புகலிடக் கோரிக்கையாளர்களின் சட்டவிரோத படகுப் பயணம் வருந்தற்குரியது: ஆஸி.பிரிதிநிதி

australia_flag-01அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் தேடிச் செல்லும் இலங்கையர்கள், உயிரைப் பணயம் வைத்து சட்டவிரோட படகுப் பயணத்தை மேற்கொள்வது மிகுந்த மனவருத்தத்தை தருகின்றது’ என்று யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் தெற்காசிய பிராந்தியங்களுக்கான ஆலோசகர் மைக்கேல் கில்மன், யாழ். ஆயர் தோமஸ் சௌந்தர நாயகத்திடம் தெரிவித்துள்ளார்.

யாழ் ஆயரைச் சந்தித்து கலந்துரையாடும் போதே இந்த கவலையை அவர் வெளியிட்டுள்ளார்.
‘பெருமளவான பணத்தினை கொடுத்து உயிரைப் பணயம் வைத்து எமது நாட்டுக்கு பெருமளவானர்கள் வருகை தருகின்றார்கள். இவ்வாறு வருபவர்கள் வேறு பகுதியில் வைத்து விசாரணை செய்யப்பட்டு தகுந்த காரணம் இல்லாதவர்கள் உடனடியாக அவுஸ்ரேலியாவில் இருந்து நாடுகடத்தப்படுவார்கள்’ என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

‘இவ்வாறு பெருமளவானவர்கள் அங்கு வருவதற்கு காரணம் என்ன என்று யாழ், ஆயரிடம் மைக்கேல் கில்மன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஆயர், ‘இலங்கைக் கரையோரங்களில் இருந்தே பெருமளவானவர்கள் அவுஸ்திரேலியாவுக்குச் செல்கின்றார்கள்’ என்றார்.

‘இங்கு போதியளவு தொழில் வாய்ப்புக்கள் இல்லாத காரணத்தினால்; அவர்கள் அங்கு செல்கின்றார்கள். குறிப்பாக தற்போது கடற்தொழில் ஈடுபடுவது பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக இந்திய மீனவர்களின் அத்துமீறிய தொழில் நடவடிக்கை காரணமாக இங்குள்ள கடல் வளங்கள் அழிக்கப்பட்டுள்ளதோடு இங்கு கடற்தொழில் மேற்கொள்ள முடியாத நிலை காண்படுகின்றது.

அத்துடன், இங்கு வாழ முடியாத அச்ச உணர்வும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் இன்னமும் நிரந்த தீர்வு கிடைக்கவில்லை. இதனால் தாம் எப்போது கைது செய்யப்படுவோம் விசாரிக்கப்படுவோம் என்ற அச்சத்தின் காரணமாகவும் அவுஸ்ரேலியாவிற்கு செல்கின்றார்கள்’ என்று அவுஸ்ரேலியாவின் தெற்காசிய பிராந்தியங்களுக்கான ஆலோசகரிடம் யாழ் ஆயர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor