பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு வைத்தியர் சத்தியமூர்த்தி அவர்களின் அறிவுறுத்தல்!!

இன்றையதினம் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மற்றும் அதிபர் ஆசிரியர்களுக்கு யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அவர்களால் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தலில்…

பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பெற்றோர்களுக்கு சிறு தயக்கம் கொரோனா அச்சம் காரணமாக. தற்போது எமது பகுதிகளில் சந்தேகத்துக்கிடமானவர்கள் காணப்படவில்லை.

ஆகவே மாணவர்கள் பாடசாலைக்கு செல்லலாம். இருப்பினும் பாடசாலையில் உரிய அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும்.

ஒரு மாணவர் மற்ற மாணவரை தொடுவதை அல்லது மிக அருகில் செல்வதை தவிர்த்து கொள்ளுவது நல்லது.
தேவை ஏற்படும் சந்தர்ப்பங்களில் Face mask இனை அணிந்தால் போதுமானது. துணியினாலான Facemask ஆயின் அவற்றை மிகவும் சுத்தமாக வைத்திருப்பது நன்று.

பாடசாலையில் மாணவர் ஒருவருக்கு காய்ச்சல், தடிமன் போன்ற சிறு வியாதிகள் ஏற்படுகின்றபோது பதட்டப்படாமல் அவரை வீட்டுக்கு அல்லது வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பது நன்று.

மாணவர்களிடையே இந்நோய் பற்றிய விழிப்புணர்வைய தொடர்ச்சியாக வழங்குவதோடு பதற்றமற்ற பாடசாலை சூழலை வைத்திருப்பது மிகவும் முக்கியமானது.

Recommended For You

About the Author: Editor