இலங்கையில் கொரோனா சமூக தொற்று ஏற்பட்டிருக்குமா? தொற்றுக்குள்ளானவர்கள் பஸ்களின் பயணம் செய்தனராம்!!!

கந்தகாடு புனர்வாழ்வு மையத்தின் ஆலோசகர் மற்றும் மாரவில புனர்வாழ்வு நிலையத்தில் தொற்றுக்குள்ளான பெண் ஆகியோர் பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்தியமை கண்டறியப்பட்டிருப்பதாக தொற்று நோய் பிரிவு தலைவர் கூறியுள்ளார்.

பஸ்களில் பயணித்த குறித்த ஆலோசகருடன் தொடர்புடையோரை கண்டறியும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேபோல் மாரவில் பிரதேசத்தில் கொரோனா தொற்றிற்கு உள்ளான பெண் பயணித்த பேருந்துகளின் விபரங்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி குறித்த பெண் குருணாகலை, மீகமுவ, நாத்தாண்டிய ஆகிய பேரூந்து வழித்தடங்களில் பல பொதுப் போக்குவரத்து பேருந்துகளில் பயணித்திருந்தமை தெரியவந்துள்ளது.இதன்படி பொலநறுவையிலிருந்து குருணாகலை வரையும் பயணித்திருந்த குறித்த பெண் அங்கிருந்து நீர்கொழும்பு பிரதேசத்திற்கும் பயணித்துள்ளார்.பின்னர் அங்கிருந்து தங்கொட்டு வரை பயணித்து நாத்தாண்டிய பிரதேசத்திற்கும் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது

Recommended For You

About the Author: Editor