Ad Widget

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 49 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 13 பேரும் அவர்களுடன் நெருங்கிப் பழகிய 36 பேரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மினுவாங்கொடை தனியார் ஆடைத்தொழிற்சாலையை அடிப்படையாக கொண்டு அடையாளப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 770 ஆக உயர்வடைந்துள்ளது.

யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் PCR பரிசோதனைகள்!

பல்கலைக்கழகங்களில் PCR பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனைத் தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சின் செயலாளரினால் எழுத்து மூலம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கோரிக்கை தொடர்பில், அனைத்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கும் அறிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அனைவரும் அதற்கு...
Ad Widget

கொரோனா வைரஸ் சிகிச்சை நிலையங்களில் 168 படுக்கைகள் மாத்திரமே உள்ளதாக அறிவிப்பு!!

இலங்கையில் உள்ள 12 கொரோனா வைரஸ் சிகிச்சை நிலையங்களில் மொத்தம் 168 படுக்கைகள் மாத்திரமே உள்ளன என்று கொவிட் -19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் (NOCPC) தெரிவித்துள்ளது. மினுவங்கொடையில் புதிய கொரோனா தொற்றாளர்கள் அதிகம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து 1,544 படுக்கைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அந்த மையம் குறிப்பிட்டுள்ளது. இதேநேரம் மினிவங்கொட கொத்தணியில் கண்டறியப்பட்ட கொரோனா...

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய மாவட்டச் செயலராக கணபதிப்பிள்ளை கருணாகரன் நியமனம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய மாவட்டச் செயலாளராக இலங்கை அரச நிர்வாக சேவையில் மூத்த அதிகாரியான கணபதிப்பிள்ளை கருணாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, களுதாவளை பிரதேசத்தினை சேர்ந்த அவர், இலங்கை நிர்வாக சேவை சிறப்புத் தரத்தில் உள்ளவர். கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி மற்றும்...

யாழ். பல்கலைக்கழகத்தில் இம்சை வதையில் ஈடுபட்ட மாணவர்களுக்குக் கடும் தண்டனை அறிவிப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புதுமுக மாணவர்கள் மீது இம்சை வதை புரிந்த சிரேஷ்ட மாணவர்களின் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்குக் கடுமையான தண்டனைகளை வழங்குமாறு பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபை பரிந்துரைத்துள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபையின் இரண்டாவது கூட்டம் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தின் போது, கடந்த மாதம் மூன்றாம் திகதி சித்த...

வேலைக்கு செல்வோர் பொதுப்போக்குவரத்தில் பயணிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை!

வேலைக்கு செல்வோர் பொதுப்போக்குவரத்தில் பயணிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா கொத்தணியானது சமூகத்தில் பல்வேறு இடங்களில் விஸ்தரித்துள்ளது. இருப்பினும் சென்ற முறைப் போன்று நாடளாவிய ரீதியில் முடக்கப்படாமல் குறிப்பிட்ட...

நாட்டின் மற்றுமொரு பகுதியில் அமுல்படுத்தப்பட்டது ஊரடங்கு!

கட்டுநாயக்கா பொலிஸ் பிரிவில் இன்று(வியாழக்கிழமை) அதிகாலை 5.00 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுப்படுத்தப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரை இது அமுலில் இருக்கும் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்த நிலையில், கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலையத்தின் தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களின் நிறுவன அனுமதி அட்டைகளை ஊரடங்கு அனுமதிகளாக பயன்படுத்த முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் எந்தப் பகுதியிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்படலாம் – இராணுவத் தளபதி

கொரோனா வைரஸ் காரணமாக கடும் ஆபத்து நிலவுகின்ற பகுதிகளில் தேவைப்பட்டால் ஊரடங்கினை பிறப்பிப்பதற்கு தயார் என இராணுவதத தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் குறித்து நாளாந்தம் வெளியாகும் புள்ளிவிபரங்களை அதிகாரிகள் அவதானித்து வருகின்றனர் என தெரிவித்துள்ள அவர், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான நோயாளிகள் காணப்படும் பகுதிகளில் அவசியமென்றால் ஊரடங்கைப்...