Ad Widget

இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் 22 ஆவது மற்றும் 23 ஆவது மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கொட்டாஞ்ச்சேனை பகுதியை சேர்ந்த 68 வயதான பெண் ஒருவரும் கிராண்ட்பாஸைச் சேர்ந்த 81 வயதுடைய ஒரு பெண்ணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்கள் இருவரும் கொரோனா தொற்று உறுதியாகி கொழும்பு தேசிய அவைத்தியசாலையில் சிகிசிச்சை பெற்றுவந்தவர்கள் என சுகாதார...

தென்மராட்சி கடல் நீரேரி பெருக்கெடுப்பு!

தென்மராட்சி கடல் நீரேரி பெருக்கெடுத்துள்ளமையால் நீரேரியை அண்டிய பகுதிகளில் வசித்த மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி சனசமூக நிலைய கட்டடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். கடல் சில தினங்களாக ஊர்காவற்துறை , நாவாந்துறை , பூநகரி கடல் பெருக்கெடுத்திருந்தது. இந்நிலையில் தற்போது தென்மராட்சி கடல் நீரேரியும் பெருக்கெடுத்துள்ளது. அதனால் கடல் நீரேரியை அண்டிய பகுதிகளில் தற்காலிக வீடுகளில்...
Ad Widget

கிளிநொச்சி கொரோனா தொற்றாளரின் பயண விபரங்கள்!

கிளிநொச்சியில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளரின் பயண விபரங்கள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணம் நல்லூரடியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளரிற்கு சொந்தமான, கொழும்பு உணவகத்திலேயே இந்த நபரும் பணியாற்றினார். அந்த உணவகத்தில் பணியாற்றிய மேலும் 3 பேர் புங்குடுதீவு, வேலணை பகுதிகளில் அடையாளம் காணப்பட்டிருந்தனர். கிளிநொச்சியில் அடையாளம் காணப்பட்ட நபர், மயூரா ஹோட்டல், இல.46, கதிரேசன்...

பாண் வழங்கலின் போது கோரோனா வைரஸ் பரவும் அபாயம்!

கோரோனா வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரத்துறை மிகக் கடினமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில் பாண் மற்றும் வெதுப்பக உற்பத்தி உணவுகள் விநியோகம் தொடர்பாக உரிய அக்கறை எடுக்கவில்லை என சுட்டிக்காட்டப்படுகின்றது. வடக்கு – கிழக்கு மட்டுமன்றி நாட்டின் சகல இடங்களிலும் பொதுமக்களின் அன்றாட உணவாக வெதுப்பக உற்பத்திகளான பாண், பணிஸ், கேக் போன்றன பயன்படுத்தப்படுகின்றன....

பாடசாலை மாணவர்களுக்கான கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு!

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக அரச பாடசாலைகளை ஆரம்பிப்பது இரண்டு வாரங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது. நவம்பர் ஒன்பதாம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவிருந்த கல்வி நடவடிக்கைகள் மேலும் இரண்டு வாரத்திற்கு நீடிப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர், பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். அதன்படி, இரண்டாம் தவணைக்கான பாடசாலை விடுமுறை எதிர்வரும் 23ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா...

இலங்கையில் கொரோனா மரணம் 21ஆகக் குறைந்தது!

கொரோனாவால் மரணித்தார் என நேற்று அறிவிக்கப்பட்ட 22ஆவது நபர் தற்கொலை செய்து கொண்டவர் என்பதால், அவர் கொரோனா தொற்றினால் மரணித்தார் எனக் கருதமுடியாது என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவின் விசேட மருத்துவ நிபுணர் சுதத் சமரவீரவை மேற்கோள்காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் தமது அறிக்கையில் இந்த விடயத்தை வெளியிட்டுள்ளது. தற்கொலைக்கு...

கிளிநொச்சி மாவட்டத்தில் முதலாவது கொரோனா தொற்றாளர் அடையாளம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் முதலாவது கொரோனா வைரஸ் நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளார். கிளிநொச்சி கண்டாவளை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில், தரும்புரம் மூன்றாம் யுனிட்டைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று (திங்கட்கிழமை) இரவு கண்டறியப்பட்டுள்ளது. கொழும்பு கொட்டாஞ்சேனையில் இயங்கும் மயூரா உணவகத்தில் பணியாற்றும் பணியாளருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரது...

கொரோனா வைரஸுக்கு வயது இடைவெளி கிடையாது – மக்களுக்கு எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு வயது இடைவெளியானது பாரிய தாக்கத்தை செலுத்தாது என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் பாலித்த கருணாப்பிரேம தெரிவித்தார். தொலைக்காட்சியொன்றில் இடம்பெற்ற விசேட நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றும்போாத அவர் இவ்வாறு தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொற்று வயது கூடியவர்களையே அதிகம் தாக்கும் என பொதுவான கருத்தொன்று நிலவும் நிலையில் அவர்...

மந்திரவாதியின் ஆலோசனைக்கு அமைவாக செயற்படும் சுகாதார அமைச்சர்!!

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு ‘மந்திரவாதி மருத்துவரின்’ ஆலோசனைக்கு அமைவாக செயற்படும் சுகாதார அமைச்சரின் செயற்பாட்டினால் சர்வதேசத்தின் மத்தியில் எமது நாடு நகைப்பிற்குரியதாக மாறியுள்ளதென முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியும் மேலும் சிலரும் மதரீதியான சடங்கில் ஈடுபடும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி...