. October 13, 2020 – Jaffna Journal

முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை குறித்து பக்கசார்பற்ற விசாரணை நடத்தப்படும்

முல்லைத்தீவில் இரண்டு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பாக பக்கசார்பற்ற விசாரணை நடத்தப்படும் என்று வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்ட காட்டுப் பகுதியில் வைத்து ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அமைச்சரவையில் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவிலயாளர்... Read more »

ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு மாவை கண்டனம்: உரிய இழப்பீடுக்கும் வலியுறுத்து!

முல்லைத்தீவில் மரக்கடத்தல் கும்பலால் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், நாட்டில் இடம்பெறும் கொள்ளை முயற்சிகளைத் தடைசெய்வதுடன், ஊடகவியலாளர்களினதும் ஊடகத் துறையினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை... Read more »

யாழ் – வவுனியா தேசிய கல்வியற் கல்லூரிகள் தனிமைப்படுத்தல் முகாங்களாக மாற்றம்!!

கோப்பாய் இராச வீதியில் அமைந்துள்ள தேசியக் கல்வியற் கல்லூரி மாணவர் விடுதியினை தனிமைப்படுத்தல் முகாமாக மாற்றப்பட உள்ளதனால் விடுதியில் தங்கியிருந்த 375 ஆசிரிய மாணவர்கள் அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் உரியவர்கள் தனித்தனியான பேருந்துகளில் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கையினை... Read more »

மேலும் 49 பேருக்கு கோரோனா தொற்று!!

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை கோரோனா பரவல் தொடர்சியில் மேலும் 49 பேர் இன்று கோரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த தகவலை இராணுவத் தளபதி தெரிவித்தார். அவர்களில் 32 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள். ஏனைய 17 பேர் மினுவாங்கொட ஆடைத்... Read more »

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் – ஜனாதிபதிக்கு கடிதம்

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர். கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக குறித்த கடிதம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணியளவில் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்கள் இருவர்... Read more »

பொது இடத்தில் முகக்கவசம் அணியாதோரை எதிர்க்க பொதுமக்களை ஊக்குவிக்கிறது சுகாதார அமைச்சு

பொது இடத்தில் முகக்கவசம் அணியாத எந்தவொரு நபருக்கும் எதிர்ப்புத் தெரிவிக்க பொதுமக்களை ஊக்குவிக்கின்றது சுகாதார அமைச்சு. பொது இடங்களில் புகைபிடிப்பதை தடைசெய்தபோது செய்ததைப் போலவே பொதுமக்கள் இந்த விடயத்திலும் அதிகாரம் செய்யும்படி சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர், மருத்துவர் ஜெயருவன் பண்டார கேட்டுக்கொண்டார். பொது... Read more »

மணிவண்ணனை யாழ்.மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கக் கோரும் மனு கைவாங்கப்பட்டது!!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை அந்தப் பதவியிலிருந்து நீக்க கட்டளையிடுமாறு கோரி கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிப் பேராணை மனு இன்று மீளப்பெறப்பட்டது. “பிரதிவாதி விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு மாநகர சபை உறுப்புரிமை... Read more »

யாழ்.சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கு அருகில் வெடிபொருள்கள் மீட்பு!!

யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கு அண்மையில் இருந்து ரிஎன்ரி வெடிமருந்து 4 கிலோ கிராம் மற்றும் டெரனேற்றர் 10 என்பன சிறப்பு அதிரடிப் படையினரால் இன்று செவ்வாய்க்கிழமை காலை மீட்ககப்பட்டுள்ளன. “யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் இல்லத்துக்கு அண்மையில் சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கு பின்புறமாக உள்ள... Read more »

பட்டதாரி பயிலுனர்களுக்கான பயிற்சிகள் காலவரையின்றி ஒத்திவைப்பு!!

பட்டதாரி பயிலுனர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சியை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அரச ​சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. பட்டதாரி பயிலுனர் நியமனத்தின் முதலாவது கட்டம் கடந்த செப்ரெம்பர் 2ஆம் திகதி நடைமுறைப்படுத்தப்பட்டது. அவர்களுக்கு சுழற்சிமுறையில் முகாமைத்துவ, தலைமைதுவம் உள்ளிட்ட பயிற்சிகள்... Read more »

மன்னாரில் முடக்கப்பட்ட பகுதிகள் திறப்பு: இயக்கச்சி தனிமைப்படுத்தல் முகாமில் அறுவருக்கு கொரோனா!

மன்னார், பட்டித்தோட்டம் மற்றும் பெரியகடை ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றையதினம் மாலை விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மன்னாரில் கடந்த மூன்று நாட்களில் ஒன்பது பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதிகள் முடக்கப்படுவதாக நேற்று... Read more »

அரச, தனியார் நிறுவன ஊழியர்களின் தகவல்களை புதுப்பிக்குமாறு கோரிக்கை

அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் சேவையாற்றும் அனைத்து ஊழியர்களின் தனிப்பட்ட தகவல்களை புதுப்பித்துகொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன கோரிக்கை விடுத்துள்ளார். சிங்கள ஊடகமொன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதற்கமைய குறித்த... Read more »