Ad Widget

கடும் எச்சரிக்கையின் பின் சிவாஜிலிங்கம் பிணையில் விடுவிப்பு!!

“நீதிமன்றத் தடை உத்தரவையும் மீறி தியாக தீபம் திலீபனுக்கு நினைவேந்தல் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்துக்கு கடும் எச்சரிக்கையின் பின் பிணை வழங்கி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், அவருடன் கைது செய்யபட்ட வாடகைக்கு அமர்த்தப்பட்ட முச்சக்கர வண்டிச் சாரதியும் பிணையில் விடுவிக்கப்பட்டார். ” உங்களுக்கு...

வெடுக்குநாரி செல்ல அனுமதி – தொல்லியல் திணைக்களத்தின் வழக்கு தள்ளுபடி!

வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளை மேற்கொள்வதற்கு வவுனியா நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளது. நெடுங்கேணி பொலிஸ் மற்றும் தொல்லியல் திணைக்களத்தால் ஆலயத்திற்கு செல்வதற்கு தடை விதிக்க கோரி, வவுனியா நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கினை தள்ளுபடி செய்த மன்று, ஆலய உற்சவத்தை வழமை போன்று நடத்த அனுமதி வழங்கியதுடன், ஆலய நிர்வாகத்திற்கு இடையூறோ, அச்சுறுத்தலோ...
Ad Widget

பட்டதாரி பயிலுனர் நியமனம் – மேன்முறையீடுகளை பரிசீலிக்க குழு நியமனம்

அரச சேவையில் பயிலுனர் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைளில் நியமனம் வழங்கப்படாத பட்டதாரிகளின் மேன்முறையீடுகளை பரிசீலிக்கும் நடவடிக்கை இன்று(புதன்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. அரச ​சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் J.J. ரத்னசிறி இதனைத் தெரிவித்துள்ளார். மேன்முறையீடுகளை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நேற்றுடன் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மேன்முறையீடுள் விசேட குழுவினால் பரிசீலிக்கப்படவுள்ளதாகவும் அவர்...

பிரபாகரனின் முடிவினால் திலீபன் உண்ணாவிரம் இருக்கவில்லை – கமால் குணரட்ணவின் கருத்திற்கு ஐங்கரநேசன் பதிலடி

திலீபன் உண்ணாவிரதம் இருந்தமை தலைவர் பிரபாகரனின் முடிவோ தெரிவோ அல்ல என்றும் அவர் சுயமாகவே இந்த முடிவை எடுத்துத் தலைவரிடம் அதற்கானஒப்புதலைப் பெற்றிருந்தார் என்றும் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். திலீபன் ஒரு அரசியற் போராளி என்றும் அவர் நோயாளி அல்ல என தெரிவித்த ஐங்கரநேசன் நல்ல தேக ஆரோக்கியத்துடனேயே...

வடக்கு – கிழக்கில் அரசின் ஜனநாயக மீறல்களுக்கு எதிராக கட்சிகளுடன் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு கூட்டமைப்பு தீர்மானம்!!

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் புதிய அரசின் ஜனநாயக மீறல் செயற்பாடுகளுக்கு எதிராக ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தீா்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாக கூறியிருக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பு, எதிா்வரும் வெள்ளிக்கிழமை தமிழ் தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகள் மற்றும் அமைப்புக்களுடன் இணைத்து இந்த தீா்மானம் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்டமை மற்றும்...

இயற்கை அனர்த்தம் காரணமாக அழிவடையும் விவசாய நடவடிக்கைகளுக்கு நஸ்டஈடு – அமைச்சர் மஹிந்தானந்த

வாழை தோட்டம்,பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், உழுந்து, கஜீ, பப்பாசி போன்ற பயிர் செய்கைகள் இயற்கை அனர்த்தம் காரணமாக அழிவடையும் போது நஸ்டஈடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ‘சுபீட்சத்தின் நோக்கில் விவசாய மறுமலர்ச்சி’ எனும் தொனிப் பொருளிலான கலந்துரையாடலில் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த...

பருத்தித்துறை வியாபாரி மூலையில் கத்திக் குத்து – ஒருவர் உயிரிழப்பு!

பருத்தித்துறை வியாபாரி மூலையில் கத்திக் குத்துக்கு இலக்காகிய ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று மந்திகை ஆதார வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன. பருத்தித்துறை வியாபாரி மூலையில் நேற்று(செவ்வாய்கிழமை) மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றது என்று பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். அதே இடத்தைச் சேர்ந்த கணேசலிங்கம் நடேசலிங்கம் (வயது -39) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். அவரை கத்தியால் குத்தி...

வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்குள் செல்லவேண்டாம்!! – தொல்பொருள் திணைக்களம் எச்சரிக்கை!

ஆலயத்திற்கு செல்வதோ பூசைகள் செய்வதோ முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. மீறி செயற்பட்டால் நிர்வாகத்தினர் கைதுசெய்யப்படுவார்கள் என நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளதாக வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இது தொடர்பாக மேலும் அவர்கள் தெரிவிக்கையில்… வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவம் நாளை(வியாழக்கிழமை) ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியிருக்கின்றது. இந்நிலையில் ஆலய திருவிழாவினை தடுத்து...