Ad Widget

கோரோனா வைரஸ் அச்சத்தால் இலங்கையில் இருவர் உயிர்மாய்ப்பு!!

கோவிட் – 19 நோய் காரணமாக அச்சம் மற்றும் பதற்றம் காரணமாக இரண்டு பேர் உயிரை மாய்த்துள்ளனர் என்று பொலிஸார் மற்றும் சுகாதாரத் துறையினரின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அகலவத்தை மற்றும் ஜா-எலவைச் சேர்ந்த இரண்டு பேர் இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளனர். இலங்கை போக்குவரத்துச் சபையின் சாரதியாகப் பணிபுரிந்த 56 வயது நபர் நேற்று அகலவத்தையில்...

உண்ணி காய்ச்சல் தொடர்பில் அவதானம் தேவை – வைத்தியர் சி.யமுனாநந்தா

உண்ணி காய்ச்சல் தொடர்பில் அவதானம் தேவை என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். தற்பொழுது பரவிவரும் உண்ணி காய்ச்சல் நோய் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், தற்பொழுது கொரோனா நோய்த்தொற்று பரவி வரும் காலத்தில் எமது பிரதேசத்தில் காய்ச்சல் நோயுடன் பலர் சிகிச்சைக்கு வருகிறார்கள் இந்நிலையில் காய்ச்சல் எவ்வாறு வருகிறது என...
Ad Widget

பாடசாலை ஆரம்பிக்கும் திகதியை அறிவித்தார் கல்வி அமைச்சர்!!

பாடசாலைகளின் மூன்றாம் தவணைக் கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இரண்டாம் தவணை விடுமுறையின் பின்னர் பாடசாலைகளில் இன்று மூன்றாம் தவணைக் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் நாட்டில் தற்போதுள்ள கொரோனா தொற்று...

“கொழும்புக்கு பயணிப்பதைத் தவிருங்கள்” – இராணுவத் தளபதி

கொழும்புக்கான பயணத்தை அவசர தேவை கருதி மேற்கொள்ள வேண்டும் என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா கேட்டுள்ளார். “தற்போதைய சூழலில் கொழும்புக்கான பயணத்தைத் தவிர்க்கவேண்டும். அவசர விடயத்தைத் தவிர ஒருவர் கொழும்புக்கு வரக்கூடாது” என்று அவர் சுட்டிக்காட்டினார். கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் கூடுதலான கோரோனா தொற்றாளர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த...

கிராம அலுவலகர் மீது கொண்ட சந்தேகம்தான் அவரைக் கொலை செய்வதற்கு காரணம் – சந்தேக நபர்

மாந்தை மேற்கு பிரதேச செயலக நிர்வாக கிராம அலுவலகர் மீது கொண்ட சந்தேகம்தான் அவரைக் கொலை செய்வதற்கு காரணம் என்று சந்தேக நபர் தெரிவித்துள்ளார். அத்துடன், சந்தேக நபருக்கு எதிராக அவருடன் சம்பவ இடத்தில் நின்ற இளைஞன் அரச சாட்சியாக மாறியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். “எனது இரட்டைக் குழந்தைகளில் ஒன்றை தான் வளர்ப்பதற்குத் தருமாறு...

யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு பல்வேறு அபிவிருத்தி திட்டங்களுடனான ‘கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டம்

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ நாமல் ராஜபக்ஷ அவர்களின் எண்ணக்கருவிற்கமைய, ஜனாதிபதி செயலணியின் ஒப்புதலின் கீழ், பிரதமர் அலுவலகத்தின் ஊடாக செயற்படுத்தப்படும் 'கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டத்தின்' மற்றுமொரு கட்டம் 2020.11.08 (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய இரு மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் யாழ். மாவட்ட செயலாளர் அலுவலக கேட்போர்...

யாழ். துரையப்பா மைதானம் விரைவில் புனரமைக்கப்படும் – அமைச்சர் நாமல்

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானம் வடக்கின் சிறந்த மைதானமாக விரைவில் தரமுயர்த்தப்படவுள்ளதாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தினை இன்று (திங்கட்கிழமை) காலை பார்வையிட்டதோடு குறித்த விளையாட்டு மைதானத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் ஆராய்ந்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அமைச்சர்...

நிதிநிறுவன மோசடியாளரை இந்தியாவுக்கு அழைத்துச் சென்றவர் சிக்கினார்!!

வாடிக்கையாளர்கள் வைப்பிலிட்ட பணத்தை மோசடி செய்து கொண்டு இந்தியாவுக்குத் தப்பித்த தனியார் நிதி நிறுவன உரிமையாளரின் குடும்பத்தை படகில் ஏற்றிச் சென்ற வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர் காவல்துறைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் இந்தியாவுக்குச் சென்று வந்திருக்கலாம் என்ற அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். தமிழக காவல்துறையினாிடம் நிதி நிறுவன உரிமையாளர் வழங்கிய வாக்குமூலம் கிடைத்ததும் படகு உரிமையாளர் கைது செய்யப்படுவார்...

சுகாதார பாதுகாப்பு ஆலோசனைகளுடன் புகையிரத சேவைகள்!!

சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை கடுமையான முறையில் பின்பற்றி இன்று தொடக்கம் காலை, மாலை அலுவலக புகையிரதங்கள் சேவையில் ஈடுப்படுத்தப்படும் என புகையிரத நிலைய அதிபர் சங்கத்தின் பிரதான செயலாளர் கசுன் சாமர தெரிவித்தார். மேல்மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு சில பிரதேசங்கள் அடையாளப்படுப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இப்பிரதேசங்களில் புகையிரத சேவைகள் மறு அறிவித்தல் விடுக்கும்...

பல இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கான சாத்தியம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும்...

கிராம அலுவலகர் கொலை; பெண் கிராம அலுவலகரின் கணவர் கைது!!

மாந்தை மேற்கு பிரதேச செயலக நிர்வாக கிராம அலுவலகரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். “ஆடு மேய்ப்பவர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் மாந்தை மேற்கு பிரதேச செயலக பெண் கிராம அலுவலகர் ஒருவரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அணிந்திருந்தது எனச் சந்தேகிக்கப்படும் குருதிக் கறை படிந்த சேட் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது....

வட்டுக்கோட்டையில் ஐம்பொன் சிலைகள் குளத்துக்குள் புதைக்கப்பட்ட நிலையில் மீட்பு!!

வட்டுக்கோட்டை – சங்கானை ஓடக்கரை நாகதம்பிரான் ஆலயத்துக்கு அண்மையாக உள்ள குளத்துக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (நவ.8) மாலை 4 மணியளவில் அந்த இடத்துக்கு வந்த இராணுவத்தினர், குளத்துக்குள்ளிலிருந்து சிலைகளை மீட்டெடுத்தனர். சுமார் 68 வருடங்களுக்கு முற்பட்ட முருகன், 3 மயில்கள், கலசம் ஆகிய...

வடக்கு இளைஞர்களும் என்னைப்போல் அரசியலுக்கு வரவேண்டும் – நாமல்

என்னைப்போல் வட பகுதிகளில் இருந்தும் இளைஞர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டு அமைச்சுகளை பொறுப்பெடுத்து யாழ்ப்பாண மாவட்டத்தில் அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டும் என இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். யாழ்ப்பாணம் இளைஞர் சேவைகள் மன்றத்தின் யாழ் மாவட்ட தலைமை காரியாலயத்தினை நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைத்து உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்...

நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 35ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் 78 வயதான ஆண் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததாகவும் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் கொரோனா தொற்று இருந்தமை தெரியவந்ததாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அவரது மரணத்துக்கான காரணம்...

மேல் மாகாணத்தில் நீக்கப்பட்டது ஊரடங்கு – பல இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டன!

மேல் மாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் அமுலில் இருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது. எனினும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்கள் அடையாளம் காணப்படும் சில பகுதிகள் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் மட்டக்குளி, டேம் வீதி, முகத்துவாரம், புளுமெண்டல், கொட்டாஞ்சேனை, கிரான்ட்பாஸ்,...