. November 6, 2020 – Jaffna Journal

கொரோனாவிலிருந்து விடுபட வீடுகளிலிருந்தே தீபாவளியை கொண்டாடுங்கள் – இரா.சம்பந்தன்

தற்போது நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள இந்து சமய மக்கள் அனைவரும் இவ் வருட தீபாவளியை வீட்டிலிருந்தே கொண்டாடுமாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்ப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் அவர்கள் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள... Read more »

அரசியல் கைதிகளின் விடுதலையை அரசியலாக்க வேண்டாம்- சி.வி.விக்னேஸ்வரன்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை அரசியலாக்க வேண்டாமென நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்று வடக்கின் முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் நீதியமைச்சரிடம் கேள்வி எழுப்பி இருந்தார். இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக கருத்து... Read more »

கரவெட்டியில் அடையாளம் காணப்பட்ட கோவிட் -19 நோயாளிகள் மூவருடன் தொடர்புடையோரின் விவரத்தைக் கோருகிறது சுகாதாரத் துறை!

கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் நேற்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் மற்றும் சிறுவன் ஒருவனுக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களின் விவரங்களை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. இவ்வாறு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்... Read more »

மன்னாரில் பதில் கிராம அலுவலகரின் படுகொலைக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்

மன்னார்- மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் கிராம அலுவலகர்களுக்கான பதில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றிய இலுப்பைக் கடவை கிராம அலுவலரான எஸ்.விஜியேந்திரன்(வயது-55) என்பவருடைய கொலையை கண்டித்தும், படுகொலைக்கு நீதி வேண்டியும் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேற்கு பிரதேச செயலக பணியாளர்கள், இன்று (வெள்ளிக்கிழமை) காலை... Read more »

மேல் மாகாணத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது – இராணுவ தளபதி

மேல் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவுவது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். இதன்படி, தற்போது மாகாணத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு அடுத்த திங்கட்கிழமைக்குள் நீக்கப்படும் என்று அவர் கூறினார். இந்தக் காலகட்டத்தில் அப்பகுதியில் பாதிக்கப்பட்ட அனைவரையும் அடையாளம் காணுமாறும் ஜனாதிபதி... Read more »

கோப்பாய் தனிமைப்படுத்தல் நிலையத்தில் மதுபோதையில் கடமையிலிருந்த பொலிஸார் இருவர் பணி இடைநீக்கம்!!

கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மற்றும் கோவிட் -19 சிகிச்சை நிலையத்தில் பாதுகாப்புக் கடமைக்கு அனுப்பப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர், மதுபோதையில் இருந்தமை மற்றும் கடமையைச் செய்யத் தவறிய குற்றச்சாட்டில் சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் நேற்று நள்ளிரவு... Read more »

நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் ஐவர் உயிரிழப்பு!

நாட்டில் கொரோனா வைரஸ் தொ்றறினால் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் இருவர் ஆண்கள் எனவும் மூவர் பெண்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்கள் கொழும்பு 02, 12, 14, 15 மற்றும் வெல்லம்பிட்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »

யாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று!

யாழ்ப்பாணம், கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்றையதினம் (வியாழக்கிழமை) கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்களில் இரண்டு பெண்களும் சிறுவனும் உள்ளடங்குவதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.... Read more »

வடக்கில் நான்காவது கொரோனா சிகிச்சை நிலையமானது மாங்குளம் வைத்தியசாலை!!

வடக்கு மாகாணத்தில் நான்காவது கொரோனா சிகிச்சை நிலையமாக மாங்குளம் ஆதார வைத்தியசாலையின் ஒரு பிரிவு மாற்றப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தினால் இந்தப் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. 30 நோயாளர் படுக்கைகளைக் கொண்ட கொரோனா சிகிச்சை நிலையமாக இந்தப் பிரிவு... Read more »

ஒரு மீற்றர் இடைவெளி என்பதை முடிந்தளவு மக்கள் பின்பற்ற வேண்டும்- அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

ஒரு மீற்றருக்கு மேல் வைரஸ் பயணிக்காது என்று கூற முடியாது. எனவே ஒரு மீற்றர் இடைவெளி என்பதை விட முடிந்தளவு ஒரு மீற்றர் அல்லது அதனை விட கூடிய இடைவெளியைப் பேணுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே... Read more »