Ad Widget

2020 ஆம் ஆண்டுக்கான பொதுப் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன!!

அடுத்த வருடம் ஜனவரி முதலாம் ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை க.பொ.த சாதாரணதர மாணவர்களுக்கு கற்றல் விடுமுறை வழங்கப்படும் என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது. க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் ஜனவரி 18 ஆம் திகதி தொடக்கம் ஜனவரி 27 ஆம் திகதி வரை நடைபெறும். க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக் காலப்பகுதியில்...

சுதந்திரக் கட்சியின் 69ஆவது ஆண்டு நிறைவில் நல்லூரில் வழிபாடு

சிறிலங்கா சுதந்திரகட்சியின் 69ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன. யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புகுழுவின் இணைத்தலைவரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான அங்கஜன் இராமநாதனின் ஏற்பாட்டில் இன்று ( செப்.2) காலை ருத்திராபிஷேகமும் சிறப்பு வழிபாடுகளும் இடம்பெற்றன. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன்...
Ad Widget

கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு – சாதாரணமாக கருத முடியாதென்கிறார் இராணுவத்தளபதி

வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்படுபவர்களிடமிருந்து சமூகத்தில் கொவிட்-19 வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா , கடந்த 24 மணித்தியாலங்களில் 53 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமையை சாதாரணமாகக் கருத முடியாது என்றும் குறிப்பிட்டார். கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி முதல் சமூகத்தில் தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்படவில்லை...

மாணவர்களின் கல்வித் தரத்தையும் ஆளுமையையும் மேம்படுத்தும் பொறிமுறையை உருவாக்கும் பணியில் தமிழ் மக்கள் பேரவை

மாணவர்களின் கல்வித் தரத்தையும் ஆளுமையையும் மேம்படுத்தும் பொறிமுறையை உருவாக்கும் பணியை முன்னெடுத்துள்ளதாக தமிழ் மக்கள் பேரவை அறிவித்துள்ளது. இதற்கான தொடர் திட்டமிடல் செயலமர்வுகளில் கலந்துகொள்ள விரும்பும் அமைப்புகள், கல்வியாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் பேரவையுடன் தொடர்புகொள்ளுமாறும் கேட்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் தமிழ் மக்கள் பேரவை அனுப்பிவைத்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; ஆசிரியர்களின் பெருமுயற்சியுடனும் பெற்றோர்களின் உழைப்பு, ஊக்குவிப்புகளுடனும் மாணவர்களின்...

காணாமற்போனோரின் உறவுகள் யாழ்.நகரில் நடத்திய போராட்டத்தில் பங்கேற்பதில் நடைமுறைச் சிக்கல்கள்!! – சுகாஷ்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணம் நகர மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பமாகி நடைபெற்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொள்ள முடியாமைக்கு சில நடைமுறைச் சிக்கல்களே காரணம் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி விளக்கமளித்துள்ளது. “காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சகல அமைப்புக்களையும் அவர்களது போராட்டங்களை நாம் ஆதரிக்கின்றோம்....

ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித் திட்டம்- இலஞ்சம் வழங்கினால் நிராகரிப்பு

ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் வறுமை நிலையில் உள்ள ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் இன்று (புதன்கிழமை) முதல் ஆரம்பமாவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பல்துறை அபிவிருத்தி செயலணி மூலம் குறைந்த வருமானமுடைய மற்றும் தேர்ச்சி பெறாதவர்களை பொருளாதார ரீதியாக பலப்படுத்துவதே இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த...

100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி – 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக தற்போது காணப்படும் மழையுடனான வானிலை இன்றும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்தோடு, சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு...