வடமராட்சி கிழக்கு அம்மன் கோவில் பகுதியில் 180 கிலோகிராம் கஞ்சாவுடன் 4 சந்தேகநபர்களை விசேட அதிரடிப் படையினர் வியாழக்கிழமை(02) அதிகாலை 4.30 மணியளவில் கைது செய்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் கூறினர்.
கடல் மார்க்கமாக கேரள கஞ்சாவை கடத்திவந்து இறக்கிக் கொண்டு இருக்கும் போதே நால்வரையும் விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட நால்வரையும் தொடர்ந்தும் தடுத்து வைத்துள்ள விசேட அதிரடிப் படையினர் விசாரணை செய்து வருகின்றனர்.