Ad Widget

யாழ்.பல்கலையில் இணையம் ஊடாக பாலியல் பகிடிவதை – நான்கு மாணவர்களுக்கு வகுப்புத்தடை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதுமுக மாணவர்கள் மீது ‘இம்சை’ மேற்கொள்ளப்பட்டால் சிரேஸ்ட மாணவர்கள் ஈவிரக்கமின்றித் தண்டிக்கப்படுவார்கள் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிரேஸ்ட பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தெரிவித்துள்ளார். இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பல்கலைகழகத்திற்குள் வெவ்வேறு காலகட்டங்களில் நடந்து வந்துள்ளது. கொரோனாவிற்கு பின்னர்...

யாழ்.வணிகர் கழகத்தின் கோரிக்கையைத் அடுத்து உளுந்து இறக்குமதித் தடையை நீக்க பிரதமர் நடவடிக்கை!!

உளுந்து இறக்குமதி மீதான தடையை மறுபரிசீலனை செய்வது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவிற்கு, பிரதமர் மகிந்த ராஜபக்ச யோசனை முன்வைத்துள்ளார். தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் உளுந்து முக்கியத்துவம் பெறுவதனால், உளுந்து மீதான இறக்குமதி தடையை தளர்த்துமாறு யாழ்ப்பாணம் வணிகர் கழகம், பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் எழுத்துமூல கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது. இந்த கோரிக்கையை...
Ad Widget

செம்மணி மயானத்தில் மருத்துவக் கழிவுகள் புதைத்த விவகாரத்தின் பின்னணியிலேயே செயலாளர் தாக்கப்பட்டார்?

“நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட செம்மணி சிந்துபாத்தி மைதானத்தில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சபையின் செயலாளர் முழு மூச்சாக வேலைகளை செய்து வரும் நிலையில் யாழ்.மாநகர சபையின் ஊழியர் அவரை அலுவலகம் தேடி வந்து தாக்கியமை குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்” இவ்வாறு நல்லூர் பிரதேச சபையின் சார்பில்...

வட்டுக்கோட்டையில் பாம்பு தீண்டியதில் 7 வயதுச் சிறுவன் சாவு!!

பாம்பு தீண்டியதில் 7 வயதுச் சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். வட்டுக்கோட்டை தெற்கைச் சேர்ந்து செல்வம் ஜெசிந்தன் (வயது -7) என்ற வட்டுக்கோடை அமெரிக்கன் மிஷன் கல்லூரியில் 2ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவனே உயிரிழந்துள்ளார். “சிறுவன் நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் மலசல கூடத்துக்குச் சென்றுள்ளான். அங்கு பாம்பு தீண்டியுள்ளது. அதனை தாயாரிடம்...

பத்திரிகை விநியோகப் பணியாளரை வெட்டிவிட்டு மோ.சைக்கிள் அபகரிப்பு!!

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் வலம்புரி பத்திரிகை விநியோகப் பணியில் ஈடுபட்டிருந்தவரை வழிமறித்த கும்பல் ஒன்று, அவரை வாளால் வெட்டிவிட்டு அவர் பயணித்த மோட்டார் சைக்கிளை பறித்துச் சென்றுள்ளது. இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கோண்டாவிலைச் சேர்ந்த பாலச்சந்திரன் மதனகரன் (வயது -43) என்பவரே வாள்வெட்டுக்கு இலக்காகி தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். கொள்ளைக் கும்பல்...

கண்ணீர்விட்டு அழுவதற்கும் முடியாத நிலையே எங்களுக்கு ஏற்பட்டுள்ளது – மாவை

தமிழர்களின் போராட்டங்களை – விடுதலையை எதிர்கால சந்ததிகள் அறிய முடியாத நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளோமோ என்று இருந்த நிலையில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை நீதிமன்றத் தடையை பொலிஸார் பெற்றுக் கொண்டதன் இளம் சமுதாயமும் உலக நாடுகளும் எங்களுடைய போராட்டங்கள் தொடர்பாக இங்கு நடந்தவையை அறிந்துள்ளது என்று இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான...

சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் பொது மக்கள் நடந்து கொள்வது பாரதூரமானது என எச்சரிக்கை!

கொரோனா குறித்த சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் பொது மக்கள் நடந்து கொள்வது பாரதூரமானது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘நாட்டில் சமூகத்தினுள் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்படாவிட்டாலும்...

கரவெட்டி பிரதேச சபை தலைவர் ஐங்கரன் தங்கவேலாயுதம் மீது தாக்குதல்!

கரவெட்டி பிரதேச சபை தலைவர் ஐங்கரன் தங்கவேலாயுதம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கரவெட்டி பிரதேச சபை எல்லைக்குட்ப்பட்ட நெல்லியடிப் பகுதியில் காணிப் பிணக்கு ஒன்று தொடர்பாக பார்வையிடச் சென்ற வேளை, நேற்று(வியாழக்கிழமை) இவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர். தலையில் காயங்களுக்கு உள்ளான கரவெட்டி பிரதேச சபை தலைவர் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில்...