Ad Widget

வெளிவாரி கலை பட்டப்படிப்புகளுக்கான புதிய அனுமதி இடைநிறுத்தம்!!

புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தும் வரை வெளிவாரி கலை பட்டங்களுக்கான பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கலைத்துறையில் வெளிவாரிப் பட்டங்களுக்கான புதிய பதிவுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க இலங்கை பல்கலைக்கழக மானிய ஆணையம் (UGC) முடிவு செய்துள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்கா தெரிவித்ததாவது; “தற்போதுள்ள...

ரஷ்யாவின் கோரோனா தடுப்பூசி இந்த வாரம் பயன்பாட்டுக்கு வருகிறது!!

ரஷ்யாவின் கோரோனா தடுப்பூசியான “ஸ்புட்னிக்-5” தடுப்பூசி இந்த வாரம் பொது மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. கோரோனா வைரஸ் நோய்க்கான தடுப்பூசியை உருவாக்கிய முதல் நாடு என்று ரஷ்யா உலக நாடுகளுக்கு அறிவித்தது. இப்போது, ​​ரஷ்யாவின் சுகாதாரத் துறை அதிகாரிகள் கோவிட் -19 தடுப்பூசி இந்த வார தொடக்கத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வெளியிடப்படும் என்று...
Ad Widget

20ஆவது திருத்தச் சட்டம் – கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பு

20ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து இந்த வாரம் தீர்மானிக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த வாரம் இடம்பெறவுள்ள கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தின்போது இது குறித்து தீர்மானிக்கப்படும் என அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். மேலும் இந்த விடயம் தொடர்பாக ஏற்கனவே தங்கள் சட்டத்தரணிகளுடன்...

செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவியின் 24ஆவது ஆண்டு நினைவேந்தல்!

யாழ்.செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிருசாந்தியின் 24ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று (திங்கட்கிழமை) அனுஸ்டிக்கப்பட்டது. இதன்போது, செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட ஏனையவர்களையும் நினைவு கூர்ந்து, அஞ்சலி செலுத்தப்பட்டது. 1996ஆம் புரட்டாதி மாதம் 7ஆம் திகதி, யாழ்.சுண்டிக்குளி கல்லூரி மாணவி கிருஷாந்தி (வயது 18) வீதியால் சென்று கொண்டிருந்தவேளை செம்மணி...

ஒற்றுமையை வலியுறுத்தவே இங்கு வந்தேன்: சுமந்திரனின் இரவு விருந்தில் மாவை!

இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் எழுந்துள்ள முரண்பாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு, இனத்தின் விடுதலைக்காக நாம் ஒன்றுபட்டு செயற்படும் முயற்சியை மேற்கொள்வோம். இதற்காகவே இந்த கூட்டத்தில் நான் கலந்து கொண்டுள்ளேன் என தெரிவித்துள்ளார் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா. கடந்த சனிக்கிழமை சிறுப்பிட்டியில் தனது ஆதரவாளர்கள் மற்றும் அவர்களது நண்பர்களிற்கு எம்.ஏ.சுமந்திரன்...

முன்னணியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் கட்சியை விட்டு தற்காலிகமாக இடைநிறுத்தம்!!

எமது இயக்கத்தின் அரசியல் கொள்கைகளிற்கு முரணாக நடந்ததால் உங்களை கட்சியை விட்டு தற்காலிகமாக இடைநிறுத்துகிறோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் மகேந்திரன் மயூரனிற்கு, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில் பின்வரும் காரணங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. | ஜனாதிபதித் தேர்தலை பகிஸ்கரிக்கும் முடிவை எமது அரசியல்...

பிராந்திய வல்லரசுக்கும் சர்வதேசத்திற்கும் வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் காற்றில் விட்டால் நடப்பதுவேறு- சுமந்திரன்

பிராந்திய வல்லரசுக்கும், முழு சர்வதேசத்திற்கும் மூன்று தடவை கொடுத்த வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் காற்றில் பறக்கவிடுமாக இருந்தால் அதுதான் இலங்கை என்ற நாடு விடுகின்ற மாபெரும் தவாறக இருக்குமென நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இந்தப் பிழையினூடாக தமிழர்களின் எதிர்ப்பை மாத்திரமல்லாது, முற்போக்கு சிந்தனையாளர்களாக இருக்கும் சிங்கள மக்களினுடைய எதிர்ப்பை மாத்திரமல்லாது, முழு உலகத்தினுடைய எதிர்ப்பையும்...

தியாகி திலீபனின் நினைவு: முள்ளிவாய்க்காலில் இருந்து யாழ். வரை நடைபவனி!

தியாகி திலீபனின் 33ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு முள்ளிவாய்க்காலில் இருந்து நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத் தூபி வரை நடைபயணம் முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த நடைபயணம் தமிழர் தாயக பொது அமைப்புக்கள் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது. இந்நிலையில், நடைபெறவுள்ள நடைபவனியில் தாங்கள் ஒன்றிணைந்து செயற்படவுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட...

பாசிசவாத ஆட்சியை நிரந்தரமாக நிறுவும் முனைப்பில் ராஜபக்ஷ அரசாங்கம்- கஜேந்திரகுமார்

20ஆவது திருத்தச் சட்டத்தினை அமுலாக்குவதன் மூலமாக பாசிசவாத ஆட்சியை நிரந்தரமாக நிறுவும் முனைப்பில் ராஜபக்ஷ அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக தமிழ் மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். 20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழ் மக்களை இணைத்துக்கொண்டு...