Ad Widget

யாழ். பல்கலைகழகத்திற்கு முன்பாக பதற்றம் – பொலிஸார், இராணுவத்தினர் குவிப்பு!

யாழ். பல்கலைகழகத்திற்கு முன்பாக பல்கலைகழக மாணவர்களிற்கும் பொலிஸாருக்கும் இடையில் முரண்பாடான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது. யாழ் பல்கலைகழக நுழைவாயிலில் கூடியிருந்த மாணவர்களை பல்கலைகழகத்திற்குள் உள்ளே செல்லுமாறு, பொலிஸார் அறிவுறுத்தயுள்ளனர். எனினும், மாணவர்கள் அதை மறுத்தபோது, பெருமளவு பொலிஸாரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்னர். இன்று பல்கலைகழகத்தில் மாணவர்கள் அஞ்சலி நிகழ்வை மேற்கொள்வார்கள் என்ற...

நாளைய உணவு தவிர்ப்புப் போராட்டத்துக்கும் நீதிமன்றம் தடை!!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு நாளை (செப்.26) தொண்டமனாறு செல்வச் சந்நிதியில் முன்னெடுக்கத் திட்டமிட்ட அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்துக்கும் தடை உத்தரவு விதித்து பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. கோரோனா சுகாதார கட்டுப்பாடுகள் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இந்த தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர்...
Ad Widget

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் தொடர்பில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள வேண்டுகோள்!

தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக எமது பாரம்பரியத்தை பறைசாற்றும் வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தை தினமும் சென்று வழிபடுவதன் மூலம் தமிழரின் பாரம்பரியங்களும், அடையாளங்களும் காக்கப்படும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அவர்கள் இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவான...

உணவு தவிர்ப்புப் போராட்டத்து தடை உத்தரவு கோரி பொலிஸார் விண்ணப்பம்!

திலீபனின் நினைவேந்தலுக்கு நீதிமன்றத் தடை உத்தரவு விதிக்கப்பட்ட நிலையில் தொண்டமனாறு செல்வச் சந்நிதியில் நாளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ள அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்துக்கும் தடை உத்தரவு கோரி பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் பொலிஸாரால் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ. சேனாதிராசா தலைமையில் இந்த அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம்...

வடக்கில் இன்று மழையுடனான காலநிலை!!

வடக்கு உள்பட நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் இன்று மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதுதொடர்பில் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலில், மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் மழை அல்லது...

மிருசுவில் படுகொலையாளிக்கு மன்னிப்பு : மனுக்களை பரிசீலிப்பதிலிருந்து விலகிய நீதியரசர்!!

யாழ்ப்பாணம், மிருசுவில் படுகொலை விவகாரத்தில் குற்றவாளியாகக் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவத்தின் விஷேட படைப் பிரிவின் ஸ்டாப் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மன்னிப்பளித்து விடுவித்தமைக்கு எதிராக, உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 4 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணையிலிருந்து உயர் நீதிமன்ற நீதியரசர் பிரியந்த ஜயவர்தன நேற்று...

தொழிலைத் தேடி பட்டதாரிகள் வீதிக்கு இறங்காமல் அவர்களைத் தேடி தொழில் செல்லக் கூடிய கல்வி முறைமை – ஜனாதிபதி

பல்கலைக்கழக பிரவேசத்திற்கு தகுதிபெறும் அனைத்து மாணவர்களும் பட்டம் பெறும் வரை செல்வதற்கு அவசியமான நடவடிக்கையுடன் பட்டதாரிகள் தொழில் கேட்டு வீதிக்கு இறங்காத, தொழிற்சந்தை பட்டதாரிகளை தேடிச் செல்லக்கூடிய கல்வி முறைமையொன்றின் உடனடி அவசியம் பற்றி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெளிவுபடுத்தியுள்ளார். பல்கலைக்கழகங்கள், பட்டங்களை வழங்கக்கூடிய நிறுவனங்களாக மட்டும் இல்லாமல் நாட்டுக்கும் பொருளாதாரத்திற்கும் அதேபோல் பட்டம் பெறுவோரும்...

தனியார் வகுப்புகளை நடத்தும் இறுதித் திகதி அறிவிப்பு!!

க.பொ.த. உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு தனியார் கல்வி வகுப்புகள் நடத்துவதற்கான இறுதி திகதி கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அனைத்து தனியார் கல்வி வகுப்புகளும் ஒக்டோபர் 6ஆம் திகதிக்குள் நிறுத்தப்பட வேண்டும். மேலும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான...

யாழில் மீனவர்களின் படகுகளை பதிவுசெய்யும் நடவடிக்கை முன்னெடுப்பு!

யாழ்ப்பாணத்தில் காணப்படும் பதிவு செய்யப்படாத படகுகளை பதிவு செய்யும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கமைய, கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளினால் குறித்த நடவடிக்கை கடந்த சில நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த காலங்களில் பருவகால மீனவர்களிடமிருந்தும் தென்னிலங்கை பிரதேசங்களில் இருந்தும் யாழ்ப்பாண மீனர்வர்களினால் கொள்வனவு செய்யப்பட்ட கடற்றொழில் திணைக்களத்தில் பதிவுசெய்யப்படாமல் இருந்த...