2.ஓ மூன்றில் இரண்டு பங்கு படப்பிடிப்பு நிறைவு: ஷங்கர்

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் 2.ஓ படத்தை ஷங்கர் இயக்குகிறார். ரஜினியுடன் அக்ஷய்குமார், எமி ஜாக்சன் நடிக்கிறார்கள்.

shankar-rajini-2-o

350 கோடி ரூபாய் செலவில் லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இது ஏற்கெனவே ரஜினி நடித்து வெற்றி பெற்ற எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம்.

இதன் படப்பிடிப்புகள் சென்னை மும்பை, அமெரிக்கா என பல கட்டங்களாக நடந்துள்ளது. தற்போது சென்னையை அடுத்த திருக்கழுக்குன்றத்தில் நடந்து வருகிறது.

இதுகுறித்து இயக்குனர் ஷங்கர் தனது டுவிட்டரில் “மூன்றில், இரண்டு பங்கு படப்பிடிப்பை 150 நாட்களில் முடித்து விட்டேன்” என்று குறிபிட்டு ரஜினியுடன் பணியாற்றும் படத்தையும் வெளியிட்டிருக்கிறார்.

“ரஜினியின் வேகமும், சுறுசுறுப்பும் முன்பை விட அதிகமாக இருக்கிறது. படத்தின் மீது மிகவும் அக்கறை காட்டுகிறார். அவர் வேகத்துக்கு எங்களால் ஈடுகொடுக்க முடியவில்லை அவர் உடல்நிலை கருதி நாங்கள் ஏதாவது சமரசம் செய்தால் “உடம்பை பற்றி நான் பார்த்துக்கிறேன். நீங்க உங்க வேலையை கரெக்டா செய்யுங்க” என்று கூறிவிடுகிறார். பர்ஸ்ட் லுக் போஸ்டரை நவம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டு வேலை செய்து வருகிறோம். படப்பிடிப்புகள் வருகிற மார்ச் மாதத்துக்குள் நிறைவடையும். அடுத்த வருட தீபாவளிக்கு படம் வெளிவரும்” என்று யூனிட் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Recommended For You

About the Author: Editor