Ad Widget

பொம்மைவெளி மக்களின் வீட்டுப் பிரச்சினையை ஆராய பிரதமர் உத்தரவு

யாழ்ப்பாணம் – பொம்மைவெளி பகுதியில் வீடமைப்பு திட்டத்தை பெற்றுத் தருமாறு வலியுறுத்தி நேற்றைய தினம் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் குறித்து ஆராய்வதற்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த தகவலை பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் பிரதமரின் ஊடகப் பிரிவு அனுப்பிய செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது; வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்தவை இன்று...

திலீபனின் நினைவேந்தல் நடத்த தடை- யாழ்.நீதிமன்றம் உத்தரவு!

நல்லூரில் ஏற்பாடு செய்யப்பட்ட திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு யாழ்.நீதவான் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) காலை நடந்த வழக்கு விசாரணையின் போதே இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாளை ஆரம்பமாகவிக்கும் தியாக தீபம் திலிபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு...
Ad Widget

மாணவ குழுக்களிடையே மோதல் மாணவனின் கழுத்தில் வெட்டு!!

கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை (12) இடம்பெற்ற க.பொ. த.சாதாரன தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு இடம்பெற்ற ஒரு செயலமர்வின் போது மாணவக் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலால் மாணவன் ஒருவனின் கழுத்தும் வெட்டப்பட்டுள்ளதோடு, 20 க்கு மேற்பட்ட கதிரைகளும் அடித்து உடைக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வருடம் க.பொ.த.சாதாரன தர பரீட்சைக்கு தோற்றவுள்ள சுமார்...

கொரோனா அச்சம் – மன்னார் செளத்பார் பிரதான புகையிரத நிலையம் மூடல்!!

மன்னார் பிரதான புகையிரத நிலைய பகுதி கொரோனா பரவல் அச்சம் காரணமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) முதல் எதிர்வரும் 14 நாட்கள் மூடப்பட்டுள்ளதுடன் குறித்த புகையிரத நிலைய ஊழியர்களும் பாதுகாப்பு காரணங்களுக்காக புகையிரத நிலையத்திலே தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,, வவுனியா பெரியகாடு இராணுவ புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பி வந்த...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

நாட்டில் எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கு மழையுடனான காலநிலை நிலவும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இடைக்கிடை மழை பெய்யக்கூடும் என்றும் இதன் போது 50 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமேல் மாகாணத்திலும்...

பல்கலைக்கழகங்களில் பகிடிவதையை நிறுத்த அரச புலனாய்வு சேவைகளுக்கு அழைப்பு

பல்கலைக்கழகங்களில் பகிடிவதையை முடிவுக்குக் கொண்டுவர அரச புலனாய்வு சேவைகள் (State Intelligence Services) அழைக்கப்பட்டுள்ளது. “பல்கலைக்கழகங்களில் பகிடிவதையை முடிவுக்குக் கொண்டுவர அரச புலனாய்வு அமைப்பு மற்றும் பிற அரச புலனாய்வு அமைப்புகளும் வழங்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சு, பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்கு உறுதியளித்திருந்தது. கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பதால், பகிடிவதையில் ஈடுபடும் குழுக்களை நாங்கள் அகற்றவேண்டும்”...

சுமந்திரன், ஸ்ரீதரன் குறித்த முறைப்பாடுகள் கிடைத்தன: நடவடிக்கை எடுக்கப்படும்- சி.வி.கே.

நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் ஸ்ரீதரன் உள்ளிட்டவர்கள் பற்றிய முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக வடக்கு மாகாண அவைத் தலைவரும் தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், குறித்த முறைப்பாடுகள் தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கைக் குழு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையின் தலைவர், ஜனாதிபதி...

சிங்கள தேசிய சக்திகள் வடக்கு கிழக்கில் மையம்கொள்வதை நிறுத்த நாம் பலமடைய வேண்டும்- மணிவண்ணன்

சிங்களத் தேசிய சக்திகள் அல்லது அவர்களோடு சேர்ந்து பயணிக்கின்ற கட்சிகள் வடக்கு கிழக்கை மையப்படுத்தி உருவெடுக்கின்ற சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது என தமிழ் தேசிய இளைஞர் பேரவையை தலைமைதாங்கும் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சிங்கள தேசிய சக்திகள் மையம்கொள்வதை தடுக்க ஒன்றிணைய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் தேசிய இளைஞர் பேரவையின் கலந்துரையாடல்...