Ad Widget

கொரோனா வைரஸ் தொற்று: பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சர் முக்கிய அறிவிப்பு

பொதுமக்கள் தொடர்ந்தும் சுகாதார அலோசனைகளை பின்பற்றுவதன் ஊடாகவே, கொரோனா சவாலில் இருந்து முழுமையாக வெற்றியடைய முடியும் என சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் பவித்ராதேவி வன்னியாராச்சி மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டுக்குள் கொரோனா தொற்று இல்லை. 100 நாட்களுக்கும் மேலாக சமூகத்தொற்று இல்லாமல்...

தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபியை திருத்த வேண்டாம்!!

யாழ். ஆவரங்கால் பகுதியில் இந்திய இராணுவத்தினரின் காலத்தில் சேதமாக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்ட நிலையில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியை, மீள புனர்நிர்மாணம் செய்து அமைப்பதற்கு சிலர் முன்வந்திருந்த நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த ஒருசிலர் இணைந்து அதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். தமது பிரதேசத்துக்கு இந்தத் தூபி தேவையில்லை என்றும், அதனால், ஏற்கனவே ஒருவர் கொல்லப்பட்டுள்ளனர் எனவும்...
Ad Widget

தேங்காயின் விலை 100 ரூபாய் வரையில் அதிகரிக்க வாய்ப்பு!!

தேங்காயின் விலை 100 ரூபாய் வரையில் அதிகரிக்கக் கூடுமென தெங்கு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது தேங்காய் ஒன்றின் விலை 70 ரூபாயில் இருந்து 80 ரூபாய் வரையில் காணப்படுகின்றது. இந்த நிலையில், எதிர்வரும் நாட்களில் அவ்விலைகளில் மாற்றம் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் 250 மில்லியன் தேங்காய்கள் அறுவடை செய்யப்படுவதோடு, அதில் 150 மில்லியன்...

திலீபனின் நினைவு தினத்தை அனுஷ்டித்த குற்றச்சாட்டு – சிவாஜிலிங்கம் கைது

நீதிமன்ற தடையை மீறி தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை அனுஷ்டித்த குற்றச்சாட்டில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பாகியுள்ளது. இந்நிலையில், குறித்த நினைவேந்தல் நிகழ்வினை யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவில் நடத்துவதற்கான தடையுத்தரவை நேற்றைய...

மாணவியைக் கடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க மறுத்த கோப்பாய் பொலிஸார் மாணவி மீது தாக்குதல்!!

15 வயது பாடசாலை மாணவியைக் கடத்திச் சென்று மீளவும் கொண்டு வந்து விட்டமை தொடர்பில் மாணவியின் முறைப்பாட்டை பதிவு செய்ய மறுத்த கோப்பாய் பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் ஒருவர், மாணவியைத் தாக்கியுமுள்ளார். மாணவி நேற்று காலை 7.30 மணியளவில் பாடசாலைக்குச் சென்ற போது, கோண்டாவில் இ.போ.ச சாலை முன்பாக ஒருவரால் மோட்டார் சைக்கிளிலில் கடத்திச்...

டோகாவிலிருந்து நாடு திரும்பிய யாழ்ப்பாணம் வாசிக்கு கோரோனா!!

டோகா நாட்டிலிருந்து நாடு திரும்பிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. கடந்த சில தனங்களுக்கு முன்பு டோகாவிலிருந்து நாடு திரும்பிய அவர் அநுராதபுரம் நட்சத்திர விடுதியில் தனிமைப்படுதலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளார். கோண்டாவிலைச் சேர்ந்த அவருக்கு கோரோனா வைரஸ் தொற்றுள்ளமை நேற்று மாலை கண்டறியப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நோயாளி தற்போது சிகிச்சைக்காக கோரோனா சிகிச்சை...

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை! ஒருவர் உயிரிழப்பு!!

இலங்கையில் நேற்று மாத்திரம் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 262 ஆக அதிகரித்துள்ளது. அதில் ஒருவர் கொரோனா காரணமாக நேற்று உயிரிழந்த கொரோனா தொற்றாளருடன் நெருக்கமாக இருந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐக்கிய...

திலீபனின் நினைவேந்தலுக்கு தடை- ஒன்றுகூடும் தமிழ்க்கட்சிகள்!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விடயம் குறித்து ஆராய்வதற்காக யாழ்ப்பாணத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழ்க் கட்சிகள் ஒன்றுகூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி அடுத்தகட்ட நகர்வை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பாக ஆராய்வதற்காக கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா...