. October 23, 2020 – Jaffna Journal

சர்வதேசத்தின் மத்தியஸ்தத்துடன் தமிழ் தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும் – எம்.கே.சிவாஜிலிங்கம்

சிங்கள் பெளத்த ஆட்சியினுடைய உக்கிரமான நிலைப்பாடுதான் 20 வது திருத்த நிறைவேற்றம் எனத் தெரிவித்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தமிழ்த்தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து சர்வதேச நாடுகளின் பங்களிப்புடன் இனப் பிரச்சினைக்கான தீர்வை நேக்கிய பயணத்தை ஒன்றிணைந்து மேற்கொள்ளவேண்டும் எனத் தெரிவித்தார். 20... Read more »

மாயமான கொரோனா தொற்றாளர் கண்டுபிடிப்பு!

கொஸ்கம சாலாவ வைத்தியசாலையில் இருந்து தப்பிச்சென்ற கொரோனா தொற்றாளர் பொரளை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் பொரளை பகுதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்பு தொகுதியொன்றில் இருந்து இன்று நண்பகல் பொரளை பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித்... Read more »

கோரோனா நோயாளி தப்பி ஓட்டம்; கண்டுபிடிக்க பொதுமக்களிடம் உதவிக் கோரிக்கை

கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நோயாளி ஒருவர் கொஸ்கம வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக கொவிட் 19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது அவரை அடையாளம் காண்பவர்கள் உடனடியாக 119 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அறியத்தருமாறு பொலிஸார் கேட்டுள்ளனர். 26 வயதுடைய... Read more »

கோப்பாய் தனிமைப்படுத்தல் முகாமில் 3 பேருக்கு திடீர் சுகயீனம்!

கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 3 பேர் திடீர் சுகயீனம் ஏற்பட்டதன் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் வெளி மாவட்டத்தை சேர்ந்த பலர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு... Read more »

வீடு புகுந்து வன்முறைக் கும்பல் தாக்குதல்; பெண் உள்பட இருவர் காயம்!!

மல்லாகம் நீலியம்பனை பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் பெண் உள்பட இருவரைத் தாக்கியதுடன் வீட்டிலிருந்த பெறுமதியான தளபாடங்கள் மற்றும் பொருள்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பித்துள்ளது. இந்தச் சம்பவம் நேற்றையதினம் மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றது என்று தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில்... Read more »

அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே தொடருந்தில் பயணம் செய்யுங்கள் – ரயில்வே அறிவிப்பு

அத்தியாவசிய தேவைக்காக மாத்திரம் தொடருந்து சேவைகளைப் பயன்படுத்துமாறு ரயில்வே திணைக்களம் பயணிகளிடம் கேட்டுள்ளது. இது தொடர்பில் ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் டிலந்த பெர்ணான்டோ தெரிவித்ததாவது; கோவிட்-19 வைரஸ் பரவல் தாக்கத்தின் காரணமாக தொடருந்து சேவையை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை கடந்த வாரம் மிகக்... Read more »

இலங்கையில் கோரோனா தொற்றால் 14ஆவது நபர் உயிரிழப்பு!!

கோவிட் -19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட குளியாபிட்டியவைச் சேர்ந்த 50 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதன்மூலம் நாட்டில் கோரோனா வைரஸ் தொற்றால் 14ஆவது நபர் உயிரிழந்துள்ளார். நிமோனியா மற்றும் இதய நிலை காரணமாக கொழும்பு தேசிய தொற்று நோயியல்... Read more »

பொது அறிவுப் பரீட்சையில் 30 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருந்தால் இம்முறை தோற்றவேண்டியது அவசியமில்லை!!

நடைபெற்றுவரும் 2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் ஒரு தடவைக்கு மேல் தோற்றுபவர்கள் பொது அறிவுப் பரீட்சையில் முன்னைய ஆண்டில் 30 புள்ளிகள் அல்லது அதற்கு மேல் பெற்றிருந்தால் இம்முறை அந்தப் பாடத்துக்கான பரீட்சைக்குத் தோற்றவேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு பரீட்சைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.... Read more »

20ஆவது திருத்த சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 91 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்!

அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 91 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான நேற்றைய இரண்டாம் நாள் விவாதத்தைத் தொடர்ந்து குறித்த வாக்கெடுப்பு இடம்பெற்றிருந்தது. இதன்போது ஆதரவாக 156... Read more »

நாட்டை முடக்குவது குறித்து முக்கிய அறிவிப்பினை வெளியிட்டார் இராணுவத்தளபதி!

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் முழுமையான முடக்க செயற்பாடுகளை அமுல்படுத்துவது தொடர்பில் எந்தவித தீர்மானங்களும் எட்டப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு தேசிய செயலணியின் தலைவர் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் முடக்க செயற்பாடுகளை அமுல்படுத்தல் மற்றும் வார இறுதி... Read more »

வித்தியாரம்பம் செய்வதற்கு எதிர்வரும் 26ஆம் திகதியே சிறந்தநாள் – ஐயப்பதாச குருக்கள்

வித்தியாரம்பம் செய்வதற்கு (ஏடு தொடக்குதல்) எதிர்வரும் 26ஆம் திகதி திங்கட்கிழமையே சிறந்ததென சர்வதேச இந்துமத குருபீடாதிபதி ஐயப்பதாச குருக்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘தசமியில் வித்யாரம்பம் செய்வது குழந்தைகளுக்கு நல்ல ஞானத்தைக் கொடுக்கவல்லது. நாளை மறுதினம் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நண்பகல்... Read more »