Ad Widget

20ஆவது திருத்தச் சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்தது!!

ஜனாதிபதிக்கு அதிகாரங்களை வழங்கும் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டம் இன்று தொடக்கம் நடைமுறைக்கு வந்துள்ளது என்று நாடாளுமன்ற செயலாளர் நாயம் அறிவித்துள்ளார். அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தில் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன இன்று கையொப்பமிட்ட நிலையில் இந்த அறிவிப்பு நாடாளுமன்ற ஊடகப் பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 19ஆவது திருத்தச் சட்டத்தின் படி மட்டுப்படுத்தப்பட்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை...

மதுபானம் அருந்திய இளைஞர் உயிரிழப்பு!

மதுபானம் அருந்திய இளைஞர் இரத்த வாந்தி எடுத்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி , பூநகரி 4ஆம் கட்டையை சேர்ந்த ஜேசுராஜா திலகராஜா (வயது 30) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) மதுபானம் அருந்திய நிலையில் இரத்த வாந்தி எடுத்துள்ளார். அதனை அடுத்து சிகிச்சைக்காக கிளிநொச்சி மருத்துவ மனையில்...
Ad Widget

தீவக பகுதியின் கட்டக்காலி பிரச்சனைக்கு உடன் தீர்வு – அங்கஜன் எம்.பி

வேலணை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் நடமாடி திரியும் கட்டாக்காலி மாடுகள் தொடர்பான பிரச்சனை தொடர்பில் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் கவனம் கொண்டு செல்லப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நேற்று (28) காலை வேலணை பிரதேச செயலகத்தில் கட்டக்காலி மாடுகள் தொடர்பான கூட்டத்தொடர் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில்...

கரவெட்டி” ராஜகிராமம்” இன்று இரவு முடக்கப்படலாம்?

கரவெட்டி” ராஜ கிராமம் “இன்று இரவிலிருந்து முடக்கப்படக்கூடிய சாத்தியக் கூறு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது, கரவெட்டி ராஜ கிராம பகுதியில் 70 குடும்பத் திற்கும் மேற்பட்டோர் சுய தனிமைப் படுத்தப் பட்டுள்ள நிலையில் இன்று அப்பகுதியைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்டோருக்கு pcr பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவினை பொறுத்து குறித்த பகுதி இன்று இரவிலிருந்துமுடக்கப்பட கூடிய சாத்தியக்கூறு...

PCR பரிசோதனைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களில் பழுது!! சீரமைக்க சீனா பொறியியலாளர் வரவேண்டும்!!

நாட்டின் பெரும்பாலான பிசிஆர் பரிசோதனைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் செயல்படவில்லை என்று இராணுவத் தளபதி, லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 20 நாள்களுக்கு 24 மணி நேரமும் இந்த இயந்திரம் பயன்படுத்தப்படுவதால் அவை செயலற்றதாக இருந்திருக்கலாம். இயந்திரங்களைச் சீர்செய்ய தொழில்நுட்பவியலாளர்கள் பெரும் முயற்சி செய்தார்கள், ஆனால் அது வெற்றிபெறவில்லை என்று அவர் குறிப்பிட்டார். “பிசிஆர் பரிசோதனை இயந்திரங்களைச்...

ஆனையிறவு விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தாயும் மகனும் பரிதாபச் சாவு

எரிபொருள் பவுசரும் முச்சக்கர வண்டியும் மோதி ஏற்பட்ட விபத்தில் தாயும், மகனும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆனையிறவு பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது என்று கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். எனினும் அவர்கள் இருவரும் உயிரிழந்தனர் என்று மருத்துவ அறிக்கை...

மருதனார்மடம் பொதுச்சந்தை வியாபாரிகள் கவனயீர்ப்பு!!

“வலி. தெற்கு பிரதேச சபையே வியாபாரிகளான எமது வயிற்றில் அடிக்காதே” என பதாதைகளை தாங்கியவாறு மருதனார்மடம் பொதுச்சந்தை வியாபாரிகள் இன்றையதினம் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்குற்பட்ட மருதனார்மடம் பொதுச்சந்தை வியாபாரிகள் இன்றையதினம் தமது வியாபார நடவடிக்கையில் ஈடுபடாது சந்தைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மருதனார்மடம் பொதுச் சந்தையில் புதிதாக அமைக்கப்பட்டு...

யாழில் மூவருக்கு கொரோனா தொற்று!

யாழ்ப்பாணத்தில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த இருவருக்கும் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேற்படி மூவரும் பேலியகொட மீன் சந்தைக்குச் சென்று வந்து தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, விடத்தல்பளையில் தனிமைப்படுத்தலில்...

மத வழிபாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

மத வழிபாடுகளுக்காக மக்களை ஒன்றிணைக்கும் போது 50 பேருக்கு குறைந்த நபர்களை ஒன்றிணைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசேடமாக எதிர்வரும் போயா தினத்தில் அதிகளவான கவனம் செலுத்துமாறு இதன்போது வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வழமை போன்று மத வழிபாடுகளை முன்னெடுக்க முடியாது...