யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் என்ன நடக்கிறது?: இலங்கை ஆசிரியர் சங்கம் கேள்வி

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் என்ன நடக்கின்றது என இலங்கை ஆசிரியர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சங்கத்தின் தலைவர் அமிர்தலிங்கம் ராசகுமாரனை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் விசாரணை செய்துள்ளது. வவுனியாவிற்கு அழைத்து இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

ஏனைய பல்கலைக்கழகங்களில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மட்டும் கல்வி நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துள்ள நிலைமை மோசமானதாகும்.

பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களை, பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் அடிக்கடி அழைத்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் மாணவர்களும் பேராசிரியர்களும் அச்சமடையச் கூடும்.

அண்மையில் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்யுமாறு பல்வேறு தரப்பினரும் விடுத்த கோரிக்கை உதாசீனம் செய்யப்பட்டுள்ளதாக ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

Recommended For You

About the Author: Editor