டோகாவிலிருந்து நாடு திரும்பிய யாழ்ப்பாணம் வாசிக்கு கோரோனா!!

டோகா நாட்டிலிருந்து நாடு திரும்பிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த சில தனங்களுக்கு முன்பு டோகாவிலிருந்து நாடு திரும்பிய அவர் அநுராதபுரம் நட்சத்திர விடுதியில் தனிமைப்படுதலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளார்.

கோண்டாவிலைச் சேர்ந்த அவருக்கு கோரோனா வைரஸ் தொற்றுள்ளமை நேற்று மாலை கண்டறியப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோயாளி தற்போது சிகிச்சைக்காக கோரோனா சிகிச்சை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்றும் கூறப்பட்டது.

Recommended For You

About the Author: Editor