Ad Widget

நாட்டில் மேலும் 61 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 61 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 58 பேர் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்கள் எனவும் ஏனைய மூவர் குறித்த தொழிலாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இதுவரை மினுவங்கொட கொரோனா...

20 ஆவது திருத்தச் சட்டத்தினால் தமிழ் மக்களுக்கு பாதிப்பில்லை : அமைச்சர் டக்ளஸ்

கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அறுவடைக்குப் பின்னரான இழப்பு வீதத்தினை குறைப்பதற்கு கனேடிய அரசாங்கத்தின் அனுபவத்தினையும் தொழில்நுட்ப உதவிகளையும் வரவேற்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கனேடிய உயர் ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சிற்கு இன்று(16.10.2020) வருகை தந்த கனேடிய உயர் ஸ்தானிகர் டேவிட் மைக்கினன் உடனான கலந்துரையாடலின் போதே கடற்றொழில் அமைச்சரினால் குறித்த...
Ad Widget

உழவு இயந்திரம் மோதி பொலிஸ் சார்ஜென்ட் பலி!!

முல்லைத்தீவு, கொக்கிளாய் வீதியில் சிலாபத்துறை பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில், முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து நேற்றிரவு (15) இடம்பெற்றுள்ளது. கொக்கிளாய் நோக்கி பயணித்த உழவு இயந்திரமொன்று, வீதி போக்குவரத்து கடமையிலிருந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மோதியுள்ளதாக, பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதில் படுகாயமடைந்த குறித்த பொலிஸ்...

உயர்தர பரீட்சைகள் முடிந்ததும் எந்தவொரு தனியார் பேருந்துகளும் இயக்கப்படாது!!

க.பொ.த. உயர்தர பரீட்சைகள் முடிந்ததும் எந்தவொரு தனியார் பேருந்துகளும் இயக்கப்படாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், “க.பொ.த. உயர்தர பரீட்சைகள் அடுத்த மாதம் 09ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளன. அதன் பின்னர் எந்தவொரு தனியார் பேருந்துகளும் இயக்கப்பட மாட்டாது. பாரிய தொழிற்சங்க நடவடிக்கையொன்று...

யாழில் கைக்குண்டுடன் இளைஞர் கைது!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்னால் கைக்குண்டு ஒன்றுடன் இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவத்தில் கிளிநொச்சி- பரந்தன் பகுதியைச் சேர்ந்த 22வயதுடைய இளைஞரையே பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள இளைஞன், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு முன்பாக மோட்டார் சைக்கிளுடன் சந்தேகத்திற்கிடமாக நின்றுள்ளார். இதனை அவதானித்த பொலிஸார் அவரை சோதனைக்கு உட்படுத்தியபோது,...

யாழ்.மாநகர சபை உறுப்புரிமையிலிருந்து மணிவண்ணனை நீக்குமாறு தேர்தல் அதிகாரிக்கு தமிழ் காங்கிரஸ் கடிதம்

யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர்கள் சட்டத்தரணி வி.மணிவண்ணன், மயூரன் ஆகிய இருவரது உறுப்புரிமையை நீக்குமாறு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், யாழ்ப்பாணம் உதவித் தேர்தல் ஆணையாளருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளது. இதுதொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் செயலாளருக்கும் அந்தக் கடிதத்தின் பிரதி அகில இலங்கை தமிழ் காங்கிரஸால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் தேசிய...

சுகாதார வழிகாட்டுதல்கள் அடங்களான விசேட வர்த்தமானி வெளியானது!

தனிமைப்படுத்தல் தொடர்பில் புதிய சட்டங்கள் உள்ளடக்கப்பட்ட விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பேணல் மற்றும் முகக் கவசங்களை அணிதல் உள்ளிட்ட பிரதான சுகாதாரப் பாதுகாப்பு முறைகள், குறித்த வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ளன. சட்டங்களை மீறும் நபர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாவுக்கு மேற்படாது அபராதம் விதிக்கவும், ஆறு மாத கால சிறைத் தண்டனை விதிக்கவும்...

நாட்டில் தற்போது மிகவும் அபாயகரமான ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!!

நாட்டில் தற்போது மிகவும் அபாயகரமான ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “தற்போது ஏற்பட்டுள்ள அலை அல்லது கொத்தனி மிகவும் கடுமையானது. நாளாந்தம் நுறு இருநூறு என நோயார்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்றார்கள். ஆனால் 15, 20...

தமிழ் அரசியல்வாதிகளுக்கு சுமந்திரன் முக்கிய அறிவிப்பு!

20வது திருத்த சட்டத்திற்கு அனைத்து தமிழ் அரசியல்வாதிகளும் எதிராக வாக்களிக்கவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடியில் 20வது திருத்தம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.கே.சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக...