 பாதித்தால் சிறப்புக் கவனம் தேவை; மேல் மாகாணத்தில் உள்ளோரை ஏனைய மாகாணங்களுக்கு அனுமதிக்கவேண்டாம்-ஜனாதிபதி

தொற்றா நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை கோவிட்-19 நோய்த்தொற்றில் இருந்து பாதுகாப்பதற்கு சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஏனைய நாடுகளைப் போன்று எமது நாட்டிலும் பதிவாகியுள்ள கோவிட்-19 உயிரிழப்புகளின் எண்ணிக்கையில் 93 வீதமானவற்றுக்கு காரணம் தொற்றா நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாகும் என்று மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இருதய நோய், நீரிழிவு,...

தாக்குதலுக்கு தயாராகவிருந்ததாக இளைஞர் ஒருவர் வாளுடன் கைது

தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு வீட்டில் வாள் ஒன்றை மறைத்து வைத்திருந்த இளைஞர் ஒருவர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் மாவட்ட சிறப்புக் குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கோப்பாய் ஜிபிஎஸ் வீதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். வன்முறைகளுடன் தொடர்புடைய சிலர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களுடன் அலைபேசியில் தொடர்பில் இருக்கும் சந்தேக...

கிளிநொச்சியில் மூன்றாவது கொரோனா தொற்றாளர் கண்டறிவு!

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 347 பேருக்குநேற்றைய தினம் கொரோனாவுக்கான பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இந்நிலையில், கிளிநொச்சி கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த நபர், கொழும்பில் பணிபுரிவதுடன் வெள்ளவத்தையிலிருந்து கோணாவிலுக்கு வந்த நிலையில்...

இலங்கையை அச்சுறுத்தும் கொரோனா: கடந்த 24 மணித்தியாலங்களில் 5 பேர் உயிரிழப்பு – 635 பேருக்கு தொற்று

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 5 மரணங்கள் பதிவாகியதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி கொழும்பு 10 மாளிகாவத்தை பகுதியை சேர்ந்த 68 வயதான பெண் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். பிரேத பரிசோதனையில், அவருக்கு தொற்று அதிகரித்தமையால் ஏற்பட்ட மாரடைப்பால் இந்த மரணம் சம்பவித்துள்ளதாக அரசாங்க தகவல்...