சுகாதாரப் பாதுகாப்புமிக்க ஆடைகள் தொகுதி கையளிப்பு!!

இலங்கை நடுத்தர மற்றும் சிறிய ஆடை உற்பத்தியாளர்கள் சங்கத்தினால் சுகாதாரப் பாதுகாப்புமிக்க ஆடைகள் தொகுதியொன்று பிரதம அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்த சுகாதாரப் பாதுகாப்புமிக்க ஆடைகள் வைத்தியசாலைச் சேவைகள் சபையின் பணிப்பாளர் சங்கைக்குரிய ரஜவெல்ல சுபுதி தேரர் அவர்களின் ஆலோசனைப்படி கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் அமைச்சர் பந்துல குணவர்தன அவர்கள் மற்றும் இலங்கை நடுத்தர மற்றும் சிறிய ஆடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் பந்துல பிரணாந்து அவர்கள் உள்ளிட்ட குழுவினர் கலந்துக்கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor