Ad Widget

பாடசாலை மாணவர்களுக்கு சீருடை துணியை வழங்கத் திட்டம்!!

2021ஆம் ஆண்டு முதல் பாடசாலை மாணவர்களுக்கு சீருடை பெற்றுக்கொள்வதற்காக வழங்கப்படும் வவுச்சருக்கு பதிலாகச் சீருடை துணியை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் பாடசாலை மாணவர்களுக்கு வவுச்சர்களை வழங்குவதற்கான திட்டம் இருந்தபோதிலும், சீருடை வழங்கத் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். பாடசாலை சீருடைக்கான துணியை பெற்றுக்கொள்வதற்கான வவுச்சரை வழங்குவதற்கு பதிலாக தேசிய துணி...

யாழ்.மாநகரில் குற்றச்செயல்கள் நடந்தால் உடனே அறிவியுங்கள்!

வன்முறைக் கும்பல்களின் குற்றச்செயல்கள் இடம்பெற்றால் உடனடியாக தகவல் வழங்குமாறு யாழ்ப்பாணம் மாநகர வணிகர்களுக்கு காவற்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் மாநகரில் நேற்றையதினம் திறந்திருந்த வர்த்தக நிலைய உரிமையாளர்களை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்த பொறுப்பதிகாரி பிரதான காவற்துறை பரிசோதகர் ரொஷான் பெர்னாண்டோ, இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். யாழ்ப்பாணம் மணிக்கூட்டு வீதி, பெருமாள் கோவிலடியில் தனுரொக் என்று அழைக்கப்படும் இளைஞன்...
Ad Widget

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை கதிரியக்க சிகிச்சை தொழில்நுட்பவியலாளர்கள் நோயாளிகளுடன் அடாவடியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் ஆளுகைக்கு ட்பட்ட தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையின் சிகிச்சை பிரிவில் கடமைபுரியும் எட்டு கதிரியக்க சிகிச்சை தொழில்நுட்பவியலாளர்கள் சிகிச்சைக்கு வரும் புற்றுநோயாளிகளுடன் அடாவடியில் ஈடுபட்டு வருதாக பாதிக்கப்பட்ட நோயாளர்கள் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சிறீ பவானந்தராஜாவை சந்தித்து முறையிட்டுள்ளனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக கதிரியக்க சிகிச்சை தொழில்நுட்பவியலாளர்கள் நாடு...

2021இல் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் நடைமுறை முற்றுமுழுதாக மாற்றமடைகிறது!!

சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் செயல்முறையின் கட்டமைப்பை முற்றுமுழுதாக மாற்ற திட்டமிட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் சுமித் அழகக்கோன் தெரிவித்துள்ளார். அதன்படி, 2021ஆம் ஆண்டில் சாரதி அனுமதிப்பத்திரத்துக்கு விண்ணப்பிக்கும் செயல்முறையிலிருந்து இறுதி கட்டம் வரை, முழுமையான மாற்றத்தை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். ஐந்தாண்டு காலம் நிறைவடைந்த பின்னர், 2015ஆம் ஆண்டில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட...

தனுரொக் மீது வாள்வெட்டு: நால்வர் கொலை முயற்சி சாட்டுதலில் விளக்கமறியலில்

தனுரொக் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மோகன் அசோக் உள்ளிட்ட நால்வரையும் வரும் ஒக்டோபர் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி ஓட்டுமடத்தைச் சேர்ந்த சுமன் என்று பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர் தலைமறைவாகியுள்ள நிலையில் இந்த நான்கு சந்தேக...

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் வெற்றி – மாவை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நேற்றையதின் முன்னெடுக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் வெற்றிபெற்றுள்ளது என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இப்போராட்டங்களினால் விடுக்கப்பட்ட ஏகோபித்த வேண்டுகோளை அரசு ஏற்க வேண்டும் என்றும் மக்களின் ஜனநாயக உரிமைகளை சட்டபூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்றைய முழு அடைப்புப் போராட்டத்தின்...

மழையுடனான காலநிலை மேலும் அதிகரிக்கும் – மக்களே அவதானம்

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை மேலும் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் வடமத்திய...