12 வயது சிறுவன் சடலமாக மீட்பு

வரணி, இடைக்குறிஞ்சியிலுள்ள வீடொன்றில் இருந்து 12 வயது சிறுவனொருவரின் சடலம், நேற்று வியாழக்கிழமை (14) காலை மீட்கப்பட்டதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

மனோகரன் தனுராஜ் (வயது 12) என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக அவனது வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளான். வீட்டில் பெற்றோர்களுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அச்சிறுவன் தற்கொலை செய்துகொண்டுள்ளான் என்று ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் மீட்கப்பட்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.