Ad Widget

பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணை விடுமுறை!!

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் இரண்டாம் தவணை விடுமுறைக்காக நாளை (05) முதல் மூடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளுக்குமான 2 ஆம் தவணைக்கான விடுமுறை எதிர்வரும் வௌ்ளிக்கிழமை (09) முதல் வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

புங்குடுதீவைச் சேர்ந்த 20 பேர் சுயதனிமைப்படுத்தலில்!!

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை பெண் பணியாளருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்றிரவு கண்டறியப்பட்டுள்ள நிலையில் அங்கு பணி புரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்கள் இருவர் உள்பட அவர்களுடன் தொடர்புடையவர்கள் என 20 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர். வேலணை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. “மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை ஆடைத்...
Ad Widget

யாழ்.மாநகரில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தல்

கம்பஹா திவுலபிட்டியவில் சமூகத் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் நாடுமுழுவதும் சுகாதார கட்டுப்பாடுகளை இறுக்கமாக நடைமுறைப்படுத்த பொலிஸாருக்குப் பணிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் யாழ்ப்பாணம் மாநகரில் பொலிஸார் வீதி சுற்றுக்காவல் நடவடிக்கைகளை இன்று மாலை ஆரம்பித்துள்ளனர். அத்துடன், பேருந்துகளில் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு அமைய பயணிகள் ஏற்றப்படுகின்றரா என்று பரிசோதனை செய்யும் பொலிஸார், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற...

யாழ் மாவட்ட மக்களுக்கு மாவட்ட அரசாங்க அதிபரின் அவசர அறிவிப்பு!!

யாழ் மாவட்ட மக்கள் சமூகத்தொற்று தொடர்பில் விழிப்பாக செயற்படுங்கள் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அவசர அறிவிப்பு விடுத்துள்ளார். தற்போது நாட்டில் உள்ள Covid19 நிலைமை தொடர்பில் யாழ் மாவட்ட மக்களுக்கு மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் விடுத்துள்ள அவசர செய்திக் குறிப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். கம்பஹா மாவட்ட, மினுவாங்கொட, திவிலபிட்டிய...

பிள்ளைகளுக்கு சுதந்திரமாக மனமகிழ்வுடன் கல்வி கற்கக் கூடிய கல்வி சீர்த்திருத்தம் இந்நாட்டிற்கு உடனடியாக அவசியம் – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

பிள்ளைகளுக்கு சுதந்திரமாக மனமகிழ்வுடன் கல்வி கற்கக் கூடிய கல்வி சீர்த்திருத்தமொன்று இந்நாட்டிற்கு உடனடியாக தேவைப்படுவதாக கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 'அபே கம' வளாகத்தில் நேற்று முன்தினம் (2020.10.02) நடைபெற்ற சர்வதேச சிறுவர் தின தேசிய நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தைவிட கல்வி சீர்த்திருத்தம் இந்நாட்டின் எதிர்காலத்தில்...

மொறிசன் ஒளடத உற்பத்தி மற்றும் பரிசோதனை நிலையம் பிரதமரினால் திறந்து வைப்பு!

ஹோமாகம, பிடிபன ஸ்லின்டெக் (SLINTEC) வலயத்தில் நிறுவப்பட்டுள்ள மொறிசன் ஒளடத உற்பத்தி மற்றும் பரிசோதனை நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த வெள்ளிக்கிழமை 2020.10.02 கலந்து கொண்டார். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட நிர்மாணப் பணிகளை நிறைவு செய்வதற்காக 13.8 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளது. இலங்கைக்கு ஆண்டுதோறும் 1.8...