மாலைநேர வகுப்பிற்கு சென்ற சிறுவனை காணவில்லையென முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் தெரிவித்தார்.
கரவெட்டி கரணவாய் பகுதியைச் சேர்ந்த கருணாநிதி நிலக்ஷன் (13 வயது) என்ற சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆம் திகதி மாலைநேர வகுப்பிற்கு சென்று வருவதாக கூறிச் சென்ற இவர் இதுவரை வீடு திரும்பவில்லை என சிறுவனின் சகோதரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.