2009ஆம் ஆண்டு புலிகளை ஏமாற்றி சரணடையவைத்த றோ!

2009ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி யுத்தத்தின்போது சரணடையும் விடுதலைப் புலிகள் சிறீலங்கா இராணுவத்தினரிடம் ஒப்படைக்கமாட்டார்கள் என இந்தியாவின் றோ அமைப்பு நம்பிக்கை அளித்ததாக நீனா கோபால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ஊடகவியலாளரான நீனா கோபால் எழுதிய ‘ராஜீவ்காந்தி கொலை’ என்ற நூலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

விடுதலைப் புலிகள் 2009ஆம் ஆண்டு மே மாதம் சரணடையும் திட்டத்திலேயே இருந்தனர்.

இதன்போது, சரணடையும் விடுதலைப் புலிகள், சிறீலங்கா அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படாமல், சர்வதேச நாடுகளிடமே ஒப்படைக்கப்படுவார்கள் என இந்தியாவின் றோ அமைப்பானது தொடர்ந்தும் உறுதி மொழி வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த உறுதிமொழியை நம்பி இறுதியில் விடுதலைப் புலிகள் வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்தனர் எனவும் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.

இவ்வாறு சரணடைய வந்தவர்களை சிறீலங்கா இராணுவத்தினர் சுட்டுத் தள்ளினர்.

ஊடகவியலாளர் நீனா கோபால் ராஜீவ்காந்தி குண்டுவெடிப்பில் இறப்பதற்கு சில நிமிடங்கள் முன்னர் அவரைப் பேட்டி கண்டவராவார்.

Recommended For You

About the Author: Editor