Ad Widget

ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து சிறிகாந்தாவிடம் யாழ். பொலிஸார் விசாரணை!

தியாகி திலீபனின் நினைவேந்தல் தொடர்பாக ஒன்றுகூடிய தேசிய தமிழ்க் கட்சிகளின் தீர்மானத்தையடுத்து, தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் N.சிறிகாந்தாவிடம் யாழ். பொலிஸார் தற்போது விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். தியாகி திலீபனின் நினைவுகூரலை தடைசெய்யக்கோரி பொலிஸார் தாக்கல்செய்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில், திலீபனின் நினைவுகூரல் நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீடித்து யாழ்ப்பாணம் நீதவான்...

வெடுக்குநாரி ஆலயத்திற்குச் செல்வோரை பதிவுசெய்யும் பொலிஸார்!

வவுனியா, நெடுங்கேணி வெடுக்குநாரி மலை ஆதலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வருடாந்த பொங்கல் விழா இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் ஆலயத்திற்கு வருகைதரும் பக்தர்களை பதிவுசெய்யும் நடவடிக்கையில் நெடுங்கேணி பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை, குறித்த பதிவு நடவடிக்கை கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணத்தால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. எனினும், இவ்வாறான செயற்பாடுகளால் ஆலயத்திற்கு வருகைதரும் பொதுமக்களின்...
Ad Widget

வடக்குக் கிழக்கு இளைஞர், யுவதிகளுக்காக விமானப் போக்குவரத்துக் கல்லூரி!

வடக்குக் கிழக்கில் உயர்தரத்தில் கல்விகற்று வேலை தேடும் இளைஞர், யுவதிகளுக்காக விமானப் போக்குவரத்துக் கல்லூரியினை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை விமானப் போக்குவரத்துக் கல்லூரியின் நிறைவேற்று முகாமையாளர் ஆர்.பிரேமல் டி சில்வா தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் முதற்கட்டமாக தொழில்வாய்ப்பு உத்திகளுக்கான விமானப் போக்குவரத்துக் கல்லூரி மையத்தினை அமைப்பது தொடர்பான உயர்மட்டக் கலந்துறையாடல் நேற்று (புதன்கிழமை)...

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கான தடையை நீடித்து நீதிமன்றம் கட்டளை

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை மேலும் 14 நாள்கள் நீடித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று கட்டளையிட்டது. பிரதிவாதிகளின் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதாகத் தெரிவித்த நீதிமன்றம், வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தது. நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் நினைவுத் தூபியில் நினைவேந்தல் நடத்தக் கோரிய மனுவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திகுமார், கஜேந்திரன், யாழ்ப்பாணம்...

ஜனாதிபதி செயலணியின் உறுப்பினராக யாழ். பல்கலையின் துணைவேந்தர் நியமனம்!

இலங்கையின் கல்வி நடவடிக்கைகளுக்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சி. ஶ்ரீசற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ள நிலையில் 2194/ 29 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் இதற்கான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானியில், “இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 33ஆவது உறுப்புரையினால்...

கிளிநொச்சியில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர் போராட்டம்!

கிளிநொச்சி, ஊற்றுப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். குறித்த போராட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை பாடசாலை பிரதான வாயிலை மறித்து இடம்பெற்றது. நேற்றைய தினம் பாடசாலை அதிபரை ஒரு தரப்பினர் தாக்க முற்பட்டதாகத் தெரிவித்து தமது பிள்ளைகள், அதிபர், ஆசிரியர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தித் தருமாறு கோரியே இந்தப் போராட்டம்...

அரசியல் நோக்கத்திற்காக சிலர் குழப்பம் விளைவிக்கின்றனர் – டக்ளஸ்

13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக ஒவ்வொருவரும் தங்களது அரசியல் தேவைகளுக்காக பல்வேறு கருத்துக்களை முன்வைத்து குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று( புதன்கிழமை) நடைபெற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவிதார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,...

அனைத்து கிராம சேவகர்களுக்கும் அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு!

நாட்டில் கிராம சேவகர்களினால் ஆற்றப்பட வேண்டிய கடமைகள் மற்றும் பொறுப்புக்களை முறைமைப்படுத்தும் சுற்றுநிரூபம் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. அந்தவகையில், கிராம சேவகர்கள் தமக்குரிய பொறுப்புக்களை நிறைவேற்றுவதை முறைமைப்படுத்தும் விதமாக உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவினால் உள்நாட்டு அலுவல்கள் தொடர்பான 16/2020 இலக்க சுற்றுநிரூபம்...

ஒரு குடும்ப ஆட்சி யாழ்ப்பாண அரச செயலகத்தில் நடைபெறுகிறது – சிறீதரன்

ஒரு குடும்ப ஆட்சி யாழ்ப்பாண அரச செயலகத்தில் நடைபெறுகிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மிக முக்கியமாக தேர்தல் ஆணைக்குழு பற்றிய பல்வேறுபட்ட கருத்துக்கள் இந்த சபையிலே பல உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டது....

நெடுங்கேணியில் பதியும் வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரரைத் தரிசிக்கத் திரளுங்கள் – ஆலய பரிபாலன சபை

நெடுங்கேணியில் பதியும் வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரரைத் தரிசிக்கத் திரளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆலய பரிபாலன சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “விக்கினங்கள் தீர்ந்து விழா நாளை நெருங்கியிருக்கிறோம். நம் நெடுங்கேணியில் பதியும் வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் இறுதிநாளை அண்மித்திருக்கிறோம். எங்கே இருக்கிறார் இந்த ஆதி லிங்கேஸ்வரர்? வவுனியா மாவட்டத்தின்,...