Ad Widget

எச்சரிக்கை..! கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்களுக்கு முக்கிய வேண்டுகோள்!!

பதிவுசெய்யப்படாத கையடக்கத் தொலைபேசிகளில் பயன்படுத்தப்படும் அனைத்து சிம் அட்டைகளும் இன்று முதல் இரத்து செய்யப்படும் என்று இலங்கை தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வெளிநாடுகளில் இருந்து கையடக்க தொலைபேசிகளை கொண்டு வந்தவர்கள் தங்கள் தொலைபேசிகளை இலங்கை தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் வலைத்தளத்தின் மூலம் பதிவு செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம்...

நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் சிறுவர் வைத்தியசாலையொன்று நிறுவப்பட வேண்டும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

அனைத்து மாகாணங்களிலும் சிறுவர் வைத்தியசாலையொன்று நிறுவப்பட வேண்டும் என தான் எதிர்பார்ப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (2020.10.01) தெரிவித்தார். கொழும்பு மற்றும் கண்டி மாவட்டத்திற்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ள சிறுவர் வைத்தியசாலைகள், எதிர்காலத்தில் மாகாணத்திற்கொரு வைத்தியசாலை என்ற ரீதியில் அபிவிருத்தி செய்யப்பட்டு முன்னெடுத்து செல்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். சர்வதேச...
Ad Widget

மதுவரித் திணைக்களத்தை மறுசீரமைக்க ஒருங்கிணைப்பு குழுவொன்றை நியமிக்க பிரதமர் ஆலோசனை!

மதுவரித் திணைக்களத்தை மறுசீரமைப்பதற்கு ஒருங்கிணைப்பு குழுவொன்றை நியமிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 2020.09.30 பிற்பகல் தெரிவித்தார். மதுவரித் திணைக்கள அதிகாரிகளின் தொழில்சார் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடும் வகையில் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது, மதுவரித் திணைக்கள அதிகாரிகளின் தொழில்சார் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்திய பிரதமர், அரசியல்...

யாழில் 15 சதவீதமானவர்களுக்கு நீரிழிவு!!

யாழ். மாவட்டத்தில் ஏறக் குறைய 15 சதவீதமானவர்களுக்கு நீரிழிவு நோய் காணப்படுகிறது. முன்னைய காலத்தில் வயது முதிர்ந்தவர்களுக்கு வருகின்ற இந்த நீரிழிவு நோய் இன்றைய காலத்தில் இளம் சமுதாயத்தினரையும் தாக்கி வருகிறது. 20, 30, 40 வயதுடையவர்களுக்கும் இந்த நீரிழிவு நோய் காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் எமது வாழ்க்கை நடைமுறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள். ஆரோக்கியமற்ற...

முன்னணியிலிருந்து விலகமாட்டேன் – மணிவண்ணன்

“தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஜனநாயக பண்பற்ற கட்சியாக மாறிவிடக்கூடாது என்பதற்காகவே நான் தொடர்ந்து கட்சிக்குள் இருந்து போராடுவேன். கட்சிக்குள் நடக்கும் ஜனநாயக மீறலை பார்த்துக்கொண்டு இருப்பவன், தமிழர்களுக்கு எதிரான ஜனநாயக மீறலை எதிர்க்க தகுதியற்றவன்” இவ்வாறு சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடக...

புற்றுநோய் வைத்திய சிகிச்சை பிரிவை மத்திய அரசு கையகப்படுத்துவதை ஏற்கமுடியாது – சத்தியலிங்கம்

தெல்லிப்பளை ஆதாரவைத்தியசாலையின் கீழ் இயங்கும் புற்றுநோய் மற்றும் உளநல வைத்தியசிகிச்சை பிரிவுகளை மத்திய அரசின் கீழ் கொண்டுவருவதற்கு எடுக்கும் முயற்சியானது 13 வது திருத்தச்சட்டத்தினை ஒழிக்கும் செயற்பாடாகவே பார்க்கமுடியும் என வட மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்....

நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மழையுடனான காலநிலை நிலவக்கூடும்!

நாட்டின் சில பகுதிகளில் மழையுடனான காலநிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டளவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது. நாடு...